பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு – பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் கருத்தரங்கம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு – மே-27 சென்னை பல்கலை வளாகத்தில் கருத்தரங்கம் ! ”பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு” என்ற தலைப்பில் எதிர்வரும் மே-27 அன்று திங்கட்கிழமை சென்னை பல்கலைகழக வளாகத்தில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பினர்.

இந்தக் கருத்தரங்கத்தை இன்றைய காலச்சூழலில் நடத்த வேண்டியதான அவசியம் குறித்து, அவ்வமைப்பின் பொதுச்செயலாளரும் கல்வியாளருமான பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் – இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் விழுமியங்கள். சகோதரத்துவத்தும் இல்லை என்றால் சமத்துவம் சாத்தியமில்லை, சமத்துவம் இல்லை என்றால் சுதந்திரம் அர்த்தமற்றதாகிவிடுகிறது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு கருத்தரங்கம்
பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு கருத்தரங்கம்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சகோதரத்துவம் என்பது குறித்து எந்த புரிதலும் இல்லாமல் ஒருவர் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு, உயர்கல்விக்கு வருகிறார், பின்னர் மிகப் பெரும் பொறுப்புகளை வகிக்கும் வாய்ப்புகளை பெறுகிறார் என்ற நிலை நீடிக்கிறது என்றால், பள்ளியில் காலைக் கூட்டத்தில் ஏற்கப்படும் தேசிய உறுதிமொழி ஏற்பு அர்த்தமற்ற சடங்காக நிகழ்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
“இந்தியர்கள் யாருவரும் என் உடன் பிறந்தவர்கள்” என்ற உறுதிமொழி படி அடுத்த தலைமுறை வாழ்ந்திட நாம் ஒவ்வொருவரும் பெரும் பங்கினை ஆற்ற வேண்டி உள்ளது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

“பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு” என்ற பொருண்மையில் நடைபெறும் கருத்தரங்கில் முன்வைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கவும், தங்களின் அமைப்பிற்குள் விவாதிக்கவும், இந்த விவாதத்தில் அரசை பங்கேற்கச் செய்யவும், பெற்றோர், மாணவர்கள் ஊரில் வசிக்கும் மக்கள் அனைவருடனும் தொடர்ந்து உரையாடல் நிகழ்த்தவும் மே 27 கருத்தரங்கம் பெரிதும் பயன்படும்.பத்து நாட்களுக்கு முன்பாக கருத்தரங்க அழைப்பை பகிர்கிறோம்.

மே மாதம் 27, திங்கட்கிழமை அன்று “பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு” என்ற பொருண்மையில் நடக்கும் கருத்தரங்கில் அவசியம் பங்கேற்க வேண்டுமென்று தங்களின் நாட்குறிப்பில் குறித்துக் கொள்ளுங்கள். தங்களை அன்புடன் அழைக்கின்றோம். அவசியம் வாருங்கள்! ” என்பதாக அறிக்கையில் குறிப்பிடுகிறார், பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு.

அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.