அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அமித்ஷா சொன்னது சரிதான்! ராகுல்காந்தி ‘பப்பு’ தான்!

திருச்சியில் அடகு நகையை விற்க

2026 ஜனவரியிலிருந்தே “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, பனைமரத்துல நொங்கு” என கூவ ஆரம்பித்தன தமிழ்நாடு காங்கிரஸில் உள்ள சில கோட்டான்கள். “எங்களுக்கு ஏகப்பட்ட சோலி கிடக்குய்யா…” என லெஃப்ட்டில் டீல் பண்ணியது திமுக. சரி,  அந்த கோட்டான்கள் யாரு…? வேற யாரு… பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கிரிஷ் சோடங்கர், கே.சி.வேணுகோபால்  போன்றவர்கள் தான். இந்த கோட்டான்களின் குரல் குயிலின் குரல் போல இனித்தது ராகுலுக்கு.

அடுத்து ”மதுரை வடக்கு தொகுதியை வாங்கலேன்னா தூக்குல தொங்கலாம்” என மாணிக்கம் தாகூர் வீரவசனம் பேசினார். அப்பவும் கம்முன்னு இருந்தார் ராகுல்.  “போங்கப்பா…யேய்…போய் ஓரமா விளையாடுங்கப்பா. தொகுதிக்கு ரெண்டாயிரம் பேர் இருந்துக்கிட்டு இந்த காங்கிரஸ்காரய்ங்க பண்ற இம்சை தாங்க முடியல” என பொளந்துகட்டினார் மதுரை வடக்கு திமுக எம்.எல்.ஏ.கோ.தளபதி.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அதற்கடுத்து தவெக தலைமைத் தற்குறியைச் சந்தித்துப் பேசினார் பிரவீன் சக்கரவர்த்தி.  “இதெல்லாம் ஒரு பொழப்பு?” என உதறித்தள்ளியது திமுக. “இரண்டு மாசமா கத்திக்கிட்டிருக்கோம், அறிவலாயத்தையே சுத்தி வந்திக்கிட்டிருக்கோம். ஆனா திமுக தலைமை கண்டுக்கவேமாட்டேங்குது” என கதறியழுதார் கிரிஷ் சோடங்கர். “எங்களுக்கு ஏகப்பட்ட சோலி கிடக்குய்யா” என பதிலடி கொடுத்தார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருந்து காய்களை நகர்த்தினார்கள் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவருமான செல்வப்பெருந்தகையும். இதனால் ஆத்த்திரமானது கோட்டான்கள். ப.சி.மீதும் செல்வப்பெருந்தகை மீதும் பாய்ந்து பிராண்டின. அப்போதும் கம்முன்னு இருந்தார் ராகுல்.

இந்தியா கூட்டணியின் வலிமைமிக்க தலைவரான ஸ்டாலினின் நிதானமான அணுகுமுறை, அரசியல் முதிர்ச்சி, மென்மையான போக்கு..இதையெல்லாம்  பார்த்து மேலும் டென்ஷனானார்கள் கோட்டான் குரூப்புகள்.

ஒருவழியாக திமுகவுடன் கூட்டணியை இறுதி செய்து 28 தொகுதிகளுக்கு உடன்படிக்கை கையெழுத்தாகப் போகும் நிலையில் ஹைதராபாத்தில் தான் இருந்தார் ராகுல்காந்தி. அப்போதும் சரி, உடன்படிக்கை கையெழுத்தான பிறகும் சரி, ராகுல் காந்தியிடமிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

