இப்பல்லாம் கெட்டவன் தான் ஹீரோ – சரத் சொன்ன உண்மை!
‘888’ புரொடக்ஷன்ஸ் மற்றும் ‘செல்லுலாய்ட்’ கிரியேஷன்ஸ் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரிப்பில் மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாஸன் இயக்கத்தில் சரத்குமார் நெகடிவ் ரோலில் நடித்து இந்த பிப்ரவரி 27- ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது ‘ஆழி’.இப்படத்தை தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிப்ரவரி 09-ஆம் தேதி காலை நடைபெற்றது.
இதில் பேசியவர்கள்..
*விநியோகஸ்தர் ஹரி உத்ரா*
“சரத் சாரின் இந்த ப்படத்தை விநியோகம் செய்வதில் மகிழ்ச்சி.இப்போது குறைந்த பட்ஜெட் படங்கள் வெளியாவதிலும் அவற்றை விற்பனை செய்வதிலும் பெரும் போராட்டம் இருக்கிறது. தமிழ்த் திரையுலக நலனுக்காக போராடும் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து வியாபார வழிமுறையை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”.
*தயாரிப்பாளர் ரவி கொட்டாரக்கரா*
“என்னுடைய நண்பர் சரத்குமார் ஒரு படத்தின் கதையைக் கேட்கும் போது அவரது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்வார். இன்று வரை படித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பற்றியும் சிந்திக்கிறார். அண்மைக் காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் வித்தியாசமானதாக இருக்கும். இதே போல் தான் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்”.
*இயக்குநர் மாதவ் ரமா தாசன்*
“நான் தமிழில் இயக்கியிருக்கும் முதல் படம் இது. தமிழில் படத்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அதற்கான நேரம் இப்போது அமைந்து ஆழி உருவாகியுள்ளது. 70 சதவீதம் கடலில் நடைபெறும் இந்த கதைக்கு சவுண்ட் அவசியம். இதற்காக சர்வதேச அளவில் அனுபவம் உள்ள ரசூல் பூக்குட்டியிடம் கேட்டோம். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு தற்போது வரை படத்தின் தரமான ஒலி அமைப்பிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தக் கதையை சரத்குமாரிடம் சொன்னதும் அவருடைய கதாபாத்திரத்தில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடைய கேரக்டரில் நிறைய வேரியேஷன்ஸ் இருக்கிறது.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் பிஆர்ஓ. நிகில் முருகனும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்”.
*சவுண்ட் என்ஜீனியர் ரசூல் பூக்குட்டி*
“சரத்குமாரிடம் இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, மரியாதை, நேரம் தவறாமை, கேமரா முன்னால் நடிப்பு என ஒரு தவத்தை போல் தன்னுடைய பணியை செய்கிறார். அவர் இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மூலம் கதையை வழி நடத்துகிறார்.நான் இந்தப் படத்தை மூன்று முறை மிக்ஸ் செய்திருக்கிறேன். இது போன்ற துணிச்சலான அணுகுமுறை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குனர்களுக்கும் தான் இருக்கிறது. இங்குள்ள தயாரிப்பாளர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குநரை கொண்டாடுகிறார்கள். இயக்குநருக்கு ஆதரவு தருகிறார்கள்”.
*சரத்குமார்*,
”இந்தப் படத்தின் இயக்குநர் மாதவ் ரமா தாசன் கதை சொல்ல வருவதற்கு முன்பே அவர் இயக்கத்தில் வெளியான ‘மேல் விலாசம்’ படத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவர் கதை முழுவதும் சொன்னார். வித்தியாசமான கதை . பெரும்பாலும் மீன்பிடி படகு ஒன்றில் நடைபெறும் கதை. பெரும்பாலும் கடல் தான் திரைக்கதையில் இருக்கிறது. இதை எப்படி நீங்கள் திரையில் காட்சிப்படுத்துவீர்கள் என கேட்டேன். அது குறித்து நாங்கள் முழுமையாக திட்டமிட்டிருக்கிறோம் என சொன்னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரிந்தது.
மாதவ் ரமா தாஸின் வித்தியாசமான படம் என்று தான் இதை சொல்வேன். அதனால் இந்தப் படம் வெற்றி பெறும். இதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸை பார்க்கும் போது நான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பது தெரியும். இன்று நெகட்டிவ் கேரக்டருக்கு தான் வரவேற்பு இருக்கிறது. இன்று கதாநாயகன் என்று சொன்னால் நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகனாக முடியாது. தப்பு செய்பவர்கள் தான் கதாநாயகன். புஷ்பா 2 படத்தில் ஹீரோ செம்மரம் கடத்துகிறார். ஆனால் அவர் தானே ஹீரோ.
என்னைப் பொறுத்த வரை இந்த படம் நல்ல கதை. சிறந்த இயக்குநர். மீன்பிடி படகிற்குள் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் உணர்வுபூர்வமான விஷயங்கள் தான் முக்கியமானது. வித்தியாசமான அனுபவமாக இருக்கும்”.
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.