திருச்சி ரவுடி பேபியை தொடர்ந்து அடுத்தது சிக்க போகும் அம்மு ??
திருச்சி ரவுடி பேபியை தொடர்ந்து அடுத்தது சிக்க போகும் அம்மு ??
திருச்சி ஸ்பாக்களில் போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டு- சிக்கிய குடும்ப குத்துவிளக்குகள்…
திருச்சி மாநகர பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஸ்பா சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரங்கள் நடந்து வருகிறது என்ற தகவலின் அடிப்படையில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையிலான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதன்மூலம் திருச்சி மாநகர பகுதிகளில் ஸ்பா சென்டர் மற்றும் தியான சென்டர்களை ரகசியமாக பார்வையிடச் சென்ற தனிப்படை போலீஸ் மற்றொருபுறம் சமூக வலைத்தளங்களின் மூலம் ஸ்பா நடத்தும் நபர்களை தொடர்புகொண்டு எது மாதிரியான சர்வீஸ் ஸ்பாக்களில் கொடுக்கப்படுகிறது என கண்காணிக்கப்பட்டது அதன்மூலம் கடந்த மாதம் திருச்சி மாநகர பகுதிகளில் உறையூர் கண்டோன்மெண்ட் தில்லைநகர் பகுதிகளில் தாசில்தார் குகன் தலைமையிலான தனிப்படையினர் மற்றும் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சென்று ஆய்வு செய்து ஸ்பாக்களுக்கு சீல் வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று 9/12/2020 உறையூரில் பகுதியில் உனா ஸ்பா, தில்லை நகர் பகுதிகளில் குப்தா ஸ்பா, வேதா ஸ்பா, ஆர்ச்சிட் ஸ்பா ஆகிய பெயர்களிலும் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் சன் ஸ்பா போன்றவைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர் பிடித்ததில் சில குடும்ப குத்து விளக்குகளும் சிக்கியதாக தெரியவருகிறது. இதில் சுப்பிரமணியபுரம் பகுதியில் இயங்கிவந்த சன் ஸ்பா ஒன்றில் விபச்சாரம் நடந்து வருவதாக வருவதாக சதீஷ்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய ரய்டில் டிக் டாக் புகழ் சூர்யா(36), மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த தினேஷ் போன்ற சிலரை போலீசார் கைது செய்தனர்.
யார் இந்த டிக் டாக் சூர்யா?
சமூக வலைத்தளங்களில் டிக்டாக், யூட்டியூப் போன்றவற்றில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் சூர்யா.
சமீப காலமாக தமிழக காவல்துறை ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்பவரையும் பார்ப்போரையும் மூன்றாவது கண்ணால் கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் பொழுதுபோக்காக செல்போனையே உற்று கவனித்து வருகின்றனர் அதிலும் இளசுகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் ஊடுருவி கொண்டே இருந்து வருகின்றனர் இவற்றைப் பயன்படுத்தி சமீபகாலமாக டிக் டாக் சூர்யா சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யும் வீடியோக்கள் அனைத்தும் ஆபாசமான வீடியோக்கள் ஆக இருந்து வந்தது.
அதன் மூலம் காவல்துறையினர் சூர்யா மற்றும் அவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவு செய்யும் நபர்களை குறிவைத்து தூக்கியது…
மேலும் தில்லைநகர் பகுதியில் ஸ்பா ஒன்றில் (25 வயது) மதிக்கத்தக்க வைத்து இளம் பெண்களை விபச்சாரத்திற்கு பயன்படுத்திய முக்கிய குற்றவாளியான அம்முனி அம்மு என்பவரை காவல்துறை வலைவிரித்து தேடி வருகிறது..
யார் இந்த அம்முனி அம்மு?
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்ப சூழ்நிலை காரணமாக மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களை குறிவைத்து விபச்சாரத்திற்கு பயன்படுத்திவரும் கும்பலை சேர்ந்த நபர் தான்.. இந்த அம்முனி அம்மு.. போலீசார் ரைடில் சிக்காமல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
திருச்சி போலீசார் ஏற்கனவே நடத்திய சோதனையில் பிடிபட்ட பெண்கள் முழுவதும் வடமாநில பெண்களாக இருந்து வந்த நிலையில் தற்போது பிடிபட்ட பெண்கள் அனைவரும் தமிழகத்தை மற்றும் திருச்சி புறநகர் பகுதியை சேர்ந்த பெண்களாக இருந்துள்ளனர் என்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இது தொடர்பாக மாநகர காவல் ஆணையரிடம் பேசியபோது..

திருச்சி மாவட்டத்தில் மற்றும் மாநகர பகுதியில் சமீபகாலமாக தனிப்படை போலீசார் யோகாலயம் மற்றும் ஸ்பா சென்டர் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவோரை கையும் களவுமாக பிடித்து வருகின்றனர்..
இந்நிலையில் மாநகர பகுதியில் ஸ்பா நடத்தும் நபர்களை நாங்கள் கணக்கெடுத்து உள்ளோம். அவர்களில் யார் யார் சட்டரீதியாக அனுமதி பெற்று நடத்துகிறார்கள் என்று ரகசிய விசாரணை செய்து வருகின்றோம். சிலர் மாநகராட்சியின் மூலமா புரோபர்டி Tax மட்டும் கட்டிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் இதுபோன்ற மசாஜ் சென்டரை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு கட்டிட வசதி மற்றும் அலுவலக வசதியை அளிக்கும் உரிமையாளர்கள் மீது விரைவில் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று கூறினார்.
*ஜித்தன்*