அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தன்முனை கவிதைகளின் பிதாமகன் கா.ந.கல்யாணசுந்தரம் …!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தெலுங்கு வடிவ நானிலு அமைப்பிலிருந்து தழுவி தமிழில் தன்முனைக்கவிதைகள் எனப்பெயரிட்டு, ஒரு வரிக்கு அதிகபட்சமாக மூன்று வார்த்தைகள் என நான்கு வரிகளில் 12 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதப்படவேண்டும் என்பது உள்ளிட்டு குறுங்கவிதைகளுக்கு தனியே வரையறைகளை வகுத்து அறிமுகம் செய்தவர் முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம்.

உலகம் முழுவதும் இலக்கிய தளத்தில் பயணிப்பவர்களை ஊக்குவித்து, தன்முனைக்கவிதைகள் படைக்க ஆதரவளித்து வருகிறார். இந்த பின்னணியில், இலங்கைக்கு இலக்கிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் யாழ் பாணத்து தன்முனைக் கவிஞர்களுக்கு தன்முனைக்கவிக்கோ விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

HARINI JEWELLERS TRICHY

ஜாப்னா டில்கோ விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து நிகழ்வில் பங்கேற்று, கவிஞர்கள் மா.ஞானசம்பந்தன், யாழிசை தடாகம் நிறுவனர் உடுவிலூர் கலா, தயாளனி சிவநாதன் சிவநாதன் ஆகியோருக்கு தன்முனைக் கவிக்கோ விருதுகளை வழங்கினார்.

விழாவில் கவிஞர்கள் யாழ்பாவாணன் உள்ளிட்டு ஈழத்துக் கவிஞர்கள் பலரும் பேரார்வத்தோடு பங்கேற்றனர். தன்முனை கவிதைகளின் பிதாமகனார் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள் பேசுகையில், ”இலங்கைக் கவிஞர்கள் பெருமளவில் அமெரிக்க முத்தமிழ்ப்பல்கலை கழகத்தில் தன்முனை பட்டயப்படிப்பு படித்து பட்டயம் பெற்றுள்ளது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

தன்முனைக்கவிதைகள் குழுமத்திற்கு பெருமை” என்பதாக சுட்டிக்காட்டினார். மேலும், நுவரெலியாவில் கவிஞர் லோகேஸ்வரன் முனைவர் கா.ந. கல்யாணசுந்தரத்திற்கு நினைவுப்பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.