எடப்பாடி கே.பழனிசாமி பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் – விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
எடப்பாடி கே.பழனிசாமி பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் – விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவலை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு குறித்து மத்தியக்குற்றப்பிரிவு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பி.மிலானி. இவர் தேனி மாவட்டம் திமுக முன்னாள் மாணவர் அணி அமைப்பாளராக இருந்தவர் . தற்போது தொடர்ந்து தேனி மாவட்ட அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறார்.
இந்த நிலையில் இவர் சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-க்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அண்மையில் அனுப்பி இருந்தார்.
இந்த புகார் மனுவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவுகள் 33 மற்றும் 33 ஏ-ன்படி தாக்கல் செய்த தனது வேட்பு மனுவில் பிரமாண பத்திரத்தில் ஆண்டு வருமானம், அசையா சொத்துகள், கடன் விவரங்கள் குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளார்.’ என்று தெரிவித்துள்ளார்.
அதில் எடப்பாடி தொகுதியில் 2021ம் ஆண்டு போட்டியிட்ட அன்றைய முதல்வரும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது சொத்து மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.
2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு மூன்று கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் 2021 சட்டசபை தேர்தலில் போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் எடப்பாடி பழனிச்சாமியின் சொத்து மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அவரது சொத்து மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
எடப்பாடி பழனிசாமிக்கு 2016 இல் அசையும் சொத்து மதிப்பு 3.14 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு 4.66 கோடியாக இருந்த நிலையில், 2021 இல் குடும்பத்தின் அசையும் சொத்து மதிப்பு 2.01 கோடியாகவும், அசையா சொத்துக்கள் 4.68 கோடியாகவும் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல் 2016-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்த கடன் 33 லட்சம் ஆக இருந்தது. இந்நிலையில் 2021 இல் அவரது கடன் அளவு 29 லட்சத்து 75,000 என்ற அளவில் குறைந்து இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
2016ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில், எடப்பாடி பழனிசாமியின் தாய், மகன், மருமகள் பெயரில் இருந்த சொத்துக்கள் இடம் பெற்றிருந்தன.
2021ம் ஆண்டு வேட்பு மனுவில் மருமகள், மகன் பெயரில் உள்ள சொத்து மதிப்புகள் இடம் பெறவில்லை. 2021 இல் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.
இதனையடுத்து இன்று 28.04.2023 அந்த ஆன்லைன் புகார் மனு குறித்து விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் எண் -1 நீதிபதி கலைவாணி, இந்த மனு குறித்து மத்தியக்குற்றப் பிரிவு வழக்கை நேர்மையாக விசாரித்து, போதிய முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும், அதுகுறித்த அறிக்கையை மே 26 ஆம் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.
மேலும், வழக்கு விசாரணையின் போது மனுதாரர் ஆஜராகுகையில் , அவருக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் ‘ எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்திலிருந்து ஆன்லைன் மூலம் புகார் மனு அளித்துள்ளது , அதிமுக அரசியல் பிரமுகர்கள் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
-சோழன்தேவ்