திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிரடி சோதனை! ஒரே நாளில் ரூ.7.38 லட்சம் அபராதம் வசூல்!
திருச்சி கோட்டத்தில் சிறப்பு டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி அவர்களின் வழிகாட்டுதலின் கீழும், திருச்சி முதுநிலை கோட்ட வணிக மேலாளர் பு. வெங்கடராகவன் அவர்களின் தலைமையிலும், 14.08.2026 அன்று, டிக்கெட் இன்றி பயணித்த 545 பயணிகளுக்கு ₹4,44,474 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவில்லா டிக்கெட் வைத்துக் கொண்டு முன்பதிவு பெட்டியில் பயணித்த 396 பயணிகளுக்கு ₹2,84,379 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் லக்கேஜ் கொண்டு வந்த 7 பயணிகளிடம் ₹3,180 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதர விதிமீறல்களுக்காக 5 பயணிகளிடம் ₹6,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் 953 பயணிகளிடம் ₹7,38,233 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கோட்ட டிக்கெட் பரிசோதனைக் குழுவினரால் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அபராதத் தொகை இதுவாகும்.
N JEYANTH
PRO & ACM/ TPJ







Comments are closed, but trackbacks and pingbacks are open.