தொகுதி உடன்படிக்கை ஏற்பட்டு, காங்கிரசுக்கு  எந்தெந்த  தொகுதிகள் என பட்டியல் வெளியான பின்பு, ”திமுகவிடம் விலை போய்விட்டார் செல்வப்பெருந்தகை” எனக் கூவினார் ஜோதிமணி.  தேர்தல் பணிக்குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்.   ‘தவெகவுடன் போயிருந்தால் தடபுடல் விருந்து சாப்பாடு கிடைத்திருக்கும். ஸ்டாலினோ ரெண்டு தோசையும் ரெண்டு இட்லியும் தான் கொடுத்திருக்கார்” என இப்போது வரை கூவிக் கொண்டிருக்கிறார் பிரவீன் சக்கரவர்த்தி. அதுமட்டுமல்ல, “காங்கிரசின் மேலிடத் தலைவர்களின் அனுமதியுடன் தான் ஆறு மாசமா விஜய்யுடன் பேசி வருகிறேன்” என்பதையும் இப்போது சொல்லி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார் பிரவீன் சக்கரவர்த்தி.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பிரவீன் சக்கரவர்த்தி  - விஜய்
பிரவீன் சக்கரவர்த்தி – விஜய்

இட்லி, தோசை கதையை பிரவீன் சக்கரவர்த்த்தி சொன்ன மறுநாள் தான் நெல்லையில் “தமிழ்நாடு காங்கிரசில் விலை போனவர்கள் தான் திமுகபக்கம் நிற்கிறார்கள். உண்மையான காங்கிரஸ்காரர்கள் என் பக்கம் நிற்கிறார்கள்” எனப் பேசியிருக்கிறார் தவெக விஜய்.

இப்போதும் இது குறித்து வாயே திறக்கவில்லை ராகுல்காந்தி. விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஆதரவாக ட்விட் போடத் தெரிந்த ராகுல்காந்தியால் இதுக்கு ட்விட் போடத் தெரியலையா? கோட்டான்களின் அக்கப்போர்களையெல்லாம் புறம்தள்ளிவிட்டு வெற்றிக் கூட்டணியை உருவாக்கிய   திமுக தலைவருக்கு நன்றி சொல்லி ட்விட் போடத் துப்பில்லையா? அட அதாவது போய்த் தொலையுதுன்னு விட்ரலாம். மூன்று நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் காலையில் பிரச்சாரம் பண்ண வந்த ராகுலுக்கு மாலையில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் பண்ண வர்றாருங்குறது கூடத் தெரியாதா? இப்ப வரை தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் பண்ணுவது குறித்து எந்தத் திட்டமும் ராகுல்காந்திக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இருவரின் பிரச்சாரம் குறித்து செல்வப்பெருந்தகையாலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. பிரியங்கா காந்தியும் பிரச்சாரத்திற்கு வருவாரான்னு தெரியல.

ஆனா ஒண்ணு மட்டும் தெரியுது. தவெகவுடன் கூட்டணி வைக்க முடியலையேங்கிற கடுப்பு மட்டும் ராகுல்காந்திக்கு இருக்குன்னு தெரியுது.

பீகாரில் ராகுல் காந்தியை நோக்கி அமித்ஷாவின் 'குஸ்பெடியா பச்சாவோ யாத்ரா'  ஸ்வைப் - இந்தியா டுடே”அரசியலில் ராகுல்காந்தி ஒரு ‘பப்பு’. அதாவது சின்னப் பையன் விளையாட்டுப் பையன்” என்றார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அது சரி தான்னு இப்பத் தான் தெரியுது.

பாராளுமன்றத்தில் வீராவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசினால் மட்டும் போதும். பிஜேபியை வீழ்த்திவிடலாம் என குருட்டு நம்பிக்கையில் உள்ளார் ராகுல்காந்தி. மக்கள் மன்றத்திற்கு வந்து இறங்கி அடிக்காத வரை காங்கிரசால் பிஜேபியை ஒன்றுமே செய்ய முடியாது.

கோட்டான்களையும் கருங்காலிகளையும் வளர்த்துவிட்டுக் கொண்டே இருந்தால் காங்கிரசின் பேரழிவைத் தடுக்கவே முடியாது.

—   கரிகாலன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.