உதயமானது ! மோசடி நியோமேக்ஸ் குழும நிறுவனங்களுக்கு எதிரான சட்டப் போராட்டக் குழு !
உதயமானது நியோமேக்ஸ் குழும நிறுவனங்களுக்கு எதிரான சட்டப் போராட்டக் குழு ! நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து, போட்ட பணத்தை திரும்பப் பெற முடியாமல் தவித்து வரும் பலரும் பல வித கருத்துக்களோடு பிரிந்துக் கிடக்கிறார்கள்.
இவர்களுக்கிடையே நிலவும் ஒற்றுமையின்மையை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமன்றி, ஒத்தக் கருத்தில் அனைவரும் ஒன்றிணைந்துவிடாத வகையில் தந்திரமான பல காரியங்களை நியோமேக்ஸ் நிர்வாகம் தரப்பில் செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
வீடியோ லிங்

வாய்ஸ் ஆஃப் லா வழக்கறிஞர் அழகர்சாமியின் வழிகாட்டுதலில் இயங்கிவரும் தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில், முன்னெடுக்கப்படும் 5ஏ செட்டில்மெண்ட் நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாகவே அமைந்திருப்பதாகக்கூறி, அவர்களுடன் இணைந்து செயல்பட விரும்பாதவர்கள்.
குறிப்பாக, பணமாகவே வேண்டும் அதுவும் முன்னரே வாக்களித்தபடி முதிர்வுத்தொகையுடன் செட்டில்மெண்ட் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் விடாப்பிடியாக இருப்பவர்கள் தற்போது ஒரு குழுவாக ஒருங்கிணைந்திருக்கிறார்கள்.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் நைச்சியமான பேச்சை நம்பியும்; நயவஞ்சகமான மிரட்டலை கண்டு அஞ்சியும் இதுவரை புகார் கொடுக்கக்கூட முன்வராதவர்களே இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். ”நியோமேக்ஸ் நிறுவனத்தை பகைத்துக்கொண்டு செட்டில்மெண்ட் பேச முடியாது. அவர்களை சிறையில் பிடித்து போட்டால் பணம் வராது.

அவர்களை அரவணைத்து பேசி நமக்கான காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும்” என்ற கண்ணோட்டத்தில்தான் இந்த விவகாரத்தை இதுவரை பலரும் அணுகி வந்திருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் தகிடுதத்தங்களை நுட்பமாக விளக்கி தொகுத்து சொல்லியிருக்கிறார், சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி. அவரது சட்டரீதியான வாதங்களால் ஈர்க்கப்பட்டவர்கள், அவரது கருத்துக்களோடு ஒத்துப்போகிறவர்கள் அவரோடு இணைந்து இந்த புதிய குழுவை உருவாக்கியிருப்பதாக சொல்கிறார்கள்.
”நியோ மேக்ஸ் குழும நிறுவனங்களுக்கு எதிரான சட்டப் போராட்ட குழு” என்பதாக இப்புதிய ஒன்றிணைவுக்கு பெயர் சூட்டியிருக்கும் அவர்கள், கடந்த ஆகஸ்டு-8 அன்று மதுரை டி.ஆர்.ஓ. வை நேரில் சந்தித்து தங்களது தரப்பு நிலைப்பாட்டை நேரடியாக அவரிடமே தெரிவித்திருக்கிறார்கள்.
இதுவரை, ”டி.ஆர்.ஓ. அப்படி சொன்னார், இப்படி சொன்னார். அவரிடம் நாங்கள் பேசி சரிகட்டியிருக்கிறோம்.” என்பதாகவெல்லாம் சிலர் பேசிவந்த நிலையில், நியோமேக்ஸ் விவகாரம் தொடர்பாக டி.ஆர்.ஓ.வின் அணுகுமுறை என்ன? என்பதைப் பற்றியும் அவரோடு நடத்திய விவாதங்களிலிருந்து வெளிப்படுத்தியிருக்கின்றனர், இக்குழுவினர்.
”கொக்கின் தலையில் வெண்ணெயை தடவி பின்னர் கொக்கைப் பிடிக்கப்போவதாக சொல்லும் சிலரின் தந்திரங்களின் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உறுதியான சட்டப்போராட்டம்தான் சரியான தீர்வாக அமையும் என்று திடமாக நம்புகிறோம்.
இந்த கருத்தோடு உடன்படுபவர்கள் நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம்.” என்கிறார், இப்புதிய குழுவைச் சேர்ந்த அங்கத்தினர் ஒருவர்.”நியோ மேக்ஸ் குழும நிறுவனங்களுக்கு எதிரான சட்டப் போராட்ட குழு”வின் நோக்கம் என்ன என்பது குறித்து, அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த விவகாரங்கள் குறித்து தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

