முதல்வர் துறையில் மூக்கை நுழைக்கும் சபாநாயகர்! டி.ஜி.பி டிரான்ஸ்பர் சர்ச்சை !
முதல்வர் துறையில் மூக்கை நுழைக்கும் சபாநாயகர்!
டி.ஜி.பி டிரான்ஸ்பர் சர்ச்சை!
சபாநாயகர் அப்பாவு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக ஆதாயத்திற்காக செயல்பட்டு முதல்வரின் துறையிலே மூக்கை நுழைத்த சம்பவத்தால் காவல்துறை டி.ஜி.பி. ஒருவரை பலி கொடுத்த சம்பவம் காக்கிகள் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.
தமிழக தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையின் தலைவராக இருந்தவர் பி.கே ரவி. 1989 ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவரை கடந்த டிசம்பர் 16 ம் தேதி அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ரவி வகித்து வந்த தீயணைப்பு துறை தலைவர் இடத்திற்கு தமிழக சீருடைப் பணியாளர் தலைவர் சீமா அகர்வால் ஐ.பி.எஸ் என்பவருக்கு கூடுதல் பொறுப்பாக தீயணைப்பு துறை ஒதுக்கப்பட்டது. மேலும் ரவிக்கு எந்தவிதமான பதவியும் ஒதுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி, அதிரடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டதின் பிண்ணனி குறித்து காவல்துறை வட்டாரத்தில் பேசினோம். ரவிக்கு நடந்த கொடுமை மிக மோசமானது. இதற்கு காரணம் முதல்வரை சுற்றியுள்ள இருவர் செய்த மிகவும் மோசமான சம்பவம் தான் ரவிக்கு நடந்த அநீதியாகும்.
ஒரு டி.ஜி.பி.யே வே இப்படி செய்கிறார்கள் என்றால் சாதாரணமாக உள்ள அரசு அலுவலர்களை நினைக்கையில் நெஞ்சு பதறுகிறது என்று விரிவாக பேசினார்கள்.
சென்னையை சேர்ந்த ஒலிம்பியா என்கிற கட்டுமான நிறுவனம் ஏற்கனவே அவர்கள் கட்டியுள்ள 5 அடுக்கு ஹோட்டல் கட்டடத்திற்கு தீயணைப்பு துறையில் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பத்தை சரி பார்க்கும் பொறுப்பு கூடுதல் இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் என்பவரால் பார்க்கப்பட்டது. இந்த கட்டடம் சி.எம்.டி.ஏ அனுமதி இல்லாமல் அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது என்பதால் அவர்கள் இந்த கட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.
உடனே ஒலிம்பியா நிறுவனம் அந்த ஹோட்டலை முதியோர் இல்லமாக மாற்றி விட்டதாக சி.எம்.டி.ஏ.வில் அனுமதி கேட்டனர். ஆனால் சி.எம்.டி.ஏ அங்கு முறையான பார்க்கிங், அவசர வழி, தீ பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை செய்யவில்லை என மீண்டும் அனுமதி மறுத்து விட்டது.
உடனே ஒலிம்பியா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டனர். அந்த வழக்கினை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் பாதுகாப்பான அம்சங்கள் இல்லை, அதுபோக அரசு விதிகள் முற்றிலும் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். சென்னையின் பிரதான சாலையில் அமைந்துள்ளதால், விபத்து ஏற்பட்டால் பெரும் சிக்கல் ஏற்படும் என்று அந்த கட்டத்தை இடிக்கச் சொல்லி உத்தரவு போட்டது. இடித்து விட்டு மீண்டும் புதிய கட்டடத்தை கட்டச் சொல்லி உத்தரவு போட்டது.
கட்டத்தை இடிக்க மனமில்லாமல் தந்திரமாக யோசித்த ஒலிம்பியா நிறுவனம் சி.எம்.டி.ஏ.வில் சில முக்கியமான நபர்களை கவனித்து விட்டு, தீயணைப்பு துறையில் என்.ஓ.சி. வாங்க லஞ்சப் பேர்வழியான பிரியா ரவிச்சந்திரன் என்பவருக்கு பெருந்தொகையை லஞ்சமாக கொடுத்துள்ளது அந்த கோப்பை மூவ் செய்ய பிரியாவும் அதில் கையெழுத்து போட்டு அந்தக் கோப்பை டி.ஜி.பி.யான ரவியிடம் பைனல் ஜி.ஓ. அப்ரூவலுக்காக கொண்டு செல்லவும் அவர் கோப்பை விரிவாக படித்தவர் சி.எம்.டி.ஏ அப்ரூவல் இல்லை, அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் இடிக்கச்சொல்லி உத்தரவு போட்டுள்ளது. இதையெல்லாம் படிக்க மாட்டீங்களா ? என்று கடும் கோபம் அடைந்தவர் அந்த ஃபைலை ரிஜக்ட் செய்து விட்டார். அதோடு இல்லாமல் பிரியா இதுபோல என்னவெல்லாம் ஃபிராடுத்தனம் செய்துள்ளார் என்று நோண்ட ஆரம்பித்துள்ளார்.
