திருச்சி – சிலம்பத்தில் 12,000 வீரர்-வீராங்கனைகளை கொண்டு நடத்தப்படும் உலக சாதனை நிகழ்வு !
சிலம்பத்தில் உலகிலேயே முதன்முதலாக 12,000 வீரர்-வீராங்கனைகளை கொண்டு நடத்தும் உலக சாதனை நிகழ்வு
திருச்சி, பெல்ஸ் இரயில்வே மைதானத்தில் ஸ்ரீவேலு தேவர் அய்யா அறக்கட்டளை மற்றும் இந்திய சிலம்ப சம்மேளனம், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்தும் உலக சாதனை நிகழ்வு வருகிற 12.01.2025-ல் 12,000 வீரர்-வீராங்கனைகளை கொண்டு நடத்தப்படுகிறது.
மேற்கண்ட சிலம்பாட்டம் 12251 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் இணைந்து உலக சாதனை நிகழ்வாக வருகிற 12.01.2025 ஆம் தேதியன்று முதலியார் சத்திரம், குட்செட் ரோடு, இரயில்வே பெல்ஸ் கிரவுண்டில் மாலை 4:00 மணி அளவில் நடைபெற உள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த கின்னஸ் சாதனையானது இந்திய சிலம்ப சம்மேளனத்தின் தலைவர் திரு. ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. திரு. K. முரளிசங்கர், திருச்சி ஸ்ரீபாம்பாட்டி சித்தர் ஓங்கார குடில் நிறுவனர் ஸ்ரீவேலு தேவர் அய்யா தலைமையில் நடைபெற உள்ளது.
— அங்குசம் செய்திபிரிவு.