எம்ஜி ஆரும் விஜய்யும்…!
திமுக 1948 இல் திராவிட இயக்க கழகத்திலிருந்து பிரிந்து வந்து 1967இல் ஆட்சியைப் பிடித்தார்கள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் அவர்கள் காங்கிரஸ் எதிர்த்து மாநிலத்தில் அரசியலை நடத்தி வந்தார்கள். பிற்படுத்தோர் இட ஒதுக்கீடு ஆகட்டும், இந்தி திணிப்புக்கெதிரான மொழிப் போராட்டம் ஆகட்டும்… திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணி என்பது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது ! மிகவும் போற்றுதலுக்குரியது. அந்த இயக்கத்திலும் எம்ஜி ஆர் அவர்கள் மக்களை ஈர்க்கும் ஒரு சினிமா நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் அனுபவம் பெற்று வரும் ஒரு இரண்டாம் கட்ட தலைவராக இருந்தார்.
1967இல் எம்ஜி ஆர் மருத்துவமனையில் இருந்த பொழுது “அண்ணாதுரை இராமச்சந்திரா வா உன்னுடைய திருமுகத்தை ஒரு முறை காட்டிவிடு அதுவே நீ செய்யும் மிகப்பெரிய பரப்புரையாகும்” என்று கூறினார்.அப்பொழுது திமுகவில் அண்ணாதுரைக்கு அடுத்து அன்பழகன், நெடுஞ்செழியன், மதியழகன், கருணாநிதி என்விஎன் நடராசன், சி பி சிற்றரசு, ஆசைத்தம்பி, சத்தியவாணி முத்து என்று பல இரண்டாம் கட்ட தலைவர்களும் மற்றும் பல தமிழ் அறிஞர்களும் இருந்தார்கள்.
ஆனால் தன்னை எம்ஜிஆர் ஆக எண்ணிக் கொள்ளும் விஜய் கட்சியில் மிகப்பெரிய அரசியல் அறிஞர்களான புஸ்ஸி ஆனந்தும், லாட்டரி சீட்டு ஆதவ் அர்ஜுனாவும் இருக்கிறார்கள்! இதை விட்டால் வாச்சாத்தி புகழ் செங்கோட்டையனும் அயிட்டம் டான்ஸர் நாஞ்சில் சம்பத்தும் இருக்கிறார்கள். இவர்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்சியை ஆரம்பித்து ஒரே வருடத்தில் ஆட்சியைப் பிடிக்க கனவு காணும் விஜயின் தவெக என்பது தமிழகத்தின் அரசியலில் ஒரு இழிவான கறையாக மாறி இருக்கிறது.
இப்பொழுது திமுகவின் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால் என்பது தொகுதி மறு சீரமைப்பின் போது அவர் நடத்தப் போகும் போராட்டமே ஆகும். அவ்வாறு ஒரு போராட்டம் நடத்தப்படும் பொழுது அதை தமிழகத்தின் மிகப்பெரிய போராட்டமாக மாற்ற வேண்டிய கடமை அனைத்து கட்சியினருக்கும், தமிழர்களுக்கும் இருக்கிறது.
-எம்.எஸ்.ராஜகோபால்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.