போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகத்தில் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இம் முகாமில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட 250 நபர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமும் துளசி பார்மசி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமும் இணைந்து நடத்திய இம் மருத்துவ முகாமை மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் துவக்கி வைத்தார்.

இம் முகாமில் கண் தொடர்பான பரிசோதனைகளும், உடல் எடை குறைபாடுகளைக் கண்டறிதல், இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான ஆலோசனைகளும் மேல்சிகிச்சைக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.


இச் சிறப்பு மருத்துவ முகாமில் பொது மேலாளர்கள் ஜே.ஜெபராஜ் நவமணி, கே.முகமது நாசர், முதுநிலை துணை மேலாளர் கே.டி.கோவிந்தராஜன், துணை மேலாளர் எஸ்.ராஜா, உதவி மேலாளர்கள் எஸ்.செந்தில்குமார், எஸ்.ரமேஷ், கே.நாகமுத்து, என்.ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.