இசைக்கு ஏற்றவாறு உடலை அசைத்து, உடல் கட்டுகளை காட்டிய அசர வைத்த ஆணழகன்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சேலத்தில் இசைக்கு ஏற்றவாறு உடலை அசைத்து, தங்களது உடல் கட்டுகளை வெளிக்காட்டிய அசரவைத்த ஆணழகன்கள்.

நான்கு பிரிவுகளில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின்  70வது பிறந்தநாளை முன்னிட்டு  சேலம் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி  சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

அசர வைத்த ஆணழகன்கள்
அசர வைத்த ஆணழகன்கள்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்தப் போட்டியை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.இதற்கான ஏற்பாட்டை சேலம் 60வது கோட்டம் இளைஞர் அணி அமைப்பாளர் அசோக்குமார் செய்திருந்தார்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்த ஆணழகன் போட்டியில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து 200 ஆணழகன்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளுக்கு 3 லட்சம் மதிப்பிலான பரிசுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சீனியர் ஆண்கள் பிரிவு, ஜூனியர்,சப் ஜூனியர் ஆண்கள் பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.

இதில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக 5000, இரண்டாவது பரிசாக 3000, மூன்றாவது பரிசாக 2000 மற்றும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெறும் ஆணழகனுக்கு 50 ஆயிரம் பரிசுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆணழகன்களும் இசைக்கு ஏற்றவாறு தங்களது தனி திறமையை வெளிப்படுத்தும் விதமாக உடல் கட்டுகளை வெளிக்காட்டி அசத்தினர்.

இந்த ஆணழகன் போட்டிக்காக பல மாதங்கள் உழைப்பால் இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களது உடலை தயார்செய்து இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

– சோழன் தேவ்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.