ஸ்பா ரவுடி பேபி சூர்யா சொல்லும் அந்த நபர் யார் ?
ஸ்பா ரவுடி பேபி சூர்யா சொல்லும் அந்த நபர் யார் ?
திருச்சி மாநகர பகுதியில் கடந்த 9/12/2020 அன்று மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் மாநகர பகுதியில் யோகாலயம், ஸ்பா என்ற பெயரில் விபச்சார விடுதியாக இயங்கிவரும் நிறுவனங்களை போலீசார் அதிரடி ஆய்வு செய்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதில் சுப்ரமணியபுரம் சன் ஸ்பா ஒன்றில் போலீசார் அதிரடி ஆய்வு செய்தபோது டிக் டாக் புகழ் சூர்யா சிக்கினார் இதனைத் தொடர்ந்து போலீசார் சூர்யாவையும் விசாரணைக்கு கொண்டு சென்றனர்.
இதுபற்றி சூர்யா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீடியோவாக பேசி நடந்தவைகளைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார்.
அந்த வீடியோவில் டிக் டாக் சூர்யா பேசியபோது..
அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் டிக் டாக் சூர்யா, நடந்த நிகழ்வுக்காக எனக்காக ரொம்ப பேர் பிரார்த்தனை பண்ணிட்டீங்க சில பேர் சந்தோசமும் அடைந்தீர்கள். சந்தோசம்,
இப்ப நான் எதுக்கு இந்த வீடியோவ போடுற னா நடந்த உண்மைகள் என்னவென்று நான் சொன்னா மட்டும்தான் உங்களுக்கு தெரியும். புரியும், மீடியா இருக்கிறத இல்லைனும், இல்லாதது இருக்கணும் போடுவாங்க, சில நேரத்துல உண்மையை உண்மையாகவும் போடுவாங்க ஆனா மற்றொரு நினைக்கிற மாதிரி எதுவும் அன்றைக்கு நடக்கல..
*ஆறு மணி நேரம் போலீஸ் கஸ்டடி என்ன நடந்தது?*
ஒரு குற்றவாளி மீது தப்பு இல்லனா வெளியில் வரவே முடியாது.. அப்படியே இருக்கும் நிலையில போலீஸ் கஸ்டடியில் 6 மணி நேரம் மட்டும் தான் இருந்தேன். எதற்கு அந்த ஆறு மணி நேரம்ன்ன., போலீஸ் என்ன பத்தி டிடிஎல் விசாரிச்சாங்க எதற்காக திருச்சி வந்ததாக கேட்டாங்க கொரோனா டெஸ்ட் எடுக்குறதுக்கும் என் மீது தப்பு இல்லை என்பதை நிரூபிக்கிறதுக்கும் இந்த ஆறு மணி நேரம் ஆகிடுச்சு..
என்ன நடந்துச்சுன்னு நான் போனது ஸ்பா தான் ஸ்பாவோட ஓனரும் நானும் ஃப்ரெண்ட், அவர் டிக்டாக்கில் எனக்கு ஃப்ரெண்ட், அவங்க ஒரு பைனான்ஸ் பண்ணுறவங்க. நான் எப்போ திருச்சி போனாலும்மே, கோயிலுக்கு போனாலும்மே, அம்மா வீட்டுக்கு போனாலும்மே அன் டைம் ஆகிடுச்சு நா, அவங்க ஸ்டாஃப் கிட்ட அவங்க எல்லாம் தெரபிஸ்ட் தான் அதற்கான சர்டிபிகேட் எல்லா வச்சிருக்காங்க எல்லாத்துக்கும் தயார் நிலையில் இருக்கிற நபர் தான் அவர்.. அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை.
அவங்க பைனான்ஸ் பண்ணுறதனால நான் அவங்ககிட்ட கோயிலுக்கு போகணும் பணம் கொஞ்சம் தேவைப்படுதுன்னு கேட்டிருந்தேன்.
