அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாநகராட்சி வார்டு கவுன்சிலருக்கு நன்றி !!!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மேலப்புதூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஏ .ஆர் .வர்த்தக வளாகத்திற்கு  முன்பாக  பொதுமக்கள் குப்பை கழிவுகளை கொட்டியும் அசுத்தம் செய்தும் வருவதை யும் திருச்சி மாநகராட்சி  ஊழியர்கள் உரிய நேரங்களில் வாங்காமல் குப்பைகளை தேக்கி வைத்து  எமது கடை வாசல்களில் குப்பைகிடங்கு போல பராமரிப்பதால் கடும் சுகாதாரகேட்டை உருவாக்குவதை கண்டித்து 10.2.2026 செவ்வாய்கிழமை அன்று காலை திருச்சி  மாநகராட்சி முன்பு குப்பையுடன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அறிவித்திருந்தோம். மாநகராட்சி, மற்றும் வார்டு கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டது.

செய்தியை அறிந்த மேலப்புதூர் வார்டு கவுன்சிலர்  திருமதி .துர்கா தேவி  அவர்கள் நேரடியாக வந்து  சம்பந்தபட்ட இடத்தையும் நிலமைகளையும் ஆய்வு செய்தார். அருகாமைய பகுதி மக்களிடமும்  ஏ.ஆர்.பில்டிங்வளாக  வணிகர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.  இனி குப்பைகளை தினசரி காலை 11.00 மணிக்கு வண்டியுடன் வந்து பெற்றுக் கொள்வதாகவும், வளாகத்திற்கு முன் கொட்ட விடாமல் தடுப்பதற்கு பகுதி முழுவதும் விழிப்புணர்வும், மீறி கொட்டுபவர்கள். மீது  நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். மேலும் வார்டு மேஸ்திரி, மற்றும் அதிகாரிகளும் உறுதியளித்ததன் பேரில்  நாங்கள் அறிவித்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேலும் எமது கோரிக்கைகளின் நியாயத்தை அதிகாரிகளிடம் எடுத்துரைத்த மக்கள் அதிகாரம் மற்றும் பு.ஜ.தொ.மு நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.! நன்றி!!

 —  ஏ.ஆர். பில்டிங் வணிகர்கள், மேலப்புதூர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.