அங்குசம் பார்வையில் ‘நேற்று இந்த நேரம்’ !

திரைக்கதையில் க்ரைம் & த்ரில்லிங்கை சரியாக மிக்ஸ் பண்ணி, சீட்டைவிட்டு எழுந்து போகவிடாமல் செய்த வகையில் ஜெயித்திருக்கிறார் டைரக்டர் ரோஷன்.

0

அங்குசம் பார்வையில் ‘நேற்று இந்த நேரம்’ !

யாரிப்பு: ’க்ளாப் இன் ஃபில்மோடெய்ன்மெண்ட்’ கே.ஆர்.நவீன்குமார். டைரக்‌ஷன்: ரோஷன் கே.ஆர். எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: லால்குடி எம்.ஹரிகரன். நடிகர்—நடிகைகள்: ஷாரிக் ஹசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா. ஒளிப்பதிவு: விஷால் எம்., இசை: கெவின். என்., எடிட்டிங்: கோவிந்த்.பி.ஆர்.ஓ.சதிஷ்வரன்

2 dhanalakshmi joseph

மூன்று லவ் ஜோடிகள்  ஊட்டிக்கு ஜாலி ட்ரிப் போகிறார்கள். இதில் ஷாரிக் ஹசன் ரொம்ப பணக்காரப் பையன். ஹரிதாவை தீவிரமாக லவ் பண்ணுகிறார். ஹரிதாவின் பிறந்த நாளுக்கு தங்கச் சங்கிலி பரிசளிக்கிறார். ஒருகட்டத்தில் ”நம்ம கல்யாணம் எப்போ?” என ஹரிதா கேட்க, “கல்யாணமெல்லாம் எனக்கு செட்டாகாது. இப்படியே ரிலேசன்ஷிப்பில் இருப்போம். இல்லேன்னா விலகிருவோம்” என்கிறார் ஷாரிக். இதனால் அதிர்ச்சியாகிறார் ஹரிதா. அன்று இரவு எல்லோரும் சரக்கடிக்கிறார்கள்.

விடிந்தால்… ஷாரிக்கை காணவில்லை. இதை விசாரிக்க ரிசார்ட்டுக்கு வருகிறார்கள் இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும். மீதி இருக்கும் ஐந்து பேரிடமும் தனித்தனியாக விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர். விசாரணை நீண்டு கொண்டே போகும் போது, இன்னொரு இளைஞனும்  காணாமல் போகிறார்.

- Advertisement -

- Advertisement -

இரண்டு பேரின் கதி என்னாச்சு? என்பதற்கு விடை தான் இந்த ‘நேற்று இந்த நேரம்’.

4 bismi svs

சென்னையில் நான்கைந்து சீன்கள் தான். மற்றதெல்லாம் ஊட்டியில் தான், அதிலும் ஒரு பங்களாவில் தான் ஒன்றே முக்கால் மணி நேரம் ஷூட் பண்ணியிருப்பதால் பட்ஜெட் ஒன்றும் பெரியளவில் இருந்திருக்காது. அதே போல் நடிகர்—நடிகைகளில் ‘பிக்பாஸ் ஃபேமஸ்’ ஷாரிக் ஹசனைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே புதுமுகங்கள் என்பதால், அந்த வகையிலும் சம்பளச் செலவு குறைவு.

படத்தின் முக்கால்வாசி சீன்கள் அந்த பங்களாவுக்குள், அதிலும் ஒரு ஹாலுக்குள்ளேயே நகர்வது லேசான அலுப்பைத் தந்தாலும் திரைக்கதையில் க்ரைம் & த்ரில்லிங்கை சரியாக மிக்ஸ் பண்ணி, சீட்டைவிட்டு எழுந்து போகவிடாமல் செய்த வகையில் ஜெயித்திருக்கிறார் டைரக்டர் ரோஷன். அதிலும் இடைவேளைக்குப் பின் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து, கனகச்சிதமாக படத்தைக் கொண்டு போகிறார் டைரக்டர். க்ளைமாக்ஸ் தான் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

ஹரிதாவும் மோனிகா ரமேஷும் நடிப்பில் டிஸ்டிங்ஷனில் பாஸாகியிருக்கிறார்கள். பரவாயில்ல.. இப்போது சினிமாவுக்கு வரும் இளம் நடிகைகள் எல்லாம் சதையையும் க்ளாமரையும் மட்டும் நம்பாமல், கதையை மட்டுமே நம்பி, நடிப்பிலும் நன்றாகவே ஸ்கோர் பண்ணுகிறார்கள். அதிலும் ஹரிதாவின் வில்லித்தனம் டபுள் ஓகே.

படத்தின் த்ரில்லிங் & க்ரைம் ஃபீலிங்கிற்கு நல்ல சப்போர்ட்டாக இருக்கிறார் மியூசிக் டைரக்டர் கெவின். ஊட்டியின் அழகை நான்கைந்து ட்ரோன் ஷாட்கள் மூலம் காட்டியிருக்கிறார் கேமராமேன் விஷால். முக்கால்வாசிப் படம் பங்களாவுக்குள்ளேயே நடப்பதால் அவருக்கு வேலை கம்மி.

க்ரைம் நாவல் கிங் ராஜேஷ்குமாரின் நாவல் படித்த ஃபீலிங்கில் இருக்கு இந்த ‘நேற்று இந்த நேரம்’`

 

மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.