ராம்சரணின் ‘பெத்தி’ ஜூன்.04-ல் ரிலீஸ்!
‘விர்த்தி சினிமாஸ்’ வெங்கட சதீஷ் கிலாரு, ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’, ‘சுகுமார் ரைட்டிங்ஸ்’ ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் தெலுங்கு ’மெகா பவர் ஸ்டார்’ ராம் சரணின் ‘பெத்தி’. புச்சி பாபு சனா டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் ஜான்வி கபூர், ஷிவராஜ்குமார், ஜெபதி பாபு, பொம்மன் இரானி, திவ்யேந்து ஷர்மா உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு : ஆர்.ரத்னவேலு, இசை : ஏ.ஆர்.ரகுமான், எடிட்டிங் : நவீன் நூலி, இணைத் தயாரிப்பாளர் : ஈஷான் சக்ஸேனா, பி.ஆர்.ஓ. : யுவராஜ். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ஒரு பாடல், ஹைதரபாத் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டதுடன் ஷூட்டிங் நிறைவடைந்தது. இந்தப் படத்திற்காக கடுமையான உடல் உழைப்பைக் கொடுத்துள்ளாராம் ராம்சரண். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த ‘பெத்தி’ வரும் ஜூன்.04-ஆம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது என தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.
— ஆண்டவர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.