அங்குசம் பார்வையில் ‘அமரன்’ !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘அமரன்’

தயாரிப்பு : ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டெர்நேஷனல்& சோனி பிக்சர்ஸ் எண்டெர்டெய்ன்மெண்ட். தமிழ்நாடு ரிலீஸ் : ரெட்ஜெயண்ட் மூவிஸ். டைரக்‌ஷன் : ராஜ்குமார் பெரியசாமி. நடிகர்—நடிகைகள் : சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு,  ஸ்ரீகுமார், கீதா கைலாசம்,[ சிவகார்த்திகேயனின் அம்மா ] ஷியாம் பிரசாத் ராஜகோபால் [ சாய் பல்லவியின் அப்பா ]ஷைருஷ் ஜுட்ஷி , மிர் சல்மான், ஒமர் லத்தீஃப். ஒளிப்பதிவு : சி.எச்.சாய், இசை : ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங் :ஆர்.கலைவாணன், சண்டைப் பயிற்சி : அன்பறிவ் & ஸ்டெஃபன் ரிச்செர். பி.ஆர்.ஓ. சதீஷ்- எஸ் 2 மீடியா

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

நம்ம தமிழ்நாட்டிலிருந்து இந்திய ராணுவத்தில் சேர்ந்து வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதை தான் இந்த ‘அமரன்’ என்பது எல்லோருக்கும் தெரியும். அதை திரை மொழியில் அற்புதமாக பதிவு செய்ய கடுமையான  உழைப்பைத் தந்திருக்கும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் மேஜர் முகுந்தாக வாழ்ந்த கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கும் முதலில் வாழ்த்துக்களையும் மனமுவந்த பாராட்டுக்களையும் தெரிவித்துவிடுவோம்.

[ கதையின் மைய இழையில் மட்டுமல்ல, பிரதான இழையிலும் கூட பெரும் பிழை இருக்கிறது. இதுகுறித்து சில இஸ்லாமிய அமைப்புகளும் விமர்சகர்களும் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.  அதைக் குறித்து இன்னொரு விமர்சனத்திலோ அல்லது இந்த விமர்சனத்தின் பிற்பகுதியிலோ சொல்ல வாய்ப்பிருந்தால் சொல்வோம் ]

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, அதன் பின் உடல்தகுதித் தேர்வு, இதனையடுத்து ராணுவத்தில் சேர்ந்த பின் வைக்கப்படும் உளவியல் தேர்வு, உடல்வலு, உள்ள உறுதி, நாட்டுப் பற்று குறித்த பரிட்சை, இதையெல்லாம் இதுவரை எந்த தமிழ்சினிமாவிலும் நாம் பார்த்ததில்லை. இந்த டீடெய்லான டேட்டாவையும் போகிற போக்கில் சொல்லாமல், காட்சிகள் மூலம் தெளிவாகப் புரிய வைத்ததில் தான் ராஜ்குமார் பெரியசாமியின் திரைக்கதை புத்திக் கூர்மை பளிச்சிடுகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதற்கடுத்து இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அனுமதியுடனும் இந்திய ராணுவத்தின் துணையுடனும்  படப்பிடிப்பு நடத்தப்பட்ட இடங்கள், பயன்படுத்தப்பட்ட ராணுவ வாகனங்கள், தீவிரவாதிகளுடன் ராணுவம் மோதும் சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்களான  நம்ம அன்பறிவ், ஹாலிவுட்டின் ஸ்டெஃபன் ரிச்செர் ஆகியோரின் கடின உழைப்புடன் வடிவமைக்க எடுத்துக் கொண்ட கர்மசிரத்தை, தீவிரவாதிகள் அல்டாஃப் பாபா [ சைருஷ் ஜுட்ஷி] ஆசிஃப் வாஹித் மற்றும் தீவிரவாத இளைஞர்களாக நடித்தவர்களை மிகச் சரியாக தேர்ந்தெடுத்து, அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்ததற்காகவும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு மீண்டும் சபாஷ் போடலாம்.

இதற்கடுத்து மிகமிக பாராட்டுக்குரியவர்களென்றால் முகுந்த் வரதராஜனாக வாழ்ந்திருக்கும் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸாக வாழ்ந்திருக்கும் சாய்பல்லவியும் தான். ராணுவ வீரனாக வேண்டும் என்ற லட்சியம், அதை அடைவதற்கு எடுக்கும் முயற்சி, பயிற்சி, ராணுவத்தில் சேர்ந்த பின், ஒரு நிஜ ராணுவ வீரனின் உண்மையான தேசப்பற்று, நேர்த்தியான உடல் மொழி, தீவிரவாதிகளை அழித்தொழிக்கும் வெறி, மனைவி மற்றும் குழந்தை மீது கொண்ட அன்பு, பாசம்  என சகல ஏரியாவிலும் சல்யூட் அடிக்க வைத்துள்ளார் நம்ம சிவகார்த்திகேயன். இவரது திரை வாழ்க்கையில் இந்த ‘அமரன்’ முக்கியத்துவமானவன், தனித்துவமானவன், மரியாதைக்குரியவன், பெருமைக்குரியவன்.

இந்து ரெபேக்கா வர்கீஸ் = சாய்பல்லவி. முகுந்தின் காதலில் விழும் அழகு, அந்தக் காதலுக்காக பெற்றோரிடமும் சகோதரர்களிடமும் காட்டும் உறுதி, தனது காதல் கல்யாணத்தில் முடிந்ததும் எழும் உற்சாகம், ராணுவப் பயிற்சியின் போது முகுந்தைக் காணும் போது மகிழ்ச்சித் துள்ளல், வீடியோ காலில் முகுந்துடன் விடிய விடிய பேசும் போது முகமலர்ச்சி, என நடிப்பில் வைரமாக ஜொலித்திருக்கிறார் சாய்பல்லவி. இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக, மொத்தப் படத்தின் முதுகெலும்பாக இருப்பது க்ளைமாக்சில்  முகுந்த் இறந்த தகவலை தனது சகோதரன் மூலம் கேட்டதும் உடைந்து, வெடித்து, கதறி அழும் அந்த ஐந்து நிமிட காட்சியில் நடிப்பரசியாக நம் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு கம்பீரமாக உட்கார்ந்துவிட்டார் சாய்பல்லவி என்ற இந்து ரெபேக்கா வர்கீஸ். இந்தக் காட்சியில் பின்னணி இசை இல்லாமல் இருந்தது தான் காட்சியின் ஜீவன். வெல்டன் ஜி.வி.பிரகாஷ்.

ராஜ்குமார் பெரியசாமியின் மனதிற்குள் ஓடிய காட்சிகளை திரையில் கொண்டு வர அசாத்தியமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய். காஷ்மீர் காட்சிகள் முதல், க்ளைமாக்ஸில் சாய்பல்லவி கதறியழும் காட்சியில் முழுத்திரையிலும் அவரை முக்கால் பிரேமிற்குள் காட்டி, அனைவரின் மனசையும் சாய்ச்சுப்புட்டார் சாய். மொத்தம் இரண்டு மணி நேரம் நாற்பெத்து நிமிடங்கள் படம் ஓடினாலும் பார்வையாளனுக்கு சலிப்போ, அயற்சியோ ஏற்படாததற்கு காரணம் எடிட்டர் ஆர்.கலைவாணன் தான்.

தமிழர்களின் கடின உழைப்பு + கூட்டு முயற்சி= ‘அமரன்’.

-மதுரை மாறன்  

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.