மரணத்தின் மர்ம முடிச்சுகளை யார் வந்து அவிழ்க்க இயலும்…???

0

மரணத்தின் மர்ம முடிச்சுகளை யார் வந்து அவிழ்க்க இயலும்…??? 

 

திருச்சி அன்பாலயம் செந்தில்குமார் எனும் மனிதர், நேற்றைய பகல் நேரத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்  அருகே சாலை விபத்தில் அகால மரணம் அடைந்து விட்டார்.

கல்லூரிப் பருவத்தின் படிக்கும் காலத்திலேயே…

அழுக்கடைந்த சாலையோர மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களை நெருங்கிச் சென்று நம்மில் (என்னையும் சேர்த்து தான்) எவருமே செய்யத் தயங்குகின்ற…

தூய்மைப் பணிகளைத் தனது தோள்களில் ஏற்று அவர்களைக் கண் குளிரச் சுத்தப் படுத்தி அவர்களை மனம் குளிர வைத்தவர்.

 

திருச்சி அன்பாலயம் செந்தில்குமார்
திருச்சி அன்பாலயம் செந்தில்குமார்

மழையிலும், வெயிலிலும், காற்றிலும் சாலையோரமாகச் சுருண்டு கிடக்கும் அந்த மிக மிக எளிய ஜீவன் யார்??

இவர் யார்??

இருவர்க்குமான
இணைப்புப் புள்ளி…
இணைப்புப் பந்தம் தான் என்ன???

இன்றளவும்
நம் சமூகத்தில்
அருகிப் போய் விட்ட

மானுட நேசம்
தவிர
மிகப் பெரிதாக
வேறென்ன
இருந்து விடப்
போகிறது???

தன் வாழ்நாளில்
முக்கால் பகுதி
காலங்களில்
ஒரு மனிதன்
இவ்விதமாகவே
இயங்கி விட
முடியுமா என்ன???

இறுதி மூச்சுள்ள வரைக்குமாக
இவ்விதமாகவே
இயங்கி வந்துள்ளார்
அன்பாலயம்
செந்தில்குமார்.

திருச்சி மாத்தூர்
குண்டூரில் ஒரு
மனநலக் காப்பக
இல்லம்.

தஞ்சாவூர் அருகே
மற்றொரு மனநலக் காப்பக இல்லம்.

அந்த
இல்லத்துக்குச்
சென்று வருவதற்கு
மோட்டார் சைக்கிளில் பயணம்
செய்திருக்கிறார்
செந்தில்குமார்.

அப்போது தான்
சாலையின் குறுக்கே திடீரென வந்து விட்ட
ஒரு நபரைக் காக்க வேண்டி…

எதிர்பாராத விதமாக
அந்த நபர் மீதும் மோதி…

விபத்துக்கு உள்ளாகி
விபரீதமாக
அகால மரணம் எய்தியுள்ளார்
திருச்சி அன்பாலயம்
செந்தில்குமார்.

மரணத்தின்
மர்ம முடிச்சுகளை
யார் வந்து அவிழ்க்க
இயலும்…???

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

 

மேலும்  செய்திகள் படிக்க:

https://angusam.com/20-seats-for-bjp-alliance/

அங்குசம் யூடியூப்

https://youtube.com/@AngusamSeithi

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.