அப்படியே ஜெயலலிதா மாதிரியே மேடையில் தோன்றிய நடிகை காயத்ரி ரகுராம் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் அறிமுக நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் அதிமுக கட்சி சேலை அணிந்து வந்திருந்த புகைப்படம் கவனத்தை பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகள் பரபரப்புக்கும், சுவாரசியத்துக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் தெலங்கானா ஆளுநரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 5) நடைபெற்றது.

ஜெயலலிதா போல அதிமுக கரை சேலையில் 
காயத்ரி ரகுராம்!
ஜெயலலிதா போலஅதிமுக கரை சேலையில் காயத்ரி ரகுராம்!

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக, பாஜக என கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதில் அதிமுக நட்சத்திர பேச்சாளரும், அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளருமான காயத்ரி ரகுராமும் கலந்து கொண்டார்.

அப்போது காயத்ரி ரகுராம் அதிமுகவின் கருப்பு, வெள்ளை, சிவப்பு கரை கொண்ட சேலை அணிந்து வந்து, தான் சார்ந்திருக்கும் கட்சியின் அடையாளத்தை வெளிப்படுத்தியது பலரது கவனத்தையும் பெற்றது.

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம் தற்போது மீண்டும் பழைய நண்பர்களுடன் ஒரே மேடையில் ஆனால் புதிய கட்சியின் அடையாளத்துடன் இருப்பது அரசியல் களத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுபடுத்துவதாக சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.