எட்டு நாட்கள் ஏகப்பட்ட அவஸ்தை … மறக்க முடியாத அனுபவங்களை கொடுத்த ‘இன்ப’ச்சுற்றுலா !

2

எட்டு நாட்கள் ஏகப்பட்ட அவஸ்தை … மறக்க முடியாத அனுபவங்களை கொடுத்த ‘இன்ப’ச்சுற்றுலா !

என் ஆயுசுக்குள் எப்படியாவது, “ வரலாற்று சிறப்புமிக்க அந்த இடத்திற்கு சென்று வந்துவிட வேண்டும். பிரசித்தி பெற்ற கோயில் குளங்களை சுற்றிவிட்டு வந்துவிட வேண்டும்.” என்பதாக ஒவ்வொருவருக்கும் அவரவர் வசதி வாய்ப்புக்கேற்ற சுற்றுலா கனவுகள் இருக்கும்.

https://businesstrichy.com/the-royal-mahal/

ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்சி
ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்சி

முன் பின் சென்று வந்த அனுபவமோ, அறிமுகமோ இல்லாத வெவ்வேறு மாநிலங்களில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு தனிப்பட்ட முறையில் சுற்றுலா செல்வதென்பது சிக்கலான விஷயம். அடுத்து, செலவுபிடிக்கும் விவகாரம். இந்த நடைமுறைச் சிக்கலை தவிர்க்கும் வகையில், குழுவாக சுற்றுலா அழைத்து செல்வதற்கென்றே செயல்படும் சுற்றுலா நிறுவனங்களை சார்ந்து தங்களது சுற்றுலா திட்டத்தை வகுத்துக் கொள்கின்றனர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

பொதுவில் இதுபோன்ற, சுற்றுலா அனுபவங்கள் மனதை விட்டு விலகாத நீங்கா நினைவுகளை கொண்டதாக அமைந்திருக்கும். எத்தனை ஆண்டுகள் கழித்து அசைபோட்டாலும், இன்பமயமான மலரும் நினைவுகளாக கண்முன் விரியும்.

ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்சி
ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்சி

அதுவே, ”அட ஏன்தான் கிளம்பி வந்தோமோ?” என்று வெறுப்பையும் சலிப்பையும் ஒருசேர தந்த எதிர்மறை அனுபவமாகிவிட்டால் என்ன செய்வது? அப்படிப்பட்ட ஒரு மோசமான அனுபவத்தை விவரிக்கிறார்கள், திருச்சியை சேர்ந்த அரசியல்வாதியான குடமுருட்டி சேகரும், ஒய்வுபெற்ற மின்வாரிய அதிகாரியுமான முத்துவும்.

தமிழகத்தில் குறிப்பிட தகுந்த சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்களுள் ஒன்று, மதுரையை தலைமையிடமாகக் கொண்ட, “ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்சி.” இந்த நிறுவனம் சார்பில், உள்நாட்டு சுற்றுலா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாவும் அழைத்து செல்கிறார்கள். இதற்கென தனித்தனியே பேக்கேஜ்களும் அறிவிக்கிறார்கள்.

”காஷ்மீர் – வைஷ்ணவதேவி” 7 இரவுகளை உள்ளடக்கிய 8 நாள் பயணத்திட்டமாக வடிவமைத்திருக்கிறார்கள். முதல்நாள் முதல் கடைசிநாள் வரையில் எங்கே தங்குவது? எங்கெல்லாம் செல்வது? என்பது குறித்து, மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது பயணத்திட்ட அறிவிப்பு.

மறக்க முடியாத ‘இன்ப’ச்சுற்றுலா !
மறக்க முடியாத ‘இன்ப’ச்சுற்றுலா !

“ஆனால், அவர்கள் சொன்னதுபடி எதையுமே செய்யவில்லை. எட்டுநாளும் மிகுந்த மன வேதனைக்குள்ளானோம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் ஐயாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரையில் செலவாகியிருக்கிறது. சென்றமுறை நன்றாக திட்டமிட்டிருந்தார்கள். இந்தமுறை ரொம்பவும் சொதப்பிவிட்டார்கள். இது ஒரு மோசமான அனுபவம்.” என்பதாக குறிப்பிடுகிறார், ஒய்வுபெற்ற மின்வாரிய பொறியாளரான முத்து.