மிகவும் சக்தி வாய்ந்த பவர் புல் பெண்மணியான பிரியா ரவிச்சந்திரன் அதிமுக தீவிர விசுவாசி. எடப்பாடியின் உறவினர். இவர் இதே போல பீனீஸ்க் மாலில் ரெனிவல் கோப்பிலும் விதிமுறைகள் மீறி கோப்பில் கையெழுத்து போட்டத்தை கண்டுபிடித்து பிரியாவை மாற்ற உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டிக்கு கோப்புகளை அனுப்புகிறார். பிரியாவின் கணவர் ரவிச்சந்திரன் என்பவர் ஐ.ஆர்.எஸ் அதிகாரி. தற்போது மத்திய அமலாக்கத்துறையில் சிறப்பு இயக்குனராக உள்ளார். அவர் பனீந்திர ரெட்டியிடம் பேசி பிரியாவின் பணி மாறுதலை கிடப்பில் போடுகிறார்.
இதற்கிடையில் ஒலிம்பியா நிறுவனம் சபாநாயகர் அப்பாவை சந்தித்து பிரச்னையை முடித்து தர கோரிக்கை வைக்கிறார்கள். சபாநாயகர் மகன் அலெக்ஸ் என்பவர் இதற்காக பெருந்தொகையை சர்வீஸ் சார்ஜ்ஜாக வாங்கிக் கொண்டு களத்தில் இறங்கி டி.ஜி.பி.க்கு அழுத்தம் கொடுக்கிறார்.
ஒரு பக்கம் பிரியா மற்றொரு பக்கம் சபாநாயகர் அப்பாவு அழுத்தம் கொடுக்க டி.ஜி.பி.ரவி முடியவே முடியாது என்று கராறாக நிற்கிறார். உடனே உளவுத்துறை உச்ச அதிகாரியின் மூலமாக அப்படியே தகவலை உள்டாவாக சொல்லி டி.ஜி.பி. ரவி பணம் கேட்டதாக முதல்வருக்கு தவறான தகவலை நோட்ஸ் போடுகிறார்.
மேலும் பிரியாவும் அவரது கணவர் ரவிச்சந்திரனும் முதல்வரின் தனிச் செயலாளர் உதயமானவரை சந்தித்து முறையிட மத்திய அமலாக்கத்துறை அதிகாரி என்பதால் அவர்களுக்கு ஆதரவாக உதயச் சந்திரனும் முதல்வரிடம் ரவியைப்பற்றி தவறுதலாக சொல்லி உடனே அவரை மாறுதல் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கிறார்கள்.
இதற்கு இடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டி.ஜி.பி. சைலேந்திர பாபுவின் உறவினரான மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகளான சரவண பாபு மற்றும் சத்திய குமார் இருவருக்கும் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பணிமாறுதல் செய்யச் சொல்லி சைலேந்திரபாபு ரவியிடம் சொல்ல ஆனால் இருவர் மீதும் ஏகப்பட்ட லஞ்சப் புகார்கள் இருந்ததால் அவர்களை ஊட்டிக்கும், மற்றொருவரை நாகப்பட்டினத்திற்கும் தூக்கி அடிக்கிறார் ரவி. இதனால் கடுப்பான டி.ஜி.பி. சைலேந்திர பாபு , தீயணைப்பு துறை ரவியை ஆட்கள் போட்டு ஃபாலோ செய்ததோடு உளவுத்துறை உச்ச அதிகாரியிடம் சொல்லி ரவியை காலி செய்யச் சொல்லி உத்தரவு போடுகிறார்.
இப்படி ரவிக்கு எதிராக சபாநாயகர் அப்பாவு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.டேவிட்சன், முதல்வர் தனிச்செயலாளர் உதயச் சந்திரன், தீயணைப்பு துறை கூடுதல் இயக்குனர் பிரியா, அவருடைய கணவரும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரியான ரவிச்சந்திரன் என ஒரு பட்டாளமே இறங்கி காலி செய்தனர்.இந்த தகவல் எல்லாம் உண்மை. முதல்வர் இந்தக் கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் நாளை இவர்கள் முதல்வரை சிக்கலில் சிக்க வைப்பர். முதல்வர் உடனடியாக ஒலிம்பியா கோப்புகளை ரிவுயூ செய்தால் உண்மை தெரிய வரும் ” என்றனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சபாநாயகர் மகன் அலெக்ஸ், மற்றும் கூடுதல் இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோரின் செல்போனிற்கு தொடர்பு கொண்டோம்… ரீங் போய் கொண்டே இருந்தது கடைசி வரை எடுக்கவே இல்லை… அவர்கள் தரப்பு விளக்கத்தை நமக்கு அளித்தால் அதையும் பிரசுரம் செய்ய தயாராக உள்ளோம்.. பெருந்தொகை கொடுத்த குற்றச்சாட்டு ஒலிம்பியா நிறுவனம் மேலாளரை தொடர்பு கொண்டு பேசினோம்… அவர்.. சார் எனக்கு இதுக்கும் எந்த சம்மந்தம் இல்லை, இது சம்மந்தமாக எனக்கு எதுவும் தெரியாது, எங்களின் பாட்டனரிடம் பேசிட்டு சொல்றேன் சார்.. என்றவர்.. தற்போது வரை திரும்ப பேசவே இல்லை..
-அஜித்குமார்