வாரிசு அரசியல் குறித்து வகுப்பு எடுத்த வாத்தியார்கள் அண்ணாமலையும் அண்ணன் ஜெயக்குமாரும் !

சௌமியாவிற்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு திருமணமாகி அந்த குழந்தை இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை வாரிசு அரசியலுடன் ஒப்பிடுவது ...

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வாரிசு அரசியல் குறித்து வகுப்பு எடுத்த வாத்தியார்கள் அண்ணாமலையும் அண்ணன் ஜெயக்குமாரும் !

பிள்ளைகள் பெற்று பின்னர் அரசியலுக்கு வந்ததால் அது வாரிசு அரசியல் இல்லை ! “எடப்பாடி என் மகனுக்கு சீட் கொடுப்பதால் அது வாரிசு அரசியலில் வராது” – ஜெயக்குமார், அண்ணாமலை புது விளக்கம்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மகளும் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி மனைவி சௌமியா அன்புமணி பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக தர்மபுரியில் களம் இறக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தருமபுரியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி வாரிசு அரசியலில் வரமாட்டார் எனவும் அவர் பசுமை இயக்கத்திற்காக பணியாற்றியவர் எனவும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை தெற்கு தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA Alliance) செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது, “தருமபுரியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி வாரிசு அரசியலில் வரமாட்டார். அவர், பசுமை இயக்கத்திற்காக பணியாற்றியுள்ளார். சௌமியாவிற்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு திருமணமாகி அந்த குழந்தை இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை வாரிசு அரசியலுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது” என்றார்.

முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் தென்சென்னையில் அதிமுக வேட்பாளராக களம் காண்பது குறித்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ”என் மகன் ஜெயவர்தன் வாரிசு அரசியலில் வரமாட்டார். ஜெயலலிதா சீட் கொடுத்தது போல் எடப்பாடி பழனிச்சாமி சீட் கொடுத்தார். அதனால், அது வாரிசு அரசியல் ஆகாது. வாரிசு அரசியல் கட்சி திமுகதான். உதயநிதியை அவர் அப்பா ஸ்டாலின் சீட் கொடுத்ததால் அதுதான் வாரிசு அரசியல்” என்று வாரிசு அரசியலுக்கு புது விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

கே.எம்.ஜி.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.