தரைக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது….
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலை கோட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே வெஸ்ட்ரி பள்ளி அருகில் நீண்ட காலமாக 30க்கும் மேற்பட்டோர் தரைக்கடை நடத்தி வருகிறார்கள். பொன்மலை கோட்ட மாநகராட்சி உதவி ஆணையர் எந்த அறிவிப்பு செய்யாமல் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கடைகளை அகற்றியதற்கு சி. ஜ. டி. யு. மாவட்ட குழு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
சாலையோர வியாபாரிகள் 2014 சட்டப்படி கடைகளை அகற்றுவதற்கு வெண்டிங் கமிட்டியில் பேசி முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களை வியாபார நலனை உறுதிபடுத்திடும் வகையில் மாற்று இடம் ஏற்பாடு செய்த பிறகுதான் எடுக்க முடியும் மாநகராட்சி வியாபார கழக உறுப்பினரும் தரைகடை சங்க மாவட்ட செயலாளருமான செல்வி நேரிடையாக உதவி ஆனையரிடம் கடை எடுக்க கூடாது வெண்டிங் கமிட்டியில் பேசாமல் எடுக்ககூடாது என ஆட்சேபனை தெரிவித்ததை அலட்சியபடுத்தியுள்ளார்.
எனவே அனைத்து சட்ட விதிமுறைகளை மீறி கடைகளை அப்புறபடுத்திய நடவடிக்கைளை கைவிட வேண்டும்.கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் இல்லாத பட்சத்தில் இதர பகுதி வியாபாரிகளையும் திரட்டி கடைபோடும் போராட்டம் வெகுவிரைவில் நடத்தப்படும் என்பதை சி. ஜ. டி. யு. மாவட்டகுழுசார்பாக தரைகடை சங்கம் சார்பாக தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு சிஐடியு மாவட்ட செயலாளர். ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.