கேள்வி கேட்க பட்டம் பெற அவசியம் இல்லை – சுந்தர் சி விளக்கம் !
மதுரை ஞான ஒலிவபுரம் பகுதியில் NDA கூட்டணி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் நடிகர் சுந்தர் சி தேர்தல் அலுவலகத்தினை திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
நான் கேட்கும் கேள்விகளுக்கு பிடிஆர் பதில் இருந்தால் பதில் சொல்லி இருப்பார் 10 ஆண்டுகளாக அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நிதி அமைச்சராக இருந்த அவர் மத்திய தொகுதியில் மோசமான சாலைகள், கழிவுநீர் பிரச்சனை, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு முறையான கழிவறை வசதிகூட ஏற்படுத்தி தரவில்லை அறிவு இருக்க எந்த மனிதனும் கேட்ககூடிய கேள்விதான் நான் கேட்ட கேள்வி அமைச்சர் பி டி ஆர் அவருடைய அறியாமையை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். உங்களுக்கு முடியவில்லை என்றால் நல்ல வேட்பாளரை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் என பி டி ஆர் எங்களுக்கு ஆதரவாகவே பேசி உள்ளார்.
கேள்வி கேட்பதற்கு அமெரிக்க சென்று பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை சிறு குழந்தைகூட கேட்கும் மத்திய தொகுதியில் அடிப்படை பிரச்சனை இல்லை என எல்லாவற்றிலும் சுத்தமானவர் என கூறுபவர் மதுரை வளர்ச்சிக்கு அவரை செயல்பட விடாமல் நிர்பந்திப்பது யார் என்று வெளிப்படையாக கூற வேண்டும்.
ஐயா நாங்கள் உங்களைபோல மெத்த படித்தவர்கள் கிடையாது நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவன் வெளிப்படையாக காரணத்தை சொல்லவில்லை என்றால் போட்டியில் இருந்து ராஜினாமா பண்ணுங்கள் மதுரை வளர்ச்சிக்கு உங்களை செயலாற்ற விடாமல் தடுக்கிறார்கள் என்றால் அப்போது ஏன் அந்த கட்சியில் வேட்பாளராக நிற்கிறீர்கள் அமைச்சருக்கு கை சுத்தம் வாய் என்று கூறுகிறார்கள்.
ஆனால் அவரை சுற்றி உள்ளவர்கள் யாரும் சுத்தம் கிடையாது அப்புறம் எப்படி அவர் சுத்தமானவராக இருக்க முடியும் மதுரை மாநகராட்சியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. அதுவும் அவர்கூட இருப்பவர்கள்தான் அதை செய்துள்ளனர். சினிமாக்காரர்களை விமர்சனம் செய்யும் உதயநிதி எங்கிருந்து வந்தார் ?
அவர்கள் வைக்கும் விமர்சனமெல்லாம் ஆள்காட்டி விரலை பார்த்து அவர்களை அவரே கேட்டுக் கொள்வது போலத்தான் என்றார்.
— ஷாகுல், படங்கள் :ஆனந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.