நல்லா கேட்டுக்குங்க நான் கோயிலுக்கு போறேன் முதல் நாள்தான் பஸ்ல வீடியோ போட்டுட்டு போறேன் மறுநாள்தான் இந்த பிரச்சனை நடக்குது. முதல் நான் போறப்போ அன் டைம் ஆயிடுச்சுன்னு அவங்க ஸ்டாஃப் ரூம்ல போய் இருந்துட்டு குளிச்சிட்டு கிளம்பிட்டு எனக்கு பணம் வேணும் கேட்கும் போதுதான் அவங்க வெளியூரில் இருக்கிறதா சொன்னாங்க. பின்னர் அவங்களே மேனேஜர் பையன்கிட்ட சொல்றேன் சொன்னாங்க நீ பணத்தை வாங்கிக்கொடி நு சொன்னாங்க. நான் எதார்த்தமா மேல போறேன் அது ஸ்பானு எனக்கு நல்லாவே தெரியும்.. அதெல்லாம் தெரியாதுன்னு நா பொய் சொல்லமாட்டேன். ஸ்பா இருக்கிறது எனக்கு தெரியும் ஏன்னா அவங்க ஒரு தெரபிஸ்ட் வச்சி பண்ணுறாங்க அதற்கான லைசென்ஸ் எல்லா அவங்க கிட்ட இருக்கு. பக்காவா வச்சிதான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஆனா இது வேறு ஒருத்தவங்களுடைய ஸ்பா. அதனால 10 மணிக்கு தா பணம் கிடைக்கும் என்கிறதுநால நான் அந்த பையனுக்கு கால் பண்ண அவர் வெளியில இருக்கிற தான் சொன்னாரு. வெயிட் பண்ணுங்க கா நான் வந்துவிடுகிறேன் சொன்னாரு. சரின்னு நான் அங்கு உள்ள சோபாவில உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தேன் போன்ல. அப்ப ரெண்டு பேரு அந்தப் பையன கூட்டிட்டு வந்தாங்க மஃப்டில ரெண்டு பேரு சட்டையை பிடிச்சு கூட்டிட்டு வந்தாங்க எதுக்கு இப்படி வராங்கனு நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன்.
வந்தவங்க என்னோட மொபைல பிடுங்கிகிட்டாங்க என்னைய பேச விடல. ரொம்ப நேரமா என்ன யாருன்னு அவங்களுக்கு தெரியல. இன்னொருத்தவங்கதான் சார் இவங்க டிக் டாக் சூர்யா நு சொன்னாங்க. உடனே ஏன் சூர்யா நீங்க எங்க இங்கன்னு கேட்டாங்க நான் அதுக்கு சார் இவங்க என்னோட பிரண்டு அதனால நான் திருச்சி எப்போ வந்தாலும் இவங்கள பார்த்து விட்டு போவேன் சொன்னேன். ஆனா நான் போயிருந்தது வேற ஸ்பா அதற்கான லைசென்ஸ் அவங்ககிட்ட இல்லைன்னு எனக்கு சத்தியமா தெரியாது.. சார் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க நான் சொன்னேன் ஆனா அவங்க என்ன கொஞ்சம் கூட பேச விடல. என்னோட மொபைலை கூட பிடுங்கி கிட்டாங்க, என்னோட ஹஸ்பெண்ட் பேசிகிட்டு இருக்கிறதா அவங்க செல் ல பிடுங்கி கிட்டாங்க நான் உடனே அவங்க கிட்ட ஏன் சார் இப்படி பண்ணுறீங்க நான் எந்த ஜென்ட்ஸ் கூடயும் இல்ல என்கிட்ட காண்டம்ஸ் கூட பயன்படுத்தின மாதிரி எதுவும் இல்ல, நான் யார் கூடவாது தப்பா இருந்தன நீங்க இப்படி செய்யலாம் என்று சொல்றப்ப இல்ல சூர்யா உங்க மேல தப்பு இல்லனா நீங்க கோர்ட்டுக்கு வந்து நீதிபதி முன்னாடி சொல்லுங்க சொன்னாங்க.
