பேச்சுரிமையை பறிப்பதா ? கொந்தளிக்கும் செவிலியர்கள் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

அரசியலமைப்பு சட்டம் குடிமக்களுக்கு வழங்கி இருக்கும் பேச்சுரிமையை பறிக்கும் விதமான பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்.

இந்த விவகாரம் தொடர்பாக,  தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் வெளியான கண்டன அறிக்கையில், “அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியிலோ, செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் போன்ற ஊடகங்களிலோ, மீம்ஸ் மூலமாகவோ, பொதுக்கூட்டங்களிலோ பாதகமாக விமர்சிக்கக் கூடாது என்றும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை  இயக்குனர் அவர்கள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக துறை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான கருத்துகளை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என்றும், அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என்றும், விதிகளுக்கு மாறாகச் செயல்படும் பட்சத்தில் சம்பந்தபட்டவர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. இது இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 19 குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளை பறிக்கும் செயலாகும்.

“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கெடுப்பார்  இலானும் கெடும்”. – குறள் 448

மத்திய அல்லது மாநில அரசுகள்,  மக்கள் விரோத, ஊழியர் விரோத செயல்களை கொள்கை என்ற அடிப்படையில்  அமல்படுத்தும்போதும், அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் போதும், அரசு நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பாத நிலையில், படித்து வேலை இன்றி இருக்கும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை குறைக்கும் போதும், நிரந்தர பணியிடங்களில் தற்காலிக ஒப்பந்த முறையில் ஊழியர்களை பணியமர்த்தும் போதும், மருத்துவத்துறையில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காத போதும், தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாத போதும், ஊழியர்களின் உழைப்பை சுரண்டும் போதும், செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அரசு நிறைவேற்றாத போதும், அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை வழங்காமல் இருக்கும் போதும் கட்டாயம் அதை எதிர்ப்பதும் அதை பொதுவெளியில் பேசுவதும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதும் அற போராட்டங்கள் வாயிலாக பொது வெளியில் ஊழியர்களும் ஊழியர் சங்கங்களும் கட்டாயம் விவாதிப்போம்.

அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் பேச்சுரிமையை பறிக்க பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு எந்த உரிமையும் இல்லை. அவரின் இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வன்மையான கண்டனங்களை தெரிவிக்கிறது.” என்பதாக தங்களது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

–              அங்குசம் செய்திப்பிரிவு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.