அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அரசு மருத்துவமனையில் குளு குளு வசதியுடன் சிறப்பு வார்டு…!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டின்கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் வெப்பம் பதிவாகி வருகின்றன.

நேற்றைய தினம் திருச்சியில் 105 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கடும் வெப்பத்தால் ஏற்படும் கொப்பளம்,உடல் சோர்வு, மயக்கம்போன்றவற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள மூன்றாவது தளத்தில் 12 படுக்கை வசதிகளுடன் இந்த சிறப்பு வாடு தயார் செய்யப்பட்டுள்ளது இதில் குளு குளு  ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குளுக்கோஸ் போன்றவை வைப்பதற்கு பிரிட்ஜ் வசதி செய்யப்பட்டுள்ளது. உடலில் இருக்கும் சூட்டை குறைக்க குளிர்ச்சியாக குளுக்கோஸ் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனை டீன் குமரவேல் வரும்போது வெப்ப அதிகரிப்பால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது இதன் காரணமாக வெப்ப வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீர்ச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு ஓ ஆர் எஸ் கரைசல் வழங்கப்படுகிறது மேலும் வெயில் அதிகமாக இருக்கும் பகல் 1 1 மணி முதல்

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் குறிப்பாக கர்ப்பிணிகள் குழந்தைகள் முதியவர்கள் இந்த நேரத்தில் வெளியில் செல்லக்கூடாது நீர் சத்து நிறைந்த தர்பூசணி வெள்ளரி மோர் ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும் தவிர்க்க முடியாமல் வெளியில் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் பருத்தி ஆடைகள் அணிந்து செல்லும்போது குடை பிடித்து செல்வது நல்லது மசாலா உணவுகளை தவிர்த்து நீர் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

வெப்ப வாதம் ஏற்பட்டால் முதலில் அவர்களின் ஆடைகளை தளர்த்த வேண்டும் மயக்கமாக இருக்கும்போது வாயில் தண்ணீர் ஊற்றக்கூடாது உடல் சூட்டை குறைப்பதற்கு முகத்தில் ஈரத் துணியால் துடைக்கலாம் இது போன்று முதலுதவிக்கு பிறகு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். சிறப்பு வாடு குருசாதன வசதியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.