திருச்சி திருவெறும்பூரில் 12 வயது சிறுமி மாயம் – நடந்தது என்ன ?

0

திருச்சி திருவெறும்பூரில் 12 வயது சிறுமி மாயம் – நடந்தது என்ன ? திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே 12 வயது சிறுமி காணாமல் போய்விட்டதாகவும், போலீசு நிலையத்தில் புகார் அளித்தும் 12 நாட்களாக எந்த ஒரு நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்பதாகவும் காணாமல் போன அந்தச் சிறுமிக்கு என்ன ஆனதோ? ஏது ஆனதோ? என்று தெரியாமல் அச்சிறுமியின் தாயார் தவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

கோயம்புத்தூரைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், மணப்பாறை நடுப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருவெறும்பூர் செல்வபுரத்தில் வசித்து வந்ததாகவும்; இதற்கிடையில் ராஜ்குமார் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவே, கணவரிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டதாகவும்; இந்நிலையில் தனது மகளை கடந்த மே-18 ஆம் தேதியிலிருந்து காணவில்லை என்றும் காணாமல் போனது ஏழை வீட்டு பெண் குழந்தை என்பதால்தான் போலீசார் அலட்சியம் காட்டுவதாகவும் மகளை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க மகேஸ்வரி முறையிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

சிறுமி கர்ப்பம்
சிறுமி

இந்நிலையில், சென்சிட்டிவான இந்த விவகாரம் தொடர்பாக உண்மை நிலை என்ன என்பது குறித்து, திருச்சி மாவட்ட போலீசார் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

அதில், ”கடந்த சில நாட்களாக திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, செல்வபுரம் பகுதியில், சிறுமி வயது 12, த.பெ. ராஜ்குமார் என்ற சிறுமி காணாமல் போனது குறித்து, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சரிவர நடவடிக்கை மேற்கொள்ளவில்லையென வந்த செய்தி தொடர்பாக கீழ்காணும் உண்மை நிலவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

கடந்த 18.05.2024-ஆம் தேதி காலை மேற்படி சிறுமி வயது 12, த.பெ. ராஜ்குமார், செல்வபுரம், திருவெறும்பூர் என்பவர், தனது பாட்டியிடம் டியூசன் சென்று வருவதாகக் கூறிச்சென்றவர் திரும்ப வராதது குறித்து அவரது தாயார் மகேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில், 19.05.2024-ஆம் தேதி திருவெறும்பூர் காவல் நிலைய குற்ற எண்-199/24, ச/பி. சிறுமி காணவில்லை என வழக்கு பதிவு செய்து மேற்படி சிறுமியை தேடிவந்துள்ளனர்.

திருவெறும்பூரில் 12 வயது சிறுமி மாயம்
திருவெறும்பூரில் 12 வயது சிறுமி மாயம்
4 bismi svs

இந்நிலையில், 20.05.2024-ஆம் தேதி இவ்வழக்கில் காணாமல் போன சிறுமி அபிராமி, தனது தாயும், பாட்டி அமுதாவின் கொடுமையை தவிர்க்க வேண்டி தனது அப்பாவுடன் செல்வதாக 18.05.2024-ம் தேதியிட்ட தனது கைப்பட கடிதம் எழுதி திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தபாலில் அனுப்பியுள்ளார்.

அதேபோல் மகேஸ்வரியின் கணவரான ராஜ்குமார் என்பவரும் தனது மனைவியின் நடத்தை சரியில்லாததால் தான் வெளியேறிவிட்டதாகவும், தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது மகளை அழைத்து செல்வதாகவும் 18.05.2024-ம் தேதியிட்ட கடிதம் எழுதி திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தபாலில் அனுப்பியுள்ளார்.

மேலும் 18.05.2024-ம் தேதி 14.20 மணிக்கு திருவெறும்பூர் காவல் நிலைய அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, காணாமல் போன சிறுமி தான் பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணலிருந்து (7845902124) தனது தந்தையுடன் செல்வதாக தகவல் கூறியுள்ளார். இத்தகவலை அன்று நிலைய பாராவிலிருந்த முநிகா.1217 திரு.மணிகண்டன் என்பவர் மேற்படி அழைப்பு விவரத்தை காவல் ஆய்வாளருக்கு தெரிவித்துள்ளார்.

20.05.2024-ஆம் தேதி மனுதாரரான மகேஸ்வரியை நிலையத்திற்கு வரவழைத்து சிறுமி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் கைப்பட எழுதிய கடிதத்தினை காண்பித்து, அது அவர்களுடையது தான் என உறுதி செய்யப்பட்டது. மேலும் சிறுமியானவர் காணாமல்போகவில்லை, அவரது சொந்த விருப்பத்தின்பேரிலேயே தனது தந்தையுடன் சென்றுள்ளார் என்பதையும் வாதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், வாதி மகேஸ்வரி, மேற்படி ராஜ்குமாருக்கு இரண்டாவது மனைவி ஆவார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10.01.2021-ம் தேதி முதல் இருவரும் பிரிந்து வாழந்து வருகிறார்கள். மேலும், திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு எண்-DVC-19/22-ன்படி வழக்கு-இன்படி நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.

ஆகையால் சிறுமி காணாமல் போகவில்லை எனவும், அவரது தந்தையுடன் சொந்த விருப்பத்தின்பேரிலேயே சென்றுள்ளார் எனத்தெரியவருகிறது. தற்போது, மேற்படி சிறுமி தனது தந்தையுடன் எங்கு தங்கியுள்ளார் என்பதை குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

– அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.