‘மைக்’ மோகன் பிறந்த நாள்! ‘ஹரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘மைக்’ மோகன் பிறந்த நாள்! ‘ஹரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! தமிழ்த் திரையுலகில் அதிக எண்ணிக்கையில் வெள்ளிவிழா படங்கள் தந்தவர், இப்போதும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் ‘மைக்’ மோகன். இவரின் பிறந்த நாளான மே.10-ஆம் தேதி, அவரின் ‘ஹரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

திரைத்துறை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு நடிகர் மோகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் மோகன் பல ஏழை பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பை, நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் பல ஏழைப் பெண்களுக்குத் தையல் மெஷின் முதலான உதவிப் பொருட்களையும் வழங்கினார்.

Sri Kumaran Mini HAll Trichy

வெள்ளி விழா நாயகன் மோகன்
வெள்ளி விழா நாயகன் மோகன்

கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள ‘ஹரா’ திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இந்த இருவிழா நிகழ்ச்சியில் பேசியவர்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

நடிகர்-இயக்குநர் பாக்யராஜ் பேசியது,”மோகனுக்கும் எனக்கும் ரசிகர்களாகிய நீங்கள் தான் கடவுள். மோகன் பற்றி யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஒன்று உள்ளது. சினிமாவுக்கென சில பழக்கங்கள் இருக்கும், சம்பிரதாயங்கள் இருக்கும். ஆனால் அதில் எதிலும் மோகன் கலந்துகொள்ள மாட்டார். எப்போதும் தன் வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். இன்றும் பாருங்கள் அவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

Flats in Trichy for Sale

இயக்குநர் விஜய் ஶ்ரீ ஜி வித்தியாசமான படங்கள் செய்து வருகிறார். சாருஹாசனை நாயகனாக்கி ஜெயித்தவர், நிகிலை நாயகனாக்கினார். இப்போது மோகனை மீண்டும் திரைக்குக் கொண்டுவந்துள்ளார். மோகனுக்குக் கண்டிப்பாக இப்படம் திருப்புமுனைப் படமாக இருக்கும். இந்த இசை விழாவைப் போல இந்தப்படத்தின் வெற்றி விழாவும் மிகப் பிரமாண்டமாக நடக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துகள். நன்றி”.

இயக்குநர் விஜய் ஶ்ரீ ஜி பேசியது, “இந்தப்படத்தில் உழைத்த அனைத்துக் கலைஞர்களும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளார்கள். இந்தப் படம் மோகனை வேறு மாதிரியாகக் காட்டும். மோகன் சாரின் வெற்றிக்குக் காரணம் அவரது நடிப்பு தான். அதைத் திரும்ப ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமென்று நினைத்துத் தான் இப்படத்தை எடுத்தேன். ஹரா நிச்சயம் வெல்லும். அதற்கு மிகப்பெரிய காரணம் மோகன் சார் ரசிகர்கள் தான். அனைவருக்கும் நன்றி”.

ஹீரோ மோகன் பேசியது

மோகனின்.... 'ஹரா'
மோகனின்…. ‘ஹரா’

“ரசிகர்களாகிய உங்களுக்கு நான் காலமெல்லாம் கடன் பட்டிருக்கிறேன். இன்றைய 2கே கிட்ஸ் முதல் அனைவருக்கும் பிடிக்கும் படி , விஜய் ஶ்ரீ ஜி படத்தை உருவாக்கியுள்ளார். இன்றைய நாயகன் இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின். அருமையான பாடல்களை தந்துள்ளார். மகளைப் பற்றிய பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நேர்மையாக உண்மையாக ஒரு படத்தை உருவாக்கினால், எந்தக் காலத்திலும் வியாபாரம் இருக்கும் என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. டீசர் பார்த்துப் படத்தை வாங்க கோவை பிரதர்ஸ் முன் வந்துள்ளார்கள், மிகவும் பெருமையாக உள்ளது. உங்கள் ஆசீர்வாதத்தில் இந்தப்படம் ஜூன் 7ம் தேதி திரைக்கு வரும்.இந்தப்படம் எல்லோரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இருக்கும், நன்றி”.

இப்படத்தில் மோகனுடன் அனு மோல், ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் கௌஷிக், ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர், யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: பிரகத் முனியசாமி, படத்தொகுப்பு: குணா.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.