தம்பி ராமையாவை மிரட்டிய சண்டியர் ஆதவ் அர்ஜுனா!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கண்ணன் ரவி குரூப் தயாரிக்க, தம்பி ராமையா கதை எழுத, இவரின் மகன் உமாபதி ராமையா டைரக்ட் பண்ண, நட்டி [எ] நட்ராஜ், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், ஜாவா சுந்தரேசன் உட்பட பலர் நடித்திருக்கும் படம் ‘டிஎன் 2026- தங்க நட்சத்திரம்’. வருகிற 10-ஆம் தேதி படம் ரிலீசாவதால் ஐந்து நாட்களுக்கு முன்பு படத்தின் டீசர் ரிலீசானது. அதில் அச்சு அசல் தவெக தலைமைத் தற்குறி விஜய் கெட்டப்பில் நட்டி இருந்தார். பேக்ரவுண்டில் விஜய்யை அட்டாக் பண்ணும் பதாகைகளும் இருந்தன.

டிஎன் 2026இதையெல்லாம் சுட்டிக் காட்டி  ’விஜய்யை வெளுத்துக்கட்டும் டிஎன் 2026’ என்ற தலைப்பில் நமது அங்குசம் வெப்சைட்டில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை ஏ.ஆர்.எஸ்.கார்டனில்  நேற்று இரவு நடந்தது. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடை போல செட் போட்டிருந்தார்கள். விழாவுக்கு வந்த நடிகர்கள் அனைவருமே ஒரிஜினல் கட்சினர் சட்டையில்  பேட்ச் குத்தியிருப்பது போல் வந்திருந்தனர். திறந்த ஜீப்பில் ஓட்டுக் கேட்டு வருவது போல வந்திறங்கினார் நட்டி.

இந்த வார அங்குசம் வார இதழில்…

மேடையில் ஹீரோ நட்டி, ஹீரோயின் சிருத்தா ராவ்,  தம்பி ராமையா, இளவரசு, டைரக்டர் உமாபதி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், விஜி சந்திரசேகர், இந்திரஜா ரோபோ சங்கர்,  ஜாவா சுந்தரேசன், கேமராமேன் பி.ஜி.முத்தையா, ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மேத்யூ என  அனைவரும் அமர்ந்த பின் எல்.இ.டி. பொருத்தப்பட்ட பிரச்சார வேனில் ‘டிஎன் 2026’ டிரெய்லர்’ ஸ்கிரீனிங் செய்யப்பட்டது.

டிஎன் 2026படத்தில்  இருதயராஜ் [ நிஜத்தில் சீமான்] கேரக்டரில் நடித்திருப்பதாகச் சொன்ன இளவரசு, நட்டியின் கட்சிப் பெயர் ஆத்திக நாத்திக முன்னேற்றக் கழகம் என்பதையும் இந்தப் படத்தில் யார் மனதையும் டைரக்டர் உமாபதி புண்படுத்தவில்லை என்பதையும் சொன்னார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

”இதுல நடிச்ச பிறகு ஏதாவது ஒரு கட்சியில சேர்ந்துடலாம்னு தோணுது” என்றார் விஜி சந்திரசேகர்.

இறுதியாக மைக் பிடித்த தம்பி ராமையாவோ, “இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்துட்டு தம்பி ஆதவ் அர்ஜுனா எனக்குப் போன் செஞ்சு எங்க தலைவரை கிண்டல் பண்ணிருக்கீங்களான்னு கேட்டாரு. அப்படியெல்லாம் இல்ல தம்பி, 10-ஆம் தேதி படத்தைப் பார்த்துட்டு நீங்களே தெரிஞ்சுக்குவீங்க, ஹேப்பியா ஏத்துக்குவீங்கன்னு சொன்னேன். படத்துல யாரையும் காயப்படுத்தல, காயப்படுத்தணும்கிற நோக்கம் எங்களுக்கில்ல” என ஆதவ்விடம்  சொன்னதாகச்  சொன்னார்  தம்பி ராமையா.

டிஎன் 2026‘தவெக தம்பிகள் கோபப்படுற மாதிரி படத்துல எந்த சீனும் இருக்காது” என பம்மியபடி பேசினார் நட்டி. படத்துல இவரது கேரக்டர் பெயர் ‘கோல்ட் ஸ்டார்’ குல்ஷன்குமாராம்.

தவெகவின் ஆதவ் அர்ஜுனா எப்படிப்பட்ட அயோக்கியன் என்பது தமிழ்நாட்டிற்கே தெரியும். தேர்தல் களத்தை ரத்தக் களறியாக்கும் பேராபத்தை தொடர்ந்து செய்பவன்   என்பதும் தெரியும். அப்படிப்பட்ட ஆதவ் அர்ஜுனா, தம்பி ராமையாவை கண்டிப்பாக  மிரட்டியிருக்கலாம். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் சமாளித்தார் தம்பி ராமையா.

—    ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.