சவுக்கு சங்கருக்கு 2 நாள் ! ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு 1 நாள் ! போலீசு கஸ்டடி ! நடப்பது என்ன ?

0

சவுக்கு சங்கருக்கு இரண்டு நாள் ! ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் ! போலீசு கஸ்டடிக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம் ! பெண் போலீசாரை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்குசங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோரை போலீசு காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் முறையிட்டிருந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு இரண்டுநாள் போலீசுகாவலும் ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் போலீசு காவலில் விசாரிக்கவும் அனுமதி அளித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

திருச்சி மாவட்டம் முசிறி உட்கோட்ட டி.எஸ்.பி. செல்வி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து,டெல்லியில் தலைமறைவாக இருந்த ஏ-2 பெலிக்ஸ் ஜெரால்டை கடந்த மே-13 அன்று திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், மே-27 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

இந்நிலையில், பெலிக்ஸ் ஜெரால்டை போலீசு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அனுமதி கேட்டிருந்தனர். இந்த வழக்கு மே-20 அன்று திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிபதி ஜெயப்பிரதா முன்பு விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையிலிருந்து பெலிக்ஸ் ஜெரால்டு ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

Police custody பெலிக்ஸ் 20.05.2024
Police custody – Police custody பெலிக்ஸ் 20.05.2024

- Advertisement -

ரெட்பிக்ஸ் பெலிக்ஸூக்கு ஒரு நாள் – போலீசு கஸ்டடி !

ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டை போலீசு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அலெக்ஸ் மற்றும் கென்னடி ஆகியோர், ”சவுக்கு சங்கரிடம் ரெட்பிக்ஸ் யூட்யூப் சேனலுக்காக பேட்டி எடுத்தவரை எப்படி இந்த வழக்கில் சேர்க்கலாம்? அது அவருடைய கருத்து அல்ல. பழிவாங்கும் விதமாகவும், அவரது குடும்பத்தினரை அச்சுறுத்தும் வகையிலும் போலீசார் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த வழக்கில் எந்த வகையிலும் சம்பந்தமில்லாத பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி பெயரில் உள்ள சொத்து ஆவணங்களையெல்லாம் கைப்பற்றியிருக்கிறார்கள். அவரது பெற்றோர்கள் வீட்டிலும் சோதனையை நடத்தியிருக்கின்றனர். அவர்களது பிழைப்பைக் கெடுக்கும் வகையில் நான்கு காமிராக்களையும் கைப்பற்றி சென்றுவிட்டார்கள். ” என்பதாக தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் போலீசாரின் விளக்கத்தை ஏற்க மறுத்து, “பெலிக்ஸ் ஜெரால்டு விவகாரத்தில் போலீசார் தங்களது அதிகாரத்தை நிறுவி வருகிறார்கள். அவரை மனிதனாகவே போலீசார் மதிக்கவில்லை.” என்பதாக தனது கடுமையான எதிர்ப்பை நீதிமன்றத்தில் பதிவு செய்தார், வழக்கறிஞர் கென்னடி.

அங்குசம் இதழ் இலவசமாக படிக்க – 2024 மே 16 -31

4 bismi svs

இதற்கிடையே, போலீசு காவலில் விசாரிப்பது தொடர்பாக உங்களது கருத்து என்ன? என்று பெலிக்ஸ் ஜெரால்டிடம் நீதிபதி கேட்டதற்கு, “விசாரணையின்போது, உதவியாளர் ஒருவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்” என்பதாக கோரிக்கை வைத்தார். அக்கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, மே-20 மாலை 3 மணிமுதல் மே-21 மாலை 3 மணி வரையில் போலீசு காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பு வழக்கறிஞர்கள் மூன்றுமுறை சந்திக்கவும் அனுமதி வழங்கியிருக்கிறார்.

இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த வழக்கறிஞர் கென்னடி. ”நாங்கள் பெயில் பெட்டிசன் போடுவதற்கு முன்பாகவே, போலீஸ் கஸ்டடி கேட்டு மனு போட்டிருக்கிறார்கள். சண்டை வேண்டாம் என்றுதான் விட்டுவிட்டோம். காவல்துறையின் அதிகார பலம் மிக மோசமான அதிகார பலம். காவல்துறை சட்டப்படி இல்லை. சட்டத்துக்கு முரணான அதிகார பலத்தை வைத்துக்கொண்டு தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறார்கள். நாங்கள் சட்டப்படி நடந்துகொள்ளுங்கள் என்கிறோம். ” என்பதாக தனது அதிருப்தியை பதிவு செய்திருக்கிறார்.

சவுக்கு சங்கர் 20.05.2024
சவுக்கு சங்கர் 20.05.2024

சவுக்கு சங்கருக்கு ரெண்டு நாள் – போலீசு கஸ்டடி !

மே-4 ஆம் தேதி சவுக்கு சங்கர் கைதானபோது, அவர் தங்கியிருந்த விடுதி அறை, அவர் பயன்படுத்திய கார் ஆகியவற்றில் கஞ்சா இருந்ததாக, பழனி செட்டிபட்டி போலீசார் அளித்த புகாரின் பேரில், கஞ்சா வழக்கில் மே-7 அன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிணை கேட்டு சவுக்கு சங்கர் தரப்பிலும், 7 நாள் போலீசு காவல் கேட்டு போலீசு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யுமாறு போலீசு தரப்பிற்கு அறிவுறுத்திய நீதிபதி, இரண்டு நாள் மட்டும் போலீசு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இவ்விரு நாட்களிலும் வழக்கறிஞர்கள் மூன்று முறை சந்திக்கவும் அனுமதிக்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் போலீசு காவலுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

ஏற்கெனவே, கோவை சைபர்கிரைம் போலீசார் ஒருநாள்; திருச்சி மாவட்ட சைபர்கிரைம் போலீசார் ஒருநாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரித்த நிலையில் தற்போது, மூன்றாவது முறையாக கஞ்சா வழக்கில் இரண்டு நாள் கஸ்டடி விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறார், சவுக்கு சங்கர்.

– ஆதிரன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.