எண்டோஸ்கோபிக் சிகிச்சையில் ஒரு மைல் கல் ! வியத்தகு சாதனை படைத்த திருச்சி ஜி.எச் !

சிக்கலான கணையநீர் கட்டியை மேம்பட்ட எண்டோஸ்கோபிக் செயல்முறையின் வழியே வெற்றிகரமாக அகற்றி வியத்தகு சாதனையை படைத்திருக்கிறார்கள், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

எண்டோஸ்கோபிக் சிகிச்சையில் ஒரு மைல் கல் ! வியத்தகு சாதனை படைத்த திருச்சி ஜி.எச் !

சிக்கலான கணையநீர் கட்டியை மேம்பட்ட எண்டோஸ்கோபிக் செயல்முறையின் வழியே வெற்றிகரமாக அகற்றி வியத்தகு சாதனையை படைத்திருக்கிறார்கள், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

50 வயதில் ஒரு நோயாளி மற்றும் 25 வயதில் மற்றொரு நோயாளி ஆகிய இருவருக்கும், சுமார் 16  செ.மீ. அளவுள்ள கட்டியை அகற்றியிருக்கிறார்கள். இரைப்பைக் குடலியல் மருத்துவத் துறையில் எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் பயன்பாடு வழக்கமான ஒன்றுதான். ஆனாலும், எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலுடன் கூடிய சிஸ்டோகாஸ்ட்ரோஸ்டோமி என்ற மேம்பட்ட வழிமுறையை தனிச்சிறப்பாக கையாண்டு, இரப்பைக்குள் செலுத்தி, நாள்பட்ட கணைய நீர்க்கட்டிகளை துல்லியமாக கண்டறிந்து இரப்பையின் பின் சுவர் வழியாக ஒரு வடிகால் பாதையை உருவாக்கி வெளியேற்றியிருக்கிறார்கள் என்பதில்தான் மருத்துவக்குழுவின் தனித்தன்மை வெளிப்படுகிறது.

operation

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மிக முக்கியமாக, இதுபோன்ற நேர்வுகளில் பெரிய அளவிலான சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியை தவிர்த்திருக்கிறார்கள்.

”கடந்த, ஜனவரி 2026 -இல் முதல் வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு, இரைப்பைக் குடலியல் மருத்துவத் துறையில் செய்யப்படும் இரண்டாவது வெற்றிகரமான எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதல் சிஸ்டோகாஸ்ட்ரோஸ்டோமி இதுவாகும்.”  என்கிறார்கள் அரசு மருத்துவமனை வட்டாரத்தில்.

trichy-gh-doctors

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் குமரவேல், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பிரசன்னா மற்றும் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் ஆகியோரின் சிறந்த வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், இரைப்பை குடல் மருத்துவத் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் டாக்டர் ஷஃபிக் மற்றும் அவருக்கு உதவியாக உதவிப் பேராசிரியர் டாக்டர் கிஷ்வந்த் ஆகியோரை கொண்ட மருத்துவக்குழுவினரின் மெச்சத்தகுந்த முன்மாதிரி மருத்துவ அணுகுமுறை மெய்சிலிர்க்க வைக்கிறது.

-அங்குசம் செய்திப்பிரிவு

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.