அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேர்தல் வியூகம் : கலைஞரை விஞ்சிய ஸ்டாலின் ! விலாவரியாக அலசல் ரிப்போர்ட் !

திருச்சியில் அடகு நகையை விற்க

2026 சட்டமன்றத் தேர்தல் ஆளும் திமுக கட்சிக்கு சவாலான தேர்தல் என்றே சொல்லலாம். மத்தியில் பலமான அதிகார பலத்தை தன் கைவசம் வைத்துக்கொண்டும், ஆளுநர்களை அரசியல் முகவர்களாக மாற்றியும் பல்வேறு மாநிலங்களில் நடத்திய அரசியல் சதுரங்கம் இந்திய அரசியல் இதுவரை கண்டிராத ஒன்று.

அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்திக்கொள்வதன் வழியே, எப்படியாவது பாஜகவின் அரசியல் செல்வாக்கை தமிழகத்தில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமென்ற மூர்க்கத்தில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது என்பதும் தமிழகம் இதுவரை கண்டிராததுதான். ”இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்ற ஜெ.வின் அரசியல் முழக்கத்தை, அப்படியே “இலை மலர்ந்தால், தாமரை மலரும்” என்பதாக மாற்றிக்காட்டியிருக்கிறார்கள் அமித்ஷா – அண்ட் கோ.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அமித்ஷா
அமித்ஷா

புறவயமான இத்தகைய போக்குகளையெல்லாம் அவதானித்த திமுக, இந்த முறை ஓராண்டுக்கு முன்னதாகவே தனது தேர்தல் பணியை துவங்கிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், “திமுகவின் பிரச்சார பீரங்கி” என்று ஆளுநரை சுட்டும் அளவுக்கு, அவரது அடாவடிப்போக்கு ஒவ்வொன்றுக்கும் எதிராக அரசியல் தளத்தில் துணிந்தே அடித்து ஆடியது திமுக.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - MMM TRICHY -

ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா போன்றவர்களை உடன் வைத்துக்கொண்டு தீட்டப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றும் திமுகவை பொறுத்தமட்டில் அரசியல் முன்னெடுப்புகள்தாம். இலவசம் என்றும் கவர்ச்சிகர திட்டங்கள் என்றும் எவறாலும் எளிதில் உதாசீனப்படுத்திவிட முடியாத அளவுக்கு அவை எளிய மக்களிடத்திலும் சென்று சேர்ந்திருக்கிறது.

அடுத்து, தமிழகத்தில் பூத் லெவல் வரையில் அமைப்பு ரீதியான கட்டமைப்புடன் இயங்கிவரும் பிரதான கட்சி என்ற பாரம்பரியம் இருந்தாலும், அதில் கூடுதல் முனைப்பை காட்டியிருக்கிறது திமுக தலைமை.

ஓராண்டுக்கு முன்னர் தங்களது தேர்தல் பணியை துவங்கியபோது, தமிழகத்தில் இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,000. அந்த ஒவ்வொரு பூத்துக்கும் பூத் ஏஜெண்ட்களான பிஎல்ஏ2 நிர்வாகிகளை முறையாக நியமித்திருந்தது. அதுவே, எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பிறகு, 75,000 பூத்களாக உயர்ந்திருக்கிறது. புதியதாக உருவாக்கப்பட்ட பூத்களுக்கும் பி.எல்.ஏ-2 நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு அவை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது.

இதற்கு அடுத்து, மண்டல வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து, ஒவ்வொரு தொகுதி வாரியாக மைக்ரோ அளவில் கவனம் செலுத்தத் தொடங்கியது, திமுக தலைமை.

முக்கியத்துவம் வாய்ந்த பணியான, மண்டல பொறுப்பாளர்களாக யாரை நியமிக்கலாம் என்பதையும் ஒருமுறைக்கு இருமுறை கலந்தாலோசித்து இறுதியாக, ஆ.ராசா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, சக்ரபாணி, தங்கம் தென்னரசு, கனிமொழி ஆகியோரை மண்டல பொறுப்பாளர்களாக நியமித்தது.

ஆ.ராசா
ஆ.ராசா

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதன் நோக்கம், அந்தந்த மண்டலத்தின் கீழ் அமைந்த தொகுதிகள் ஒவ்வொன்றின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை கண்டறிந்து அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டும். களப்பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்பதே. ஒவ்வொரு தொகுதி குறித்தும் விலாவரியான முழுமையான ரிப்போர்ட்டை கையில் வைத்துக்கொண்டு, மண்டல வாரியாக பி.எல்.ஏ-2 மாநாடுகளை தொடர்ச்சியாக திமுக தலைமை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக, அந்தந்த மண்டலங்களின் கீழ் வரும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் முன்மொழிவை வழங்கும் பொறுப்பை மண்டல பொறுப்பாளர்கள் வசம் அளித்தது. அவர்களும் தொகுதிக்கு மூன்று நபர்கள் வீதம் தங்களது வேட்பாளர் தேர்வு பட்டியலை திமுக தலைமையிடம் அளித்திருக்கிறார்கள். இதில், விதிவிலக்காக சென்னை, திருவள்ளூர் மாவட்ட மண்டல பொறுப்பாளரான ஆ.ராசா, தனக்கும் இந்த மண்டலத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை என்று சொல்லி, அந்த பொறுப்பை திமுக தலைவரிடம் தள்ளிவிட்டார்.

திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்ட பொறுப்பாளரான கே என் நேரு கொடுத்த பட்டியலின் அடிப்படையில் தான் இந்த மாவட்டங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீரங்கம், துறையூர் ,லால்குடி உள்ளிட்ட தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றத்திற்கும் இதுதான் காரணம். திருச்சி கிழக்கைப் பொறுத்தவரை நிச்சயமாக விஜய் போட்டியிடுவார் என்று திமுக தலைமை எதிர்பார்த்ததால் நேருவே இனிகோவை பரிந்துரைத்திருக்கிறார். தலைமை எதிர்பார்ப்பு அது தான் என்பது அவருக்கும் தெரியும்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கரூர் தொடங்கி நீலகிரி வரையிலான மேற்கு மாவட்டங்களின் பொறுப்பாளரான செந்தில் செந்தில் பாலாஜி குறிப்பாக கோவை திருப்பூர் மாவட்ட வேட்பாளர்களை தேர்வு செய்ததுடன், அவரே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவருடைய சொந்த மாவட்டமும் கடந்த முறை அவர் போட்டியிட்டதுமான கரூர் தொகுதியில் தியாகராஜன் என்பவரை களமிறக்கியிருக்கிறது திமுக தலைமை. செந்தில்பாலாஜி இடத்தில் களமிறங்கும் தியாகராஜன் யார் என்ற கேள்விதான் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை தூண்டியது. செந்தில்பாலாஜி சார்பில் நடத்தப்படும் அறக்கட்டளைகளின் பொறுப்பை வகிப்பவர்தான் இந்த தியாகராஜன். பொதுமக்களிடம், குறிப்பாக கொங்கு வேளாளர் சமுதாயத்தினரிடத்தில் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது. செந்தில்பாலாஜிதான் தனக்கு பதில், தியாகராஜனை களத்தில் இறக்கியிருக்கிறார்.

மேற்கு மண்டலத்தில் ஈரோடு மாவட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. சென்னை மண்டலத்தை பொருத்தவரை அதன் மண்டல பொறுப்பாளர் ஆ ராசா திமுக தலைவரிடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டதால், அந்த மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர்களின் தேர்வு பட்டியல் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்து இருக்கிறார் மு க ஸ்டாலின். இந்த அடிப்படையில்தான், தாம்பரம், காஞ்சிபுரம், பல்லாவரம், திருவொற்றியூர், எழும்பூர், வில்லிவாக்கம், திருவி.க.நகர், அண்ணா நகர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர் மாற்றத்திற்கும் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதற்கும் அந்தந்த மாவட்ட செயலாளர்களின் பரிந்துரையே காரணமாக இருந்திருக்கிறது.

அப்போதும்கூட, “மாவட்ட செயலாளர் என்ற முறையில் உங்கள் பரிந்துரையை மதிக்கிறேன். நீங்கள் சொல்லும் வேட்பாளர் வெற்றி பெறாவிட்டால் உங்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை” என்று கறாராக சொல்லித்தான் பட்டியலை இறுதி செய்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

எப்போதும்போல, வேட்பாளர் அறிவிப்பின்போது சில சலசலப்புகளும் போர்க்கொடி உயர்த்துவதும் கட்சியை விட்டு விலகுவதும் வாடிக்கையானதுதான். ஆனால், இந்தமுறை நிச்சயமான வெற்றியை உத்தரவாதப்படுத்தும் வேட்பாளர்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கறார் காட்டியிருக்கிறது தலைமை.

இதன்வழியே, சில விடயங்களை தனது தொண்டர்களுக்கு கடத்தியிருக்கிறது. ஒன்று, என்னதான் தனித்திறமைகளை கொண்டிருந்தாலும், தனிப்பட்ட செல்வாக்கை வைத்திருந்தாலும் மா.செ.க்களை – சீனியர்களை மதிக்காதவர்களுக்கு அவர்களோடு முரண்பட்டு நிற்பவர்களுக்கு தலைமையின் ஆதரவு இல்லை என்பது. அடுத்து, கட்சியில் சீனியர், கலைஞர் காலத்தில் அப்படி, இந்த திறமைக்கு சொந்தக்காரன் என்பது போன்ற பழைய பஞ்சாங்கங்களுக்கு எல்லாம் இனி இடமில்லை. ”கட்டி வா என்றால் வெட்டி வரக்கூடியவர்களாக” களப்பணியில் துடிப்போடு இயங்குபவர்களுக்கே கட்சியில் முக்கியத்துவம் என்பதை குறிப்பால் உணர்த்தியிருக்கிறார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

—     அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.