துரோகம் செய்தால் 24 மணி நேரத்தில் முரசொலியில் கட்டம் கட்டி விடுவேன் -துரைமுருகன் ஆவேசம்!

0

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் பேசிய துரைமுருகன் ஆரம்பத்தில் அமைதியாகவும், பிறகு ஆவேசமாகவும் பேசத் தொடங்கியிருக்கிறார். சீட்டு கிடைக்கவில்லை என்று பலரும் மனவேதனையில் இருக்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியும். யாரும் கவலைப்படத் தேவையில்லை யாருக்கு எப்போது எந்தப் பதவி தரவேண்டும் என்று எனக்குத் தெரியும் அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

கட்சிக்கு துரோகம் செய்ய நினைத்தால் பொறுத்துக்கொள்ள மாட்டேன் வேண்டுமென்றால் சீட்டு கிடைக்காதவர்கள் என்னை வேண்டுமென்றாலும் அடித்துக் கொள்ளுங்கள் அதைக்கூட நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால் கட்சிக்கு துரோகம் செய்தால் பொறுத்துக்கொள்ள மாட்டேன் 24 மணி நேரத்தில் கட்சியின் பொறுப்பை விட்டு நீக்கி விடுவேன், மேலும் முரசொலியில் கட்டம் கட்டி விடுவேன் என்று எச்சரித்திருக்கிறார்.

4 bismi svs

இதனால் உள்ளடி வேலை சற்று குறையும் என்ற தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு இருக்கின்றனர்.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுகவின் கூட்டணிக்குள் சரியான அனுசரிப்பு இல்லையாம், மாவட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுடம் திமுக நடத்திய பேச்சுவார்த்தையில் துரைமுருகனின் விசுவாசிகள் அவரைப்போலவே அதிகாரத் தொனியில் பேசியது கூட்டணிக் கட்சியின் மாவட்டத் தலைவர்களை முகம் சுளிக்க செய்ததாம்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.