ஒரு இயக்குனர் நடிகரானார்!
‘நெல்லை சந்திப்பு’, ‘உத்ரா’ படங்களை இயக்கியவரும் விஜயகாந்த்தின் மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமான ‘சகாப்தம்’ படத்தின் கதாசிரியருமான நவீன் தற்போது நடிகராக களம் இறங்கியுள்ளார்.
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான,

‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் யோகி பாபு காம்பினேஷனில் படம் முழுக்க வரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
“கோழிப் பண்ணை செல்லதுரையில் நடிக்கும் போது இயக்குனர் சீனுராமசாமி நல்ல குணச்சித்திர நடிகராக வலம் வருவீர்கள் என என்னை வாழ்த்தியது மறக்க முடியாது” என்கிறார் நவீன்.

தொடர்ந்து எழில் இயக்கும் ஒரு புதிய படம், வேல் குமரேசன் இயக்கும் , ‘வசூல் மன்னன்’, ரிஷிராஜ் இயக்கும் ‘காட்டான்’ போன்ற படங்களில்
நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகரான இயக்குனர் நவீன்.
— மதுரை மாறன்.