கரூர் கந்து வட்டிக் கும்பலின் அட்டூழியத்துக்கு ”ஆப்பு” வைத்த கல் உடைக்கும் தொழிலாளி !

0

கரூர் கந்து வட்டிக் கும்பலின் அட்டூழியத்துக்கு ”ஆப்பு” வைத்த கல் உடைக்கும் தொழிலாளி ! கரூர் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது கந்துவட்டிக் கொடுமைதான். சிறியதும் பெரியதுமாக ஆயிரக்கணக்கான கந்துவட்டி கும்பல்களின் மையமாக மாறியிருக்கிறது. குடிசைத் தொழிலைப்போல, பத்துக்கு பத்து அறை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வெறும் பத்தாயிரத்தை மட்டுமே வைத்து பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்கும் அளவுக்கு கந்துவட்டித் தொழில் கொழிக்கும் நகரம் கரூர்.

உரிய தவணையில் வெறும் ஐநூறு ரூபாய் கட்டவில்லை என்றால்கூட, கையில் இருக்கும் செல்போனை பறித்துக் கொண்டு செல்வதும்; வீட்டிலிருக்கும் டி.வி., மிக்சி, உள்ளிட்ட பொருட்களை பிணையமாக ‘லவட்டிக்’ கொண்டு செல்வதிலும் திறமையானவர்கள் கரூர் கந்துவட்டிக் கொள்ளையர்கள்.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

ஆயிரம் ரூபாய் பாக்கிக்காக, தெருவே வேடிக்கை பார்க்கும் அளவுக்கு அசிங்கமாக பேசுவதாகட்டும்; ஆளை தூக்கிக்கொண்டு போய் பைனான்ஸ் ஆபீசில் வைத்துக் கொண்டு பேரம் பேசுவதாகட்டும் நாலாந்தரமான செயல்களுக்கு பெயர்போனவர்கள். மனிதாபிமானமும் ஈவு இரக்கமும் அற்ற இந்த கும்பலின் அட்டூழியத்தால் உயிரை மாய்த்துக்கொண்டவர்களின் பட்டியல் நீண்டது.
இந்தக் கந்துவட்டிக் கும்பலின் அட்டூழியத்தை எதிர்த்து பேசவே தனி மன தைரியம் கட்டாயம் வேண்டும்.

எந்தவொரு அடித்தளமும் பின்புலமும் இல்லாமல் இவர்களை எதிர்ப்பதென்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனாலும், ஒரு கல் உடைக்கும் தொழிலாளி அசைத்துப் பார்த்திருக்கிறார். கடினமான பாறையின் நடுவே, வகையான ஆப்பு ஒன்றை இறக்கி வைத்திருக்கிறார். கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞமான தமிழ் ராஜேந்திரன் பக்கபலமாக இருந்து உதவி வருகிறார்.

- Advertisement -

என்ன நடந்தது என்ற கேள்வியை வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரனிடம் அங்குசம் சார்பில் முன்வைத்தோம். “கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தேவர்மலை ஊராட்சி சீதாப்பட்டி ஊரில் வசிக்கும் இராமன் என்பவர் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கரூரில் பேருந்து நிலையம் எதிரில் இயங்கி வரும் பைவ்ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் 12.07.2017 அன்று மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.

மேற்படித் தொகையில் மேற்படி வங்கி மேலாளர் நாற்பதாயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு ஆவணச் செலவு என்று 35 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி 2 லட்சத்து 75 ஆயிரம் மட்டும் கடன் கொடுத்துள்ளனர். மேற்படி கடன் தொகையை 31.12.2020 தேதிக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.

வழக்கறிஞர்கள் தமிழ் ராஜேந்திரன் - தீபன் குமார்
வழக்கறிஞர்கள் தமிழ் ராஜேந்திரன் – தீபன் குமார்
4 bismi svs

ஒவ்வொரு மாதமும் தவணைத் தொகையாக ரூ.10,355 வீதம் 60 மாதங்களாக செலுத்தியதில் மொத்தமாக 6 லட்சத்து 21 ஆயிரத்து 300 ரூபாய் மேற்படி இராமன் பைவ் ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளார், இராமன்.
இடையில் கொரோனா பாதிக்கப்பட்ட காலத்தில் மேற்படி இராமன் தவணைத் தொகையை செலுத்த தயாராக இருந்தும் மேற்படி பைவ் ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் மூடப்பட்டிருந்ததால் தவணைத் தொகைகளை செலுத்த முடியவில்லை.

பின்பு விடுபட்ட தவணைகளை ராமன் செலுத்த சென்ற பொழுது இடையில் தவணை செலுத்தவில்லை என்று சொல்லி வட்டி வீதத்தை உயர்த்தி அரசாங்கம் கொரோனா காலத்தில் அறிவித்த சட்ட திட்டங்களை பின்பற்றாமல் மேலும் 1,07,868 ரூபாய் செலுத்தினால் தான் கணக்கு முடிக்கப்படும் என்று சொல்லி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தனர்.

எங்களது கவனத்திற்கு வந்ததையடுத்து, இராமன் பெயரில் கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிமன்றத்தில் புகார் அளித்தோம். ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகையுடன் கணக்கை முடித்துக் கொண்டு மனுதாரர் எதிர் மனுதாரர் நிறுவனத்திடம் கொடுத்து வைத்துள்ள பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை திருப்பி தர உத்தரவிடுமாறும்; மேலும் கடன் வசூல் ஏஜெண்டுகளை அனுப்பி அடிக்கடி மிரட்டி தொந்தரவு கொடுத்ததற்காக மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய் 4 லட்சம் எதிர்மனுதாரர்கள் தர வேண்டும் என்ற பரிகாரம் கேட்டு தமிழ் இராஜேந்திரனாகிய நானும் எனது நண்பரும் வழக்கறிஞருமான தீபன் குமார் ஆகியோர் பெயரில் வழக்காக தாக்கல் செய்திருந்தோம்.

கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்

புகாரை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழக்கு எண் 98/2024 என்ற எண்ணில் வழக்கை 31/05/2024 இன்று கோப்பில் எடுத்து 01/07/ 2024 அன்று புகார் மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு பைவ் ஸ்டார் பிசினஸ் மற்றும் பைனான்ஸ் நிறுவனத்துக்கு அழைப்பாணை அனுப்பி உள்ளது.

நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய பொதுமக்கள் இவ்வாறு சட்ட விரோதமாக செயல்படும் நிதி நிறுவனங்கள் மீது நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்து தீர்வு பெறலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்” என்பதாக தெரிவிக்கிறார், வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன்.

கந்துவட்டிக் கும்பலின் அட்டூழியங்களை, நுகர்வோர் நீதிமன்றத்தின் வழியிலும் எதிர்த்து வழக்குப் போடலாம் என்ற முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறார் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன். அவர் முன்னெடுத்திருக்கும் சட்டப்போராட்டம் கந்துவட்டிக் கும்பலால் பாதிக்கப்பட்ட சாமானியர்களுக்கு புதுத்தெம்பை தந்திருக்கிறது என்றால் மிகையல்ல!

– ஆதிரன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.