தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களுக்காக நடைபெற்ற கலந்தாய்வில் 102-பேர் இடஒதுக்கீடு ஆணை பெற்றுள்ளனர்.
தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களுக்காக இன்று நடைபெற்ற கலந்தாய்வில் 102-பேர் இடஒதுக்கீடு ஆணை பெற்றுள்ளனர்.
மருத்துவ கலந்தாய்வு கடந்த 8-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு ஒதுக்கீட்டில் உள்ள மருத்து இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில்
தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு இன்றைய தினம் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது இதற்காக அழைக்கப்பட்டவர்கள் 3205 பேர், கலந்து கொண்டவர்கள் 266 பேர்.
தனியார் கல்லூரியில் உள்ள மருத்துவ படிப்பிற்கான இடங்களை 102பேர் தேர்வு செய்தனர்.
164 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர் , கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களில் 2939 பேர் கலந்து கொள்ளவில்லை.