அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கட்சி மாறும் அதிமுக தொண்டர்கள் … இப்படி இருந்தால் எப்படி, எடப்பாடியாரே?

திருச்சியில் அடகு நகையை விற்க

துறையூர்  அதிமுக நகர செயலாளர் மீதான அதிருப்தி காரணமாக 22 ஆவது வார்டு கழகச் செயலாளரான அரவிந்தன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பது, துறையூர் நகர அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் நகர அதிமுக செயலாளராக இருந்து மறைந்த செக்கர் ஜெயராமன் என்பவருக்கு பிறகு, கடந்த 4 வருடங்களாக துறையூரைச் சேர்ந்த அமைதி பாலு என்பவர் அதிமுக நகர செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் அதிமுக நகர செயலாளராக பதவி ஏற்றதில் இருந்தே கட்சியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு, துறையூர் நகரத்தில் உள்ள அனைத்து மூத்த நிர்வாகிகள் மற்றும் 24 வார்டு செயலாளர்களும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

துறையூர் நகரக் கழகச் செயலாளரின் பதவிக்கான தேர்தலில் சுமார் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததில் யாருடைய  கருத்தையும் கேட்காமல், சமீபத்தில் மாற்றுக் கட்சியில் (மதிமுக) இருந்து இணைந்த பாலமுருகவேல் என்ற அமைதி பாலு என்பவருக்கு அதிமுக  நகர செயலாளராக பதவி வழங்கியதற்கு வார்டு பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும்; கழகத்தில் நீண்ட காலமாக உழைத்த மற்ற 12 பேரில் யாருக்கு பதவி வழங்கினாலும் ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக உள்ளோம் எனவும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மேலும், முன்னாள் அமைச்சரும் , புறநகர் மாவட்டச் செயலாளரான பரஞ்சோதி இவ்விஷயத்தில் தான்தோன்றித் தனமாக செயல்படுவதாகவும் கூறி அவரைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றி அதில் அனைத்து வார்டு பிரதிநிதிகள் , வார்டு செயலாளர்கள் வரையில் கையெழுத்திட்டு தலைமைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

எடப்பாடிபழனிச்சாமி-அமைதி பாலு
எடப்பாடிபழனிச்சாமி-அமைதி பாலு

முதல்வர் பிறந்தநாள்

நகர செயலருக்கு எதிரான எதிர்ப்பு தொடர்ந்து நீறு பூத்த நெருப்பாக கனன்று வந்த நிலையில், துறையூரில் நடைபெற்ற அதிமுகவின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் கலந்து கொள்ள வருகை தரும் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் முதற்கொண்டு மாவட்ட செயலாளர் வரை  அனைவரையும் தனித்தனியாக வரவேற்றனர்.

தொண்டர்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல், கட்சியின் தலைமை அணுகி வருவதாக அதிருப்தியில் இருந்து வந்த இந்த பூசலின் தீவிரமான வெளிப்பாடாக, தற்போது துறையூர் 22 வது வார்டு நகரக் கழகச் செயலாளர் அரவிந்தன் என்ற இளைஞர் தனது ஆதரவாளர்கள் சுமார் 10 பேருடன் தமிழக வெற்றி கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று  அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் .

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதுகுறித்து அவரிடம் கருத்து கேட்டபோது, “துறையூர் அதிமுக நகர செயலாளராக பதவி வகித்து வரும் அமைதி பாலு என்பவர் அதிமுக என்ற மாபெரும் கட்சியை தொய்வின்றி அனைவருக்கும் உரிய மரியாதை கொடுத்து வழிநடத்துவதில் அக்கறைக் காட்டுவதில்லை. கட்சி நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை யாருக்கும் முன்கூட்டியே தகவல் தருவதில்லை. நோட்டீசும் வழங்குவதில்லை. விளக்கம் கேட்டால் , அதுதான் நான் எல்லாருக்கும் வாட்ஸ் அப்-பில் அனுப்பி விட்டேனே. அதைப் பார்த்து வரவேண்டியதுதானே என அலட்சியமாகவும், யாரையும் கலந்து பேசாமல் தான் தோன்றித்தனமாக செயல்படுகிறார்.