பொறியாளரான முத்து.
பொறியாளரான முத்து.

“காஷ்மீருக்கு சுற்றுலா அழைத்துப் போகிறோம்; த்ரீ ஸ்டார் ஹோட்டலில் தங்குவதற்கு வசதி தருகிறோம்; மூன்று வேளை சிறப்பான உணவு தருகிறோம்” என்றெல்லாம் சொல்லி அழைத்து வந்த முருகன் டிராவல்ஸ் முதல் நாளே பல்ளித்து விட்டது.

தங்குவதற்கு அவர்கள் கைகாட்டிய அறையில் என் வீட்டில் வேலை செய்பவர்களை கூட நான் தங்குவதற்கு அனுமதிக்க மாட்டேன் என்கிற அளவில்தான் அதன் சுத்தம் – ஹைஜீனிக் இருந்தது. அதற்காக சண்டை போட்டு “தரமான ஒரு ரூமை கொடுங்கள்; த்ரீ ஸ்டார் ஹோட்டல் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்ட பிறகு, கூடுதலாக 1700 ரூபாய் கட்டினால் தான் அறை தர முடியும் என்று மொழி தெரியாத இடம் தெரியாத இடத்தில் தமிழனாகிய என்னை ஒரு தமிழ்நாட்டு நிறுவனமாகிய ஸ்ரீ முருகன் டிராவல்ஸ் கொண்டு வந்து நிறுத்தி பணம் பிடுங்குகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

குடமுருட்டி சேகர்
குடமுருட்டி சேகர்

காலையில் ஹோட்டலில் தரும் காம்ப்ளிமென்ட்ரி பிரேக்ஃபாஸ்ட்டை தான் தருவதாக சொல்லி தருகிறது முருகன் டிராவல்ஸ். அந்த ஓட்டல் காரரோ ‘ரெண்டே ரெண்டு ஆலு பரோட்டா தான் தருவேன். அதற்கு மேல் கிடையாது’ என்று மிரட்டுகிறார். இப்படி சோத்துக்கு பிச்சை எடுக்கவா இங்கே வந்தோம்.

மதிய உணவு 120 ரூபாய்க்கு இவ்வளவு தான் தர முடியும் என்று ஹோட்டல் காரர் சொல்கிறார். கூடுதலாக காய்கறி கூட்டு வேண்டுமென்று கேட்டாலும் அதற்கு கூடுதலாக பணம் கட்ட சொல்கிறார்கள் ஹோட்டல் காரர்கள்.

இதுவரை நான் போன எல்லா டூரிலும் நாம் பயணம் செய்யும் வாகனத்திலேயே தண்ணீர் பாட்டில்கள் மட்டும் எண்ணிக்கை இன்றி இருக்கும் . எத்தனை வேண்டுமானாலும் எடுத்து குடித்துக் கொள்ளலாம். இந்த முருகன் டிராவல்ஸ் இந்த பயணத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட தரவில்லை. நம்மால் நினைத்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி வாங்கவும் முடியவில்லை. ” என்பதாக தனக்கு நேர்ந்த வேதனைகளை விவரிக்கிறார், திமுகவைச் சேர்ந்த அரசியல் பிரமுகரான குடமுருட்டி சேகர்.

”எங்களது குழுவில் மொத்தம் 25 பேர் சென்றோம். போகும்போதும் சரி, திரும்ப வரும் போதும் சரி அடுத்தடுத்து இரண்டு விமானத்தில் டிக்கெட் போட்டிருந்தார்கள். இரண்டு மணி நேர இடைவெளியில் அடுத்த விமானத்தில் வரும் உறவினர்களுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.

காலை, இரவுக்கு நூறு ரூபாயும் மதிய உணவுக்கு 120 ரூபாயும்தான் கம்பெனி ஏற்றுக்கொள்ளும். அதற்குமேல் சாப்பிடும் உணவுகளுக்கு நீங்கள்தான் பணம் கட்டியாக வேண்டும் என்றார்கள். இந்த எட்டுநாளில், இரண்டு முறை தொடர்ந்து 22 மணி நேரங்களுக்கு பேருந்திலேயே பயணிக்க வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார்கள்.