உங்களுடைய தரப்பு வாதத்தை அங்க பேசலாம் சொன்னாங்க. சரின்னு என்ன கூட்டிட்டு போனவங்க என்ன கூட்டிட்டு போய் ஒரு மண்டபத்தில் வச்சிருந்தாங்க திருப்பி ஸ்டேஷன் கூட்டிட்டு போனாங்க. அப்போ 30 பேர் கிட்ட பிரச்சனை இருக்கிறது எனக்கு தெரியாது. போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போனாங்க விசாரிச்சாங்க எல்லாம் பண்ணுனாங்க என்னுடைய ஹஸ்பண்ட் சித்தாந்தருக்கு முதல்ல மனசார நன்றிய சொல்லிக்கிறேன்.
அதுக்கு அடுத்து என்னுடைய சகோதரர் குமரேசன் அவர் என்னுடைய சகோதரர் அல்ல ஏன் கருவில் சுமந்து பெக்காத தலைச்சன் மகன் நட்பு உறவு எல்லாம் பணம் காசு இருந்தா தான் மதிப்பு தெரியும் அதெல்லாம் இல்லாதபோதுதான் அவங்களா யாருன்னு தெரியும் என்னுடைய சகோதரன் குமரேசன் அவர் கேமராமேன் தான் அவனுக்கு குடும்ப பக்குவம் நா என்னனு தெரியாது அவன் ஒரு விளையாட்டு பிள்ளை ஆனா என் மீது ரொம்ப உயிரா இருப்பான் அவங்க வீட்டுக்கு நான் போனா ஊட்டி வீட்டுக்கா நு சொல்லுவா நான் அவனுக்கு ஊட்டி விடுவேன் எனக்கு அவன் ஊட்டி விடுவா அவங்க மனைவிக்கு நான் ஊட்டி விடுவேன்.
குடும்பமே ஒரு அன்புக்காக ஏங்குன குடும்பம் உண்மையாகவே சொல்கிறேன் அவன் எனக்கு ஒரு சகோதரனாய் கிடைச்சிருக்கும் என்கிறதற்கு கடவுளுக்கு நான் நன்றியை சொல்லுறேன் சித்தாந்தருக்கு என்னன்னு பண்றதுன்னு தெரியாம என் செல்லு வேற சுவிட்ச் ஆப்ல இருந்ததால வேற ஒருத்தருக்கு போன் பண்ணி கேட்கிற போ ஆபத்து நேரத்தில் இருக்கிறது கூட புரியாம நையாண்டி பன்னி பேசியிருக்காங்க சிரிச்சு இருக்காங்க அவளுக்கு வேணும் அப்படி இப்படி பேசி இருக்காங்க.
*இதே ஆபத்து கொஞ்ச நாள்ல அவர்களுக்கும் வரும். ஏன்னா ஒன்னும் செய்யாத எனக்கே இந்த நிலைமை நா, இதை எல்லாம் பண்ணிட்டு இருக்கிற அவர்களுக்கும் வரும்..*
என்னுடைய சகோதரனும் என்னுடைய கணவரும் சித்தானந்தர் இருவரும் லாயர் வைத்து கையில காசு கூட இல்லை ஏன்னா நாங்க இப்பதான் வீட்டுக்கு செலவு ஆனதனால அமௌன்ட்லாம் கொஞ்சம் வெளியில இருந்து வர வேண்டியது இருக்கு. உடனே எனது சகோதரன் கேமராமேன் குமரேசன் ஒரு ப்ரோக்ராம் போனதுல அந்த அட்வான்ஸ் காசு வாங்கிகிட்டு உடனே லாயரை அழைச்சிட்டு வந்து என்ன வெளியில கொண்டு வந்தாங்க..
திருச்சியில தனிப்படை போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில் சிக்கிய நபர்கள் அளித்த வாக்குமூலத்தை வைத்து போலீசார் ஒருபுறம் துப்பு துலக்க மற்றொருபுறம் டிக் டாக் சூர்யா அவருக்குத் தெரிந்த நபரும் இது மாதிரியான தவறான செயல்களில் செய்து வருகிறார் என்று வீடியோ மூலம் கோரி சமூக வலைத்தளங்களில் பரப்பி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக் டாக் சூர்யா கை காட்டும் அந்த நபர் யார்?- தொடருமா போலீஸ் விசாரணை பொறுத்திருந்து பார்ப்போம்…
*ஜித்தன்*