ஆக.14-ல் ‘ஆலி’

‘மன்ஹர் சினிமாஸ்’ பேனர் தயாரிப்பில் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீசாகிறது ‘ஆலி’ என்ற படம். மலையாள பெண் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன், ஒரே நேரத்தில் மலையாளத்திலும் தமிழிலும் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் பிரஜின், கைலாஷ், லதா தாஸ், டாக்டர் ரஜித்குமார், செளரவ் ஷியாம், மன்ஹர் பிரியதர்ஷன், டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன், கிருஷ்ண பிரசாத் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : ரினாஸ் நாசர், எடிட்டிங் : அபு ஜியாத், இசை : ராமவர்மா தம்புரான், ரத்தீஷ் ராய், ஷ்ரத்தா பார்வதி, பி.ஆர்.ஓ : சக்தி சரவணன்.

‘ஆலி’தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் மதம் மீறிய காதல், அதனால் அந்தக் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகள், அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்த ‘ஆலி’.

—  ஆண்டவர்

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.