அங்குசம் பார்வையில் வெப்பம் குளிர் மழை !
ஊர் வம்பு கேட்பதில் மும்முரம் காட்டும் எம்.எஸ்.பாஸ்கரின் கேரக்டர் வடிவமைப்பு கச்சிதம். மருமகளை கரித்துக் கொட்டும் மாமியாராக ரமா மட்டும் என்ன சும்மாவா? சும்மா சுர்ர்…
அங்குசம் பார்வையில் வெப்பம் குளிர் மழை !
தயாரிப்பு: ஹேஷ்டேக் எஃப்டி எஃப் எஸ் புரொடக்ஷன்ஸ்’ திரவ். டைரக்ஷன்: பாஸ்கல் வேதமுத்து. நடிகர்—நடிகைகள்: திரவ், இஸ்மத்பானு, எம்.எஸ்.பாஸ்கர், ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி. ஒளிப்பதிவு: ப்ரித்வி ராஜேந்திரன், இசை: சங்கர் ரங்கராஜன், காஸ்ட்யூம் டிசைனர்: கீர்த்தனா, ஆர்ட் டைரக்டர்: பாலசந்தர், எடிட்டிங்: திரவ். பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா, அப்துல்நாசர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கிராமம் தான் கதைக்களம். திரவ்—இஸ்மத்பானு தம்பதிகளுக்கு கல்யாணமாகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் மாமியாரின் ( ரமா) இம்சைக்குள்ளாகிறார் இஸ்மத் பானு. ஊராரும் திரவ்வை கேவலமாகப் பேசுகிறார்கள். யாரிடம் குறை, அவர்களுக்கு குழந்தை பிறந்ததா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘வெப்பம்—குளிர்—மழை’.
கிராமத்து தம்பதிகளாக நன்றாக மேட்ச் ஆகியிருக்கிறார்கள் திரவ்வும் இஸ்மத் பானுவும். அதிலும் புதுமுகம் என்ற பதட்டமோ, பயமோ இல்லாமல் கிராமத்து இளைஞனாகவே மாறி கவனம் ஈர்க்கிறார் திரவ். அதிலும் மதுரை ஆஸ்பத்திரியில் விந்தணு டெஸ்ட் எடுக்கும் சீனில் வெளுத்துக்கட்டிவிட்டார். அவரது உடல்மொழி, டயலாக் டெலிவரி எல்லாமே கனகச்சிதமாக இருக்கிறது. இவரைவிட ஒருபடி மேலே ஸ்கோர் பண்ணியிருக்கிறார் இஸ்மத் பானு. முகமும் களையாக இருக்கு, லட்சணமா இருக்கு. நடிப்பும் நல்லா வருது.
ஊர் வம்பு கேட்பதில் மும்முரம் காட்டும் எம்.எஸ்.பாஸ்கரின் கேரக்டர் வடிவமைப்பு கச்சிதம். மருமகளை கரித்துக் கொட்டும் மாமியாராக ரமா மட்டும் என்ன சும்மாவா? சும்மா சுர்ர் …
வலிந்து திணிக்கப்பட்ட பாடல்கள், எரிச்சலூட்டும் சீன்கள் இல்லாமல் கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்வியலை நன்றாகவே திரையில் கொண்டு வந்துள்ளார் டைரக்டர் பாஸ்கல் வேதமுத்து. பல காட்சிகளில் கேமரா கோணம் அருமையாக வைத்திருக்கிறார் ப்ரித்வி ராஜேந்திரன்.
அறிவியல் தரவுகளின் அடிப்படையில் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது என டைட்டில் ஆரம்பமாகும் முன்பே சொல்கிறார் பாஸ்கல் வேதமுத்து. ஆனால் ஊசி மூலம் இஸ்மத் பானு கர்ப்பமாகி குழந்தையும் பெறுகிறார். கணவன் அனுமதி இல்லாமல் இதெல்லாம் செய்வது சட்டவிரோதம் என்பது டைரக்டருக்குத் தெரியாமல் போனது தான் ஆச்சர்யம்.
இருந்தாலும் மற்றபடி பெரிதாக ஒன்றும் பழுதில்லை.
மதுரை மாறன்