கல்வியில் சிறந்தது என்றால்  நான் எப்படி நம்புவேன் ?

திரை நாயகனுக்கு

விசில் அடித்த கூட்டம்…

விசில் அடித்து நாடாள வைத்த

அறிவிலி கூட்டம்…

  • கல்வியில் சிறந்ததாம் தமிழ்நாடு ….

இதை இன்னும் நம்ப சொல்கிறார்கள்….

கூத்தாடி சொத்துக்கள் பல கோடி …..

அதை கட்டிக் காக்கவே …

இப்போது அரசியலை நாடி….

  • திராவிடத்தால் விழுந்தோம்

என்று பொய்யுரைத்து….

ஊழல் ஒழிப்பு கொள்கை

என்று சூளூரைத்து…

கூட்ட நெரிசலில்

ரசிகனை பலி கொடுத்து….

சினிமா வசனங்களை

மேடையில் உதிர்த்து….

எழுதிக் கொடுத்ததை

பார்த்து படித்து….

அரசியல்வாதியாய்

நிஜத்தில் நடித்து…

கூமுட்டைகளாய்

உங்களை நினைத்த…

நடிகனிடம் நாடாள

கொடுத்த தமிழ்நாடே…

நீ கல்வியில் சிறந்தது என்று

எப்படி நான் நம்புவது……

  • •••••
  • தாகமா இருக்கு

தண்ணி கொடும்மா…

இறுதியாய் கேட்ட மகனுக்கு

கொடுக்க தண்ணீர் இல்லை….

தொண்டை வறண்டு

சலசலத்து போன மகனை

அள்ளி மண்ணில் புதைத்தது….

மறந்து போன தமிழ்நாடே…..

கூட்டத்தில் மிதிபட்டு

செத்துக்கிடந்த மகன்…

தேடி அலைந்து… கண்டெடுத்த தாய்….

வலி சுமந்து ஈன்றெடுத்த தாயை…

பிண வறையில்

அடையாளம் காட்டிய மகன்….

எத்தனை எத்தனை

மரண ஓலங்கள்….

அத்தனையும் மறந்த தமிழ்நாடே…..

  • தற்குறி, அறிகுறி , ஆச்சரியக்குறி….

என்று பேசி….

பகுத்தறிவற்ற குப்பை

மூளைகளை உருவாக்கி….

முளைத்துவிட்டது

தமிழ் மண்ணில் விஷச்செடி….

  • •••••••
  • மனுதர்மமே அரசமைப்பாய் மாற….

சனாதானமே அதிகாரம் ஏற….

அரிதாரம் பூசி ஆட வைத்த….

கழிசடை நாயகனை

அரியணையில் அமரச் செய்த….

தமிழ்நாடே ….நீ கல்வியில்

சிறந்தது என்றால் எப்படி நம்புவது…..

  • மக்கள் பணத்தில் கல்வி கற்று….

இட ஒதுக்கீட்டில் உயர்கல்வி சென்று….

அரசு திட்டத்தில் வேலை பெற்று….

அத்தனை சலுகையும் அனுபவித்துவிட்டு….

சினிமா போதை தலைக்கேறி…

பாசிச அடிமையை

அதிகாரத்தில் ஏற்றி…..

தனக்குத் தானே

குழியை தோண்டிக்கொண்ட….

தமிழ்நாடு கல்வியில் சிறந்ததாம்…

இன்னும் நம்பச் சொல்கிறார்கள்….

  • ••••••••••
  • ஒரு வாய்ப்பு,

மாற்றம், திராவிடம் வேண்டாம்…..

என்பதற்காக…..

இந்து வெறி உள்ளே நுழைய…..

ஒரே தேசம் ஒரே மொழி

சட்டமாய் மாற….

சாதியே உயர்வானது

என்று பாடங்கள் மாற….

பிறப்பின் அடிப்படையில்

இனி மக்கள் சாக…

அரசை கேள்வி கேட்டால்

சிறைவாசம் நாட….

போராடினால்

கொலையும் செய்ய….

உரிமைகள் கேட்டால்

வீடுகளை இடிக்க…

விரும்பியதை உண்ண

தடை போட….

காதலித்தால் வெட்டிக்கொல்ல….

இனி அத்தனையும் சட்டமாய் மாற….

வாய்ப்பளித்த தமிழ்நாடே….

நீ கல்வியில் சிறந்தது என்றால்

நான் எப்படி நம்புவேன் ?

—  செ.கார்க்கி

Comments are closed, but trackbacks and pingbacks are open.