அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘கார்மேனி செல்வம்’

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு : ‘பாத்வே புரொடக்சன்ஸ்’ அருண் ரங்கராஜுலு, டைரக்‌ஷன் : ராம் சக்ரி, ஆர்ட்டிஸ்ட் : சமுத்திரக்கனி, லட்சுமி ப்ரியா சந்திரமெளலி, கெளதம் வாசுதேவ் மேனன், அபிநயா, மாஸ்டர் சரண், கார்த்திக் குமார், கோதண்டம், மதுமிதா,  படவா கோபி, ஒளிப்பதிவு : யுவராஜ் தக்‌ஷன், இசை : ராமானுஜம், எடிட்டிங் : தினேஷ் ஸ்ரீனிவாசன், பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.

வெளிநாடு போகணும் [ துபாய்] ரெண்டே வருசத்துல லட்சக்கணக்குல சம்பாரிக்கணும். ஊருக்கு திரும்பி வந்து சொந்தமா வீடுகட்டணும், கார் வாங்கணும்கிற ஆசையுடன் போய் அவஸ்தைப்பட்டு திரும்பும் நடுத்தர வர்க்க குடும்பத்தலைவனைப் பற்றிய கதை தான் இந்த ‘கார்மேனி செல்வம்’.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கார்மேனி செல்வம்பெரும் பணக்காரர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் கார் டிரைவராக இருக்கிறார் சமுத்திரக்கனி. தனது மனைவி [அபிநயா]யின் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு போகிறார் கெளதம். அந்த நேரத்தில் அவரின் காரை கால்டாக்சியாக்கி சம்பாரிக்கிறார் சமுத்திரக்கனி. அவரின் காரில் பயணிக்கும் ஒருவரின் ஆசை வார்த்தைகளுக்கு அடிக்ட் ஆகி அதனால் கடனாளியாகி, அந்தக் கடனை அடைக்க துபாய் போய் அங்கேயும் வாழப்பிடிக்காமல் அவதிப்படுகிறார் சமுத்திரக்கனி. இங்கே சென்னையில் தள்ளுவண்டிக்கடையில் இட்லி வியாபாரம் பார்க்கிறார் அவரது மனைவி லட்சுமி ப்ரியா சந்திரமெளலி.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கார்மேனி செல்வம்“ஐயய்யோ….எவ்வளவு கடன் வாங்குன, மீட்டர் வட்டிக்கு வாங்குனியா, கடனை எப்படி அடைக்கப்போற, சொந்தமா வீடு எப்ப கட்டப் போற” இதன் படம் முழுக்க லட்சுமி ப்ரியா சந்திரமெளலி காட்டும் ஆக்‌ஷன் & ரியாக்‌ஷன். கார்த்திக் குமாரின் இன்சூரன்ஸ்  பாலிஸியும் படவா கோபியின் பாடாவது ரியாக்‌ஷனும் சகிக்க முடியல.  கெளதம் வாசுதேவ் மேனன் க்ளைமாக்ஸில் சமுத்திரக்கனியிடமே காரைக் கொடுத்துவிட்டு கிளம்புவதெல்லாம் மனசுல ஒட்டவேயில்லை.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

இந்த மாதிரியான ஃபேமிலி அட்டாச்மெண்ட் & செண்டிமெண்ட் படங்களில் “அடடா… ஆஹா…. ஐயய்யோ… ச்ச்ச் இவனுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது…அவன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியா நடக்கணும்” இந்த மாதிரியான ஃபீலிங் வந்தே ஆகணும். ஆனா இது எதுவுமே இல்லாமல் இரண்டே கால் மணி நேரம் தேமேன்னு தியேட்டருக்குள் உட்காந்துட்டு வெளியே போயே ஆகணும்கிற ஃபீலிங் தான் நமக்கு வந்தது. அந்தளவுக்கு டைரக்டர் ராம் சக்ரியின் கதையும் திரைக்கதையும் மிகவும் பலவீனமாகிவிட்டது.

அங்குசம் பார்வையில் ‘கார்மேனி செல்வம்’ 33/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.