மா.செ.னுலாம் பார்க்க மாட்டாரு … கொடி கட்றதுல இருந்து பம்பரமா சுத்துராரு !
எடப்பாடியாரின் சூறாவளி பயணம் ! பம்பரமாக சுழலும் திருச்சி சீனிவாசன் !
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. போட்டி போட்டுக் கொண்டு மக்களை சந்திக்கும் பயணம் என்பதாக வியூகம் வகுத்து செயல்படத் தொடங்கி விட்டனர்.
அதிமுக வின் எடப்பாடியார் மேற்கொள்ளும் சுற்று பயணங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஆக-23 அன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச விடுக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் என்கின்ற முழக்கத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்க, பொதுக்கூட்டம் தொடர்பான பணிகளில் கட்சித் தொண்டர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் சக்சஸ்ஃபுல் ஃபார்முலாவே அடிப்படைத் தொண்டனும் தலைவனாக முடியும் என்பதுதான். அந்த பார்முலாவின் படி தற்போதைய மாவட்ட செயலாளர் பதவியை அலங்கரிப்பவர் தான் சீனிவாசன். அடிப்படை தொண்டனாக இருந்து, மாமன்ற உறுப்பினராகி, அம்மா பேரவையின் மாவட்ட செயலாளர், மாநகராட்சியின் எதிர்க்கட்சி கொறடா, முன்னாள் துணை மேயர் என்கின்ற பல பதவிகளில் செயல்பட்டு வந்தவர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது சட்டமன்ற வேட்பாளர் பட்டியலில் இவருடைய பெயரும் அடிபட்டது. தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் குட் புக்கிலும் இருந்து வருகிறார். மாவட்டச் செயலாளராக பதவி ஏற்ற பின்பு பல போராட்டங்களை தாண்டி தனக்கு வழங்கப்பட்ட பதவியை நிலைநிறுத்திக் கொள்ள களத்தில் இறங்கி பம்பரமாய் பணியாற்றி வருகிறார்.
தோளோடு தோள் கொடுத்து நிற்கும் நிர்வாகிகள் ஒற்றுமையோடு இருப்பதே அவருடைய தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. தான் மாவட்ட செயலாளர் தானே அனைத்து வேலையும் தனக்கு கீழ் உள்ள நிர்வாகிகள் கவனித்துக் கொள்வார்கள் என்று இருந்து விடாமல், நிகழ்ச்சி சிறப்பாக நடக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தானே நேரடியாக களத்தில் தொண்டர்களுடன் பேனர் கட்டும் பணியிலிருந்து கொடி ஊன்றும் பணி வரை இரவு பகல் பாராது களத்தில் நிற்பது எதிர்க்கட்சியினரை கலங்க அடிக்கும் அளவிற்கு இருக்கிறது என்பதே தற்போதைய திருச்சியின் அரசியலில் ஹாட் டாபிக்.
இந்த வேகத்தையும் தேர்தல் பணிகளையும் தொய்வு ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும் என்பதே திருச்சி ரத்தத்தின் ரத்தங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போதைய மாவட்டச் செயலாளராக வலம் வரும் சீனிவாசன் அதை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
— ரூபன்ஜி
Comments are closed, but trackbacks and pingbacks are open.