3 நிமிடத்தில் 30-க்கும் மேற்பட்ட கணக்குகள் ! அசத்திய மாணவர்கள் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரையில் மாநில அளவிலான அபாகஸ் தேர்வு 4500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு.  3 நிமிடத்தில் 30க்கும் மேற்பட்ட கணிதம் போட்டு அசத்தல் .

மதுரை தமுக்கம் மைதானத்தில்  தனியார் அகாடமி சார்பில் மாநில அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 4500 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அபாகஸ் போட்டிதேர்வு நேரமானது மூன்று நிமிடம் நிர்ணயிக்கப்பட்டு ஒரு பிரிவிற்கு 650 மாணவ மாணவிகள் விகிதம் 7 பிரிவுகளாக நடைபெற்றது.

மாணவ மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 நிமிடத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு துரிதமாக செயல்பட்டு விடையளித்தனர். மூன்று நிமிடத்தில் 30க்கும் மேற்பட்ட கணிதம் போட்டு அசத்தினர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு  கேடயம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் தேர்வு செய்யும் மாணவ மாணவிகள் இந்திய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

அபாகஸ் போட்டிஇது குறித்து தனியார் அகடாமியின் நிர்வாக இயக்குனர் கூறும்போது,

இந்த அபாகஸ் பயிற்சி மற்றும் தேர்வு மூலம் மாணவர்களின் ஞாபக சக்தி, நிதானதன்மை, அறிவுத்திறன் ஆகியவை அதிகரிக்கும். இது போன்ற அபாகஸ் போட்டி தேர்வுகள்  நாடு முழுவதும் மாநில மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகள் இந்திய அளவில் நடைபெறும் அபாகஸ் போட்டி தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.

 

—    ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.