வித்தியாசமான வேட்பாளர்தான் கிருஷ்ணகிரி வித்யா ராணி
சந்தன வீரப்பன் ஒரு சமூக விரோதி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவரைச் சுட்டுக்கொன்றது. அப்போதைய அரசு.அவரின் கொள்கைபடிதான் நாம் தமிழர் கட்சி பயணிக்கிறது என்றார் சீமான்.
வித்தியாசமான வேட்பாளர்தான் கிருஷ்ணகிரி வித்யா ராணி
வீரப்பன் நினைவிடத்தில் ஆசீர்வாதம் ! பவுன்சர்கள் புடை சூழ வேட்புமனு தாக்கல் ! அப்பா வீரப்பன் கொள்கைப்படிதான் நாம் தமிழர் கட்சி இயங்குது , ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு நலனுக்காகப் போராடிதான் கேட்டு பெறுகிறார் முதல்வர், இங்கு சரி செய்துவிட்டுத்தான் (பாஜகவுக்கு) அங்கு செல்வேன். தொகுதிக்கு செய்ய போகும் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பேன். வீரப்பன் மகள் தடாலடி !
கிருஷ்ணகிரி தொகுதி நா.த.க., வேட்பாளராக, சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யாராணி களமிறக்கப்பட்டுள்ளார். வீரப்பனுக்கு வித்யா ராணி, விஜயலட்சுமி என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்களில் வித்யா ராணி, 4 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து பாஜக ஓபிசி அணியின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் 4 ஆண்டுகளாகியும் அவருக்கு எந்த முக்கிய பொறுப்புகளும் கொடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த வித்யா ராணி பாஜகவிலிருந்து ஒதுங்கியே இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேசியிருந்த நிலையில் தற்போது கிருஷ்ணகிரி நா.த.க வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்
இந்த நிலையில், மேட்டூர் மூலக்காட்டில் வீரப்பன் நினைவிடத்தில் வேட்பு மனுவை வைத்து வணங்கி விட்டு ‘மொழி காக்க, இனம் காக்க, மண் காக்க, மானம் காக்க… இன்னுயிர் நீத்த மாவீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்’’ என்று கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உறுதி மொழியும் எடுத்துக்கொண்டார்.
அதன் பிறகு, வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக கிருஷ்ணகிரியில் இருக்கின்ற நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இருந்து இளைஞர்கள் புடைசூழ காரின் ‘சன் ரூஃப்’ வழியாக நின்றபடி கையெடுத்துக் கும்பிட்டப்படியே பயணித்தார் வித்யா ராணி. அப்போது பாதுக்காப்புக்காக காரின் இருபக்கமும் பௌன்சர்கள் தொங்கிக்கொண்டு வந்தனர். முன்பக்கம் வீரப்பன் பேனர் கட்டப்பட்டிருந்தது. மாமன்னன் அருண்மொழிச் சோழன் வேடம், திருவள்ளுவர் வேடம், அம்பேத்கர் வேடம் அணிந்தபடியும், வழிநெடுக பட்டாசு வெடித்தும், மேளத்தாளம் முழங்க நாம் தமிழர் கட்சியினர் அமர்க்களப்படுத்தி வித்யா ராணியை அழைத்து சென்றனர். வேட்பு மனுவை தாக்கல் செய்தபோதும், தனது தந்தை வீரப்பன் மீது சபதம் எடுத்துக்கொண்டார் வித்யா ராணி.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் – என் தந்தையின் நோக்கத்தையும் அவருடைய சுதந்திரமான வாழ்க்கையை ஒவ்வொரு அடித்தட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து அரசியலுக்கு வந்தேன். அவரது உயிரான என்னை கிருஷ்ணகிரி மக்களுக்கு தொண்டாற்ற அர்ப்பணித்துக் கொண்டேன் நம் குல சாமி வீரப்பன் கொள்கைகளின்படி இயங்குகிறது நாம் தமிழர் கட்சி எனக்கூறி வாய்ப்பளித்த சித்தப்பா சீமான், சித்தி கயல்விழி, ஆகியோருக்கு நன்றிகள் என்றார். மேலும்,
இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதற்கு என்னுடைய அப்பாவின் ஆசிர்வாதமும் ஒரு காரணம்.இத்தொகுதி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த என் உயிரை கொடுத்து பணியாற்றுவேன். நீங்கள் அனைவரும் எனக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் நான் உங்களுக்குச் சேவை செய்ய முடியும். அப்பாவின் கொள்கையை நிறைவேற்ற முடியும். என்றார்.
பாஜகவிலிருந்து நாம் தமிழர் கட்சிக்கு வந்தது ஏன்? என்ற கேள்விக்கு. கிருஷ்ணகிரி கள நிலவரம் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறது. இந்தப் பகுதியில் முக்கால்வாசி என் அப்பா வீரப்பன் வாழ்ந்த பகுதி. விவசாயம் சார்ந்த பகுதிகள். ஏன் இந்த முறை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் என கேட்கிறார்கள். இதில் எந்த முரண்பாடும் இல்லை. தேசியத்திற்கும் தேசத்திற்குமான அரசியல் கட்சி என நினைத்து பாஜகவிற்கு போனேன். ஆனால் ஒவ்வொரு விஷயங்களையும் நாம் தேச தலைமைகிட்ட இருந்து போராடி பெற வேண்டிய சூழலை முதல்வர் ஸ்டாலினிடம் நான் பார்த்துள்ளேன். நாம் தமிழர் கட்சி தமிழகத்திற்கு தமிழக மக்களுக்கு போராடும் முதன்மையான அரசியல் கட்சி , இங்கு சரி செய்துவிட்டுத்தான் அடுத்து (பாஜகவுக்கு) செல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளேன். எங்களுடைய கொள்கைதான் சின்னம் எங்கள் சின்னத்தை மக்கள் தேடி ஓட்டு போடுவார்கள். இந்த தொகுதிக்கு செய்ய போகும் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பேன் என்றார்.
சந்தன வீரப்பன் ஒரு சமூக விரோதி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவரைச் சுட்டுக்கொன்றது. அப்போதைய அரசு.அவரின் கொள்கைபடிதான் நாம் தமிழர் கட்சி பயணிக்கிறது என சீமான் சொன்னதாகவும் முதல்வர் ஸ்டாலின் போராடித்தான் நிதியைப் பெற்று வருகிறார் என்று ஆதரவாகவும் இங்கு சரி செய்து விட்டுதான் அங்கு (பாஜகவுக்கு ) செல்வேன் என்றதெல்லாம் ஏகப்பட்ட முரண்கள் தான்.
கே.எம்.ஜி.