குறிப்பாக தனக்கு வேண்டியவர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே தகவல் தந்துவிட்டு , மற்றவர்களை சிறிதும் மதிப்பதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நகர அதிமுக சார்பில் பேருந்துநிலையம் முன்பு நடைபெற்றது. அப்போது அருகில் இருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்காமல் நிகழ்ச்சியை நடத்தியது கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது போன்று ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்  அனைவரையும் ஒன்று சேர்ப்பதில் அக்கறை காட்டாமல் வெறும் கண்துடைப்பிற்காக மட்டும் அந்த நிகழ்ச்சியை நடத்திவிட்டு சென்று விடுகிறார்.

கடந்த இரு நாட்களுக்கு முன் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு கூட துறையூரில் உள்ள மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலருக்கு கூட்டத்திற்கான நோட்டீசை நகரச் செயலாளர் வழங்கவில்லை என பலர் குறை கூறினர். நாங்களும் கட்சிக்காக எவ்வளவோ விஷயங்களைப் பொறுத்துப் போனோம். நாங்கள் மட்டுமல்லாது அனைத்து வார்டு செயலாளர்களும் நகரச் செயலாளரான அமைதி பாலு மீது அவரது செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியில் வெளியில் சொல்ல முடியாமல் இருந்து வந்தோம். இது குறித்து மாவட்டச் செயலாளரான பரஞ்சோதியிடம் பல முறை நேரில் தெரிவித்தோம். அதற்கு அவர் நகரச்செயலாளரை அனுசரித்து செல்லுங்கள் என பட்டும் படாமல் கூறி வந்தார். கட்சியின் மூத்த நிர்வாகிகளைக்கூட, மதிக்காமல் தான் தோன்றித்தனமாகவே செயல்பட்டு வந்த நகர செயலாளர்,தொடர்ந்து தன்னை அவர் மாற்றிக் கொள்வதாக இல்லை.

மேலும், அடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் துறையூர் நகர்ப்புறப் பகுதியில் நகரச்செயலாளர் அமைதி பாலுவின் மீதான அதிருப்தி காரணமாக , அதிமுக-வின் வாக்கு வங்கியானது பெருமளவில் குறையக்கூடிய வாய்ப்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. இதனால், வேறுவழியின்றி நாங்கள் மாற்றுக்கட்சிக்கு போவது ஒன்றுதான் இதற்கு தீர்வு என முடிவெடுத்து, மார்ச் – 01 அன்று துறையூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் , அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெகன்மோகன் முன்னிலையில், என்னுடன் சேர்ந்த 10 இளைஞர்கள் அனைவரும் தவெக-வில் இணைந்து விட்டோம்” என நீண்ட விளக்கத்தை நமக்கு அளிக்கிறார்.

அதிமுக தொண்டா்கள்அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் அடுத்த தலைமுறைக்கு தங்களது கட்சியை வளர்க்க எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு அதிலும் இளைஞர்களை ஒன்று சேர்த்து திறம்பட கட்சியை முன்னிறுத்துவதில், அக்கறை கொண்டுள்ள இந்த சூழ்நிலையில், அதிலும் குறிப்பாக சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு சில வாரங்களே உள்ள நேரத்தில் அதிமுக நகரச் செயலாளரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து மாற்றுக் கட்சியில் இணைந்த அதிமுக துறையூர் நகர வார்டு செயலாளரின் இத்தகைய செயல் அரசியல் பார்வையாளர்களிடையே பேசு பொருளாக மாறி உள்ளது.

இந்நிகழ்வு துறையூர் நகர அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியை வலுப்படுத்துவதற்காகவும் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளை கைப்பற்றி அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி துறையூர் சட்டமன்றத் தொகுதியின் நிலைமை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு தேவையான அமைப்பு சார் மாற்றங்களை குறிப்பாக துறையூர் நகர அதிமுகவின் மீது கவனம் கொண்டு உரிய மாற்றத்தினை செய்தால் மட்டுமே தொகுதியை தக்க வைக்க முடியும் என இன்னும் கட்சி மாறாமல் கொள்கை பிடிப்போடு காலந்தள்ளும் அதிமுக தொண்டர்களின் ஏக்கமாக தொடர்கிறது.

—    அருண்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.