தேர்தலுக்குப் பிறகு அமலாக்கத் துறையின் முதல் அசைன்மென்ட் செந்தில் பாலாஜி ???

0

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு அமலாக்கத்துறை தன்னுடைய நடவடிக்கையை தொடங்கும் என்று சொல்லத் தொடங்கினார் டெல்லிகார அதிகாரி நண்பர்.

தமிழக அரசியல் போற போக்கு டெல்லி வட்டாரத்துக்கு எரிச்சலை உண்டாக்கி உள்ளதாம். மேலும் எல்லா பிரச்சனையும் அசால்டா ஹேண்டில் பண்றது மாதிரி கட்டமைப்பு தமிழ்நாட்டுல இருக்கிறதால, டெல்லியின் பெரிய எதிர்பார்ப்பு, சிறிய எதிர்பார்ப்பு எல்லாம் அசால்ட்டா கடந்து சென்று விடுகிறார்களாம் தமிழ்நாட்டுகாரங்க.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின்

மேலும் ஒவ்வொரு அமைச்சரும் துறை நடவடிக்கைகளை துரிதமாக செய்றதால நிர்வாக ரீதியாகவும் தமிழ்நாடு தற்போது வரிசையில் முந்திக்கொண்டுவருதாம். இதுல அல்டிமேட்டா நிதியமைச்சர் தமிழ்நாட்டோட பொருளாதாரம் சம்பந்தமா அதிரடி காட்டிவருகிறாராம். இதன் தொடர்ச்சியாக தான் தமிழக முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது, வெள்ளை அறிக்கை, 2021 தமிழக பட்ஜெட், மேட் இன் தமிழ்நாடு என்றெல்லாம் திட்டம்போட்டு இருக்காராம். இதை எல்லாம் பார்த்து தமிழ்நாடு நிதியமைச்சர் கிட்ட ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்ட ஒன்றிய அரசு “அமைப்பு சீர்திருத்தம் குறித்த GST கவுன்சில் நிலைக்குழு உறுப்பினராக நியமித்து உள்ளதாம்”.

- Advertisement -

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
4 bismi svs

இதே சமயம் தமிழ்நாடு அரசுக்கு ஏதாவது ஒரு செக் வைக்கணும்னு மத்திய அரசு டீம் போட்டு ஆலோசித்ததாம். இதில் நம்மகிட்ட இருக்கிற ஒரே ஆயுதம் அமலாக்கத்துறை மட்டும் தான், சில அமைச்சர்கள் சம்மந்தப்பட்ட பைல் அமலாக்கத்துறை கைவசம் இருக்கு அத கையில் எடுக்கலாமா என்று ஆலோசனை செய்தார்களாம்.

தமிழ்நாடு சட்டமன்றம்

இந்த ஆலோசனையிலா மற்ற அமைச்சர்களை பற்றிய வழக்கை தற்போது கையில எடுத்தா நிக்காது, அதனால அவங்க மேல கை வைக்க வேண்டாம், வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கட்டும் பிறகு பார்த்துக்கலாம் என்று முடிவு செய்தார்களாம். அதே சமயம் ஒரு அமைச்சர் மேல இருக்கிற கேஸ் மட்டும் தற்போது முக்கிய கட்டத்தில் இருப்பதால் அவரோட வழக்க மட்டும் கொஞ்சம் கிண்டி விடலாம் என்று முடிவு எடுத்து உள்ளார்களாம்.
இப்படி தான் திமுக ஆட்சியில அமலாக்கத்துறையோட பஸ்ட் ஆசைன்மெண்ட் திட்டமிடப்பட்டிருக்காம். அதுவும் இப்போ உடனே செய்தா உள்ளாட்சி எலெக்சனில் பிரதிபலிக்கும் என்பதால் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து சில வாரங்களில் இதற்கான பணிகளை தொடங்க, அமலாக்கத் துறை திட்டமிட்டு இருக்காம்.

செந்தில் பாலாஜி

இப்படி நம்ம கிட்ட தகவலை சொன்னாப்புல டெல்லி கார அதிகாரி நண்பர், தகவல் எல்லாம் ஓகே…..அந்த ஒரு அமைச்சர் யாருன்னு மட்டும் சொல்லுங்க அப்படின்னு சொன்னதுக்கு, தமிழ்நாட்டுல தொட்டால் ஷாக்கடிக்கும் செந்தில் பாலாஜி தான் அது என்று சொல்லி தொடர்பை துண்டித்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.