அக்னிபாத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவியாளார் / மருந்தாளர் ஆட்சேர்ப்பு பேரணி திருச்சி ஆட்சியர் அறிவிப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு விண்ணப்பித்தல் மற்றும் மருத்துவ உதவியாளார் பொது/மருத்துவ உதவியாளார் மருந்தாளர் ஆட்சேர்ப்பு பேரணி:

இந்திய விமானப்படையினரால் நடத்தப்பட உள்ள அக்னி வீர்வாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு 07.01.2025 முதல் 27.01.2025 வரை  இணையவழி மூலமாக பதிவு செய்யலாம் எனவும் 22.03.2025 முதல் இத்தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இத்தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

அக்னி வீர்வாயு பணிக்கு திருமணம் ஆகாதவராகவும் (ஆண் மற்றும் பெண்) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12- ம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டய படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகளில் 50% மதிப்பெண்களுடன் குறிப்பாக ஆங்கிலபாடத்தில் 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.01.2005 முதல் 01.07.2008 வரையான காலத்தில் பிறந்தவராகவும்  இருக்க வேண்டும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர்(பொது) விண்ணப்பதாரர்களுக்கு (திருமணமாகாதஆண்கள் மட்டும்) 29.01.2025 அன்று ஆட்சேர்ப்பு பேரணி கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்பேரணியில் கலந்து கொள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 50% மதிப்பெண்களுடன் குறிப்பாக ஆங்கிலபாடத்தில் 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 03.07.2004 முதல் 03.07.2008 வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

மேலும் மருத்துவ உதவியாளர் மருந்தாளர் விண்ணப்பதாரர்களுக்கு (ஆண்கள் மட்டும்) 04.02.2025 அன்று ஆட்சேர்ப்பு பேரணி கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில்  நடைபெறவுள்ளது. இப்பேரணியில் கலந்து கொள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 50% மதிப்பெண்களுடன் குறிப்பாக ஆங்கில பாடத்தில் 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதுடன் டிப்ளமோ அல்லது இளங்கலை பார்மசி முடித்திருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள் 03.07.2001 முதல் 03.07.2006 மற்றும் திருமணமான ஆண்கள் 03.07.2001 முதல் 03.07.2004 வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது  0431-2413510, 94990-55901 & 94990-55902 என்றதொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.