தேர்தலுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு ! மறுத்தால் கடும் நடவடிக்கை !
தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநர் (பொறுப்பு) இரா.ராஜசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஏப்ரல் 9-ந் தேதியும், தமிழகத்தில் ஏப்ரல் 23-ந் தேதியும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 23}ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 29-ந் தேதியும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையொட்டி திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள் அவர்களது வாக்குகளை செலுத்தும் வகையில் தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், வாக்களிப்பதன் அவசியத்தையும் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது திருச்சி மாவட்டத்தில் இணைய இயக்குநர் ராஜசேகரனை 0431-2420235, 98654 64256 ஆகிய எண்களிலும், துணை இயக்குநரை 96883 14216 என்ற எண்ணிலும், உதவி இயக்குநரை 94898 15304 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
கரூர் மாவட்டத்தில் துணை இயக்குநரை 04324 – 245499, 96883 14216 ஆகிய எண்களிலும், உதவி இயக்குநரை 70103 21669 என்ற எண்ணிலும், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் துணை இயக்குநரை 04329 – 222654, 98409 47465 ஆகிய எண்களிலும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.