அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆக்ஷன், கிரைம், மிஸ்ட்ரி.. திரில்லர் படங்கள் மிஸ் பண்ணாதீங்க.!

திருச்சியில் அடகு நகையை விற்க

ஆக்ஷன், கிரைம், மிஸ்ட்ரி… படம் தொடங்கியது முதல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத திரில்லர் படங்கள்; மிஸ் பண்ணாதீங்க.!

ஓ.டி.டி-யில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படங்கள் குறித்த பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

சினிமா ரசிகர்கள் பலருக்கும் காமெடி, சென்டிமெண்ட் படங்களை விட த்ரில்லர் படங்கள் தான் அதிகம் பிடிக்கும். வீக் எண்டானதும் நெட்பிளிக், அமேசான் போன்ற ஓ.டி.டி தளங்களில் படங்கள் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ரசிகர்களை கவர்வதற்காகவே இதுபோன்ற ஓ.டி.டி தளங்கள் த்ரில்லர் வெப் தொடர்களையும் இயக்கி வருகிறது. சில வெப் தொடர்கள் 10,12 சீசன்கள் வரை செல்கின்றனர். அப்படி உங்க வீக் எண்டை என்ஜாய் பண்ணும் விதமாக பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத திரில்லர் படங்கள் பட்டியல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

குட்டவும் சிக்‌ஷையும்

https://www.livyashree.com/

கடந்த 2022-ஆம் ஆண்டு ராஜிவ் ரவி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘குட்டவும் சிக்‌ஷையும்’ (Kuttavum shikshayum)  தங்கநகை திருட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரில் நிறைந்த இத்திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி-யில் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்.

அட்டேன்ஷன் பிளீஸ்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜிதின் ஐசக் தாமஸ் இயக்கத்தில் வெளிவந்த மலையாள திரில்லர் திரைப்படம் ’அட்டேன்ஷன் பிளீஸ்’ (Attention Please). திரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி-யில் பார்த்து ரசிக்கலாம்.

ஏ ரஞ்சித் சினிமா

ஆசிப் அலி நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரில்லர் திரைப்படம் ’ஏ ரஞ்சித் சினிமா’ (A Ranjith Cinema).  இந்த படத்தை நிஷாந்த் சத்து எழுதி இயக்கியுள்ளார். ஒரு இளைஞன் தன் வாழ்க்கையை கதையாக எழுதுகிறார். ஆனால், அந்த கதை நிஜத்தில் நடப்பது போன்று தோன்றுவதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளாது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத உளவியல் ரீதியான இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி-யில் பார்த்து ரசிக்கலாம்.

வாஷி

கடந்த 2022-ல் கீர்த்தி சுரேஷ், டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் ‘வாஷி’ (Vaashi). விஷ்ணு ஜி ராகவ் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான வழக்கில் எதிரெதிர் பக்கம் இருக்கும் இரண்டு லட்சிய வழக்கறிஞர்களுக்கு இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி-யில் பார்த்து ரசிக்கலாம்.

கொண்டல்

ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் ‘கொண்டல்’ (Kondal’. இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி-யில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.