மூத்த நிர்வாகியை திட்டிய விவகாரம்- கோபத்தில் திமுக தலைமை-மாற்றத்திற்கு தயாராகும் அமைச்சரவை!
அதிகம் கோபப்படுபவர்கள் நேர்மையாளர்களாக இருப்பார்கள் என்று பேசப்படும் அதேசமயம் அளவுக்கு அதிகமாக கோபப்படுபவர்கள் அதனாலேயே சரிவை சந்திப்பார்கள் என்ற நிலையும் உள்ளது. இதை தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர் தற்போது செயல்படுத்திக் காட்டி வருகிறார்.
தமிழ்நாட்டினுடைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவின் ஐடி விங்-கின் தலைமை நிர்வாகியாக உள்ளார். இவர் திமுகவிற்கு எதிரான அனைத்து அவதூறுகளையும் சமூக ஊடகங்கள் வழியாக தொடர்ந்து எதிர்கொள்ளக்கூடிய கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார். இவர் ஏற்படுத்திய கட்டமைப்பு சில நேரங்களில் சரியான எதிர்வினையை வழங்கும், மேலும் கட்சியின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறது. ஆனால் சில நேரங்களில் ஆர்வக் கோளாறாக செயல்பட்டு அவப்பெயரை கட்சிக்கு ஏற்படுத்தியும் இருக்கிறது என்று சொல்லத் தொடங்கினார் தகவலை நம்மிடம் கூறிய திமுக தலைமை கழக நிர்வாகி ஒருவர்.
பழனிவேல் தியாகராஜன் மிகவும் திறமைசாலி, ஆங்கிலப் புலமை மிக்கவர், அவரிடம் பேசி ஜெயிப்பது என்பதே வாய்ப்பில்லை, திறமையாக செயல்படவும் தெரிந்தவர், திறமையாக அனைவரையும் வழி நடத்தி வேலை வாங்கவும் தெரிந்தவர் தான் பழனிவேல் தியாகராஜன் எவ்வளவு தான் பெருமைகள் அவரைப் பற்றி கூற இருந்தாலும் அவருடைய ஒரு செயல் ஒட்டுமொத்த செயலுக்கும் இடையூறாக இருக்கிறது. அது வேறு ஒன்றும் கிடையாது பழனிவேல் தியாகராஜன் இடமிருக்கும் அளவுக்கதிகமான கோபம்.
இவர் கோபம் எந்த அளவிற்கென்றால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சட்டென்று பேசுவது தான். அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கூட அவரிடம் வாதத்திற்கு வருபவர்களை அவர் சும்மா விட்டது கிடையாது. எதுனாலும் சரி பிரிச்சு மேஞ்சிடுவாப்புல நம்ம நிதியமைச்சர்.
இவர் தற்போது கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரைப் பற்றி டுவிட்டரில் பதிவு செய்து அதனால் தலைமையோடு கோபத்துக்கு உள்ளாகியதை அடுத்து உடனே நீக்கி விட்டார்.
அப்படி என்ன தான் நடந்தது என்றால், ஆங்கிலச் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் நிதியமைச்சர் கோபக்காரர் என்று குறிப்பிட்டு இருந்தார்,
இதனால் கோபம் அடைந்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செப்டம்பர் 23ஆம் தேதி காலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவு செய்தார், பிறகு சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கிவிட்டார்.
அந்த பதிவில் அவர் கூறியிருந்தது, “கட்சியின் இரு தலைவர்களாலும் இருமுறை நீக்கப்பட்ட வயதான முட்டாள் ஒருவர் (இரண்டு கிலோ இறால் வாங்கி வருவதற்கு மட்டுமே தகுதியானவர் என்பது அவரைப் பற்றி நான் கேள்விப்பட்ட துல்லியமான வாதம்) அவரோ என்னைப் பற்றி கூச்சலிட்டிருக்கிறார்”என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உடனடியாக இந்த விஷயம் திமுகவின் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்ல திமுக தலைமை நிதியமைச்சரை எச்சரித்திருக்கிறதாம். இதை தொடர்ந்து தான் அவர் பதிவு நீக்கப்பட்டதாம்.
இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்த வாதமும் சட்டமன்றத்திலும், சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள முதல்வர் இல்லத்தில் நடைபெற்று வருகிறது.