அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மு.க.ஸ்டாலின் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

அப்படி பாக்காதிங்க friends, நான் ஸ்டாலினுக்கு தான் வாக்களித்தேன். என்னை பொருத்தவரையில் 234 பேரில் சிறந்த MLA ஸ்டாலின் தான்.

அதுவுமில்லாமல் VS பாபு எல்லாம் நம்பர் ஒன் திருடன். அது ஒருபக்கம் இருக்கட்டும்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

விஜய் வந்ததால் இப்போதைய சூழல் வேறுமாதிரி இருக்கலாம். ஆனால் விஜய் இல்லை என்றாலும் கிட்டத்தட்ட இதுதான் நிலை. அதுக்கு காரணம் திமுக வின் பத்து முக்கிய அமைச்சர்களும்.. 2-3 பெரிய போலீஸ் அதிகாரிகளும்…

ஸ்டாலின் மீது மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. அவர் மீது நேரடியான தவறுகள் இல்லை. ஆனால் அவரின் மிகப்பெரிய தவறு அனைத்தையும் கண்டும் காணாதது போல் இருந்தது/இருப்பது.

யாவரும் கேளீர்

அமைச்சர்களை நம்பி கட்சி இருக்கு, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஆபத்து என கூட நினைத்திருக்கலாம். ஆனால் போலீஸ்காரனுக்காக எதுக்கு கேட்ட பெயர் வாங்கனும்? தூக்கிப்போட்டு மிதிச்சா, அவர் மீது மேலும் மதிப்பு ஏறும்.

தனக்கு 100% நம்பிக்கையான சொந்த மகன் கூடவே இருப்பது ஸ்டாலினுக்கு யானை பலம். ஆனா அதையும் அவர் பயன்படுத்தவில்லை.

உள்ளபடியே உதயநிதியின் செயல்திறனை நான் நேரடியாக ஒரு நிகழ்வில் அவருடன் இருந்த போது பார்த்திருக்கிறேன். அவர் எதுவும் தெரியாதவர் அல்ல. தேவையான நேரத்தில் கோபமும் கொள்கிறார், நேர்த்தியாக செய்ய மெனக்கெடுகிறார். கருத்து சொல்வதிலும் ஸ்டாலினை விட, உதயநிதி ஒருபடி மேல் தான்.

இங்கே நடக்கும் தவறுகள் ஸ்டாலின் காதுகளுக்கு போகாமல் இருக்கலாம். ஆனால் உதய் காதுகளுக்கு நிச்சயம் போகும். உதய் பேச்சை கூட ஸ்டாலின் கேட்கவில்லை என்பது தான் களநிலவரம்.

அதுமட்டுமில்லை திமுக வின் வாக்கு பலம் தலித் வாக்குகள் தான். ஆனால் இந்த 5 ஆண்டுகளில் அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தலித் எதிர்ப்பை சம்பாதித்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் அனைத்து முன்னேற்றத்துக்கும் திமுக முக்கிய காரணம். அது ஒரு சமூகநீதி கட்சிதான். ஆனால் இப்போது இருக்கும் அமைச்சர்கள் பெரும்பாலும் சாதி வெறியர்கள். அவர்களை வைத்து எப்படி சமூகநீதி கட்டமைக்க முடியும்.?

நேத்து வந்த விஜய் அம்பேத்கரை முன்னிலைப்படுத்துறார். ஆனா சமூகநீதி கட்சியான திமுக இன்றுவரை ஏன் அம்பேத்கரை முன்னிலைப்படுத்தவிலை.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

2021 நிலவரப்படி அடுத்த 20 வருசம் திமுக விறகு எதிரி இல்லாத சூழலில்…. ஒழுங்கா ஆட்சி இருந்திருந்தா, அது சாத்தியம் தான்.

ஊழல் என்பது இன்று TVK கூட பண்ணும்.. நாளை ஒருவேளை நாதக வந்தாலும் ஊழல் பண்ணும்.

ஆனால் இருபது வருடம் அதிகாரத்தை சுவைத்து, 20 ரூபாய் ஊழல் செய்ய வேண்டிய இடத்தில்.. 5 வருடத்தில் 20 ரூபாய் திருடினால் கூப்பு தான் கிடைக்கும்.

சவுக்கு சங்கருக்கு தெரிஞ்ச விசயம்… ஸ்டாலினுக்கு தெரியாமல் போகுமா?

கட்சி நடத்த பணம் தேவை. அதுக்கான ஊழல் என்பது இந்த அளவு அல்ல.

என்னைப்பொறுத்தவரையில் இப்பொழுதும் திமுக வெற்றி பெறனும் . ஆனா சேகர்பாபு உள்ளிட்ட 10-15 அமைச்சர்கள் வெற்றிபெறக்கூடாது.

சென்னை தலித் வாக்குகள் திமுகவுக்கு கிடைக்காத காணரங்களில் முக்கிய காரணம் சேகர்பாபு தான்.

நியாயப்படி விசிக வுக்கு திமுக முக்கியத்துவம் கொடுத்திருக்கணும். விசிக வளருவது திமுக விக்கு பலம். ஆனால் விசிக வின் பின்னடைவுக்கு திமுக் தான் காரணம்.

அப்படியே எங்க முன்னத்தி ஏர் அண்ணன் திருமாவிடம் சென்றால்…..

அண்ணன் திருமா கடந்த ஒரு வருடம் தேர்தல் சார்ந்து பேசியது, செய்தது என 95% விஷயங்கள் பிழையானது…

—   தோழர் ஜே.கே.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.