சுற்றுலா... விவரம்
சுற்றுலா… விவரம்

இடையில் எங்கேனும் நிறுத்தி சில மணிநேரம் ஓய்வு எடுப்பதுபோல் திட்டமிட்டிருந்திருக்கலாம். குழந்தைகள், வயதானவர்கள் எப்படி இவ்வாறு பயணிக்க முடியும்? கடைசி நாளுக்கு முந்தைய நாள் நள்ளிரவு 3 மணிக்கு ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்தார்கள். காலை ஒன்பது மணிக்கெல்லாம் அந்த அறையை காலி செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள். ஊருக்கு திரும்ப செல்வதற்கான விமானமோ, அன்று இரவு 10.45 –க்குத்தான்.

அதுவரை நாங்கள் எங்கே தங்குவது? கேட்டால், உள்ளூரில் நாலைந்து இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்புங்கள் என்று அலட்சியமாக பதில் சொன்னார்கள். வேறுவழியில்லாமல், ஆளுக்கு 1200 போட்டு ஒரு டிராவல்ஸ் வண்டி பிடித்து, டெல்லியை சுற்றிப் பார்த்துவிட்டு விமான நிலையத்தை வந்தடைந்தோம்.

இதில் கொடுமை என்னவென்றால், 25 பேரும் அவரவர்களுக்கான பிளைட்டை பிடித்து ஊர் வந்து சேர்ந்தீர்களா? என்று இன்றுவரையில் விசாரிக்கவே இல்லை. டூர் கிளம்பும்போதே, போக – வர பிளைட் டிக்கெட் புக் பண்ணி மெசேஜ் அனுப்பியதோடு கடமை முடிந்தது என்று நினைத்துவிட்டார்கள் போல.

மொத்தத்தில் இந்த எட்டு நாளில் எங்கள் கைக்காசு மட்டுமே ஆள் ஒன்றுக்கு எட்டாயிரத்திற்கும் மேல் செலவாகியிருக்கும். எல்லாமே அந்த கம்பெனி பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில், வெறும் இரண்டாயிரத்தோடு வந்திருந்தால் என்ன நிலைமை ஆகியிருக்கும்? ” என கேள்வி எழுப்புகிறார், முத்து.

இந்த குளறுபடிகள், சேவைக்குறைபாடு தொடர்பான புகார் குறித்து விளக்கம் அறிய, “ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்சியின் தலைமை அலுவலகமான மதுரை தொடர்பு எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். இருமுறை அழைத்தும் நமது அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை.

திரும்பவும் அவர்களாகவும் அழைக்கவுமில்லை. அவரவர் வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ற வகையில் லோ பட்ஜெட் , எலைட் என பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை வைத்திருக்கும் இந்த நிறுவனம் பயணத்திட்டத்திற்கு முன்னரே இந்தந்த வசதிகள்தான் கிடைக்கும் இந்த தரத்தில்தான் கிடைக்கும் என்பதை முன்னரே தெளிவுபடுத்தியிருந்தால் இந்த சிக்கல் எழுந்திருக்காது என்கிறார்கள்.

இந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனம் என்றில்லை, இதுபோல சுற்றுலாவை மையப்படுத்தி இயங்கிவரும் டிராவல் ஏஜென்சிகள் பொறுப்புணர்வுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.

– மித்ரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

2 Comments
  1. T வெங்கடேசன் says

    நாங்கள் இதைவிட மோசமாக அனுபவித்தோம் இவர்களிடம் . அமர்நாத் யாத்திரை போது.பயணிஒருவர் வழியில் மரணமடைந்தார் வாகனத்தில் அவரைக் கொண்டு வர ஒரு உதவியும் செய்யவில்லை.தனிநபர் விமானத்தில் கொண்டுவர பட்டபாடு கண்ணில் நீர் வடிந்தது முருகன் டிராவல்ஸ் மோசம்
    .

  2. C R selva says

    எனக்கும் கூட சென்ற ஆண்டு சிம்லா குலு மணாலி டூரில் இதேபோல் மோசமான அனுபவம் ஏற்பட்டது. சென்னை சீனிவாசா டூரிஸ்ட் மூலமாக சென்றதில் பெறும் அவஸ்த்தை. ஒரே ஆறுதல் சமையல் ஆள் கூடவே வந்தார். மற்றபடி கைடு, பஸ் எல்லாம் பெறும் அவஸ்த்தை.

Leave A Reply

Your email address will not be published.