அதில்,
1. ரியல் எஸ்டேட் நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டு, நிதி நிறுவனம் போல் செயல்பட்ட நியோ மேக்ஸ் குழும நிறுவனங்களில் டிபாசிட் செய்து, அதை திரும்ப பெற இயலாமல் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள், டிபாசிட் செய்த திட்டத்தின் படி அதற்கான பலனுடன் (benefit) பணமாக திரும்ப பெறுவது என்ற ஒத்த கருத்துடையவர்களின் பிரதிநிதிகள் பலர், 08/08/2024 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒன்று கூடி மதிப்பிற்குரிய மதுரை மாவட்டம் வருவாய் அலுவலர் அவர்களை சந்தித்து, எங்களுடைய கோரிக்கையான, ஊக்கத் தொகையுடன் கூடிய டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தோம்.
2. அதை பெற்றுக் கொண்ட DRO அவர்கள், அவர்களுக்குரிய அதிகாரங்களின் படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி கூறினார்கள்.
3. சட்டம், உயர் நீதி மன்ற உத்தரவு மற்றும் இதுவரை நிதி மோசடி பிரச்சினைகளில் தீர்வு காண, DRO அலுவலகம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் நடைமுறைகளை தான், எங்கள் அலுவலகம் செய்து கொண்டிருக்கிறது. அதாவது EOW சொத்துக்களை கண்டறிந்து, அவற்றை முறையாக கைப்பற்றி, அதற்குரிய அரசானைகளை உரியவர்களிடமிருந்து பெற்று, எங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
அதை முறையாக ஏலம் விட்டு பணமாக்கி, அதை வங்கி கணக்கில் வரவு வைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமாக பிரித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம் அதில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை என கூறினார்கள்.

4. ”விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக, ஒரு தரப்பினர் நிலமாக செட்டில்மென்ட் வேண்டும் என உங்களிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு நீங்கள் சம்மதித்திருப்பதாகவும்” செய்தி வருகிறது என நாங்கள் கேட்டதற்கு, ”செட்டில்மென்ட்டை நிலமாக கொடுப்பதற்கு முடிவு எடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை.
அதைப்பற்றி சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சட்டத்தில் இல்லாத ஒன்றை என்னால் செய்ய இயலாது. நிலமாக செட்டில்மென்ட் வேண்டும் என்பவர்கள், சிறப்பு சலுகை வேண்டும் என்று கேட்டு, நீதி மன்றத்திற்கு சென்று, அதற்கான உத்தரவை பெற வேண்டும்.
நிலமாக செட்டில்மென்ட் வேண்டும் என கேட்பவர்களுக்கு நிலமாக கொடுத்து விடுங்கள் என்று நீதி மன்றம் எனக்கு உத்தரவை பிறப்பித்தால் தான், நான் அந்த உத்தரவை அமல்படுத்த இயலும். என்னிடம் செட்டில்மென்ட்டை நிலமாக கொடுங்கள் என யாரும் கேட்பதை நான் பரிசீலிக்க இயலாது ”என DRO அவர்கள் கூறிவிட்டார்கள்.
5. பணமாக செட்டில்மெண்ட் வேண்டும் என்பவர்களுக்கு செட்டில்மென்ட் செய்து கொடுக்க கால தாமதம் ஆகும். அதற்கு நிறைய வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதுள்ளது. இருந்தாலும் அது பிரச்சினைகள் இல்லாத ஒரு செட்டில்மென்ட் ஆக அமையும் என்பதை மவுனமாக DRO அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
6. நிலமாக வேண்டும் என்பவர்களுக்கு விலை மதிப்பு மிக்க நிலங்களை கேட்டாலும் கொடுத்து விடுவீர்களா? என கேட்டதற்கு, நீதி மன்ற உத்தரவு அப்படி இருந்தால் அதை நான் கடைப்பிடைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பதில் கூறினார்கள். அப்படியெல்லாம் செய்தால் அதில் பாகு பாடு ஏற்படுமே என கேட்டதற்கு, அதற்கு நான் ஒன்றும் செய்ய இயலாது எனக் கூறிவிட்டார்.

ராமமூர்த்தி.
தரமான நிலங்களை, நிலம் கேட்பவர்களுக்கு செட்டில்மென்ட் ஆக கொடுத்து விட்டால், அதன் பின் பணம் வேண்டும் என்பவர்களுக்கு பல ஊர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விலை குறைவான நிலங்களை கண்டறிந்து அதை கைப்பற்றி ஏலம் மூலமாக விற்று பணமாக்கி செட்டில்மென்ட் கொடுக்க இயலுமா என கேட்டதற்கு அதைப் பற்றி நீதி மன்றம் தான் ஆலோசிக்க வேண்டும், அதை உறுதி செய்வது என்னுடைய பொறுப்பல்ல எனக் கூறிவிட்டார்.
7. நிலமாக செட்டில்மென்ட் பெறுவதில் ஒரு தலை பட்சம் மற்றும் பாகுபாடு அதிகமாக இருக்கும் என்பதாலும் அதனால் பல சட்ட சிக்கல்கள், சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அது தானாகவே தடை பட்டுப் போகும். அதனால், மேலும் கால தாமதம் ஆகும் என்பதாலும் பொதுவாக அது பாதிக்கப்பட்டவர்களுக்கு பல வகைகளில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதாலும், பணமாக செட்டில்மென்ட் பெறுவதே சிறந்தது என்று முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான முயற்சியில் ஏற்படும் தடைகளை ஆக்கப்பூர்வமாக எதிர்கொண்டு, விரைவில் பணமாக செட்டில்மென்ட் பெறுவதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் சட்ட பூர்வமாக போராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
8. முறையான செட்டில்மென்ட் என்றால், அதை பணமாகத்தான் கொடுக்க வேண்டும். இது தான் இதுவரை அரசு கடைப்பிடித்து வந்த முறை. நிலமாக செட்டில்மென்ட் வேண்டும் என்பவர்கள் தான் நீதி மன்றத்தை நாட வேண்டும். இதன் மூலம் நிலம் வேண்டும் என்பவர்கள் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்துக் கொண்டு பணமாக செட்டில்மென்ட் வேண்டும் என்பவர்களுக்கு துரோகம் விளைவிக்கிறார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

(நிலமாக கேட்பவர்களுக்கு நிலமாகவும், பணமாக கேட்பவர்களுக்கு படமாகவும் வாங்கிக் கொடுப்போம் எனக் கூறுபவர்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் செட்டில்மென்ட் வாங்கித்தர இயலாது மற்றும் பணம் கேட்பவர்களுக்கு எப்பொழுது செட்டில்மென்ட் முடித்து கொடுக்க இயலும் என்பதற்கு பதில் கூற இயலாதவர்கள் அவர்களை நம்பி இருப்பவர்களுக்கு ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொன்றில் சுண்ணாம்பு வைப்பதையும் உணர்ந்து கொண்ட பெரும்பாலோர் அணி மாற தயாராகி விட்டதை புரிந்து கொள்ள முடிகிறது).
எல்லோருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் பணமாக செட்டில்மென்ட் என்பதே சிறந்தது என ஒத்த கருத்துடன் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக நீதி மன்றம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதை தக்க சமயத்தில் திறம்படச் செய்து, அதற்கான செலவுகளை அனைவரும் பகிர்ந்து கொள்வது என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
9. பணமாக செட்டில்மென்ட் கேட்பவர்களுக்கு செட்டில்மென்ட் கொடுத்து முடித்த பின் தான், நிலமாக செட்டில்மென்ட் கேட்பவர்களுக்கு செட்டில்மென்ட் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்பதை நீதி மன்றம் வாயிலாக உறுதி செய்து கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை துரிதமாக செய்து முடிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.
How to contact this new group or Sivskasi Mr.Ramamoorthi? Anybody can help me?
இந்த குழுவில் இணைய யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?
நியோமேக்ஸ்ல எப்படி இனைந்தீர்கள் அதேபோல அவர்களை வைத்து அருமையாக இணையலாம்.
சிவகாசி ராமமூர்த்தி தரப்பினர் சொல்வதில் முழு உடன்பாடு எனக்கும் உள்ளது. சிலர் அறியாமையில் முதன் முதலாக 5A settlement என்ற நடைமுறையை, இதுவரை யாரும் செய்யாத ஒன்றை neomax நிறுவனம் செய்து தனது நேர்மையை நிரூபணம் செய்து உள்ளது என மாநாடு போட்டு உறுப்பினர்களுக்கு தகவல் தருவது தவறு. இந்த செய்தியை படித்த பின் தெளிவாக தெரிகிறது நிலமாக தருவது DRO மூலம் இயலாது, அது சிறப்பு செயல், அதற்கு நீதி மன்றம் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதை dro மூலமாக பேசி தெளிவு பெறும் வகையில் ராமமூர்த்தி தரப்பினர் செயல்பட்டு உள்ளனர்.வாழ்த்துக்கள்.
நியோமேக்ஸ்ல எப்படி இனைந்தீர்கள் அதேபோல அவர்களை வைத்து அருமையாக இணையலாம்.
அங்கு விஷமே பொத்தி கொண்டு சும்மா இருந்தாலே